ஜயராம் ஸ்வாமி, நமஸ்காரம். அடியேன் நுனிபுல் மேய்ந்து பெற்ற சிற்றறிவு அறிந்ததை இங்கு பகிர்கிறேன். தவறு இருப்பின் சான்றோர்கள் திருத்தும்மாறு பிரார்திக்கிறேன்.
in brief:
- The words Bhagavan and Perumal both refer to Sriman Narayana. So, it is not clear to me what you mean by ‘Perumal is Bhagavan’s avataram’.
- When acharyas are considered Bhagavan’s avataram, it is in the sense they represent the கருணை quality of Perumal in full. It is with the clear understanding that they are elevated Jeevatmas who have been empowered with such quality; they are not mistaken to be Pramatma; i.e. they are not mistaken to be equal to Perumal.
in detail:
சரணாகதி கத்யம் முதலாவது சூர்ணிகை, பிராட்டியை சரணம் புகுவதாக அமைந்திருக்கிறது:
பகவந் நாராயண அபிமத அநுமத அநுரூப ஸ்வரூப ரூப குணவிபவ
ஐஸ்வர்ய சீலாத்ய அநவதிக அஸங்க்யேய கல்யாணகுணகணாம்….
என்று தொடங்குகிறது.
ஸ்ரீ செண்பகாப பதிப்பகம் வெளியிட்டுள்ள “மகான் இராமானுசர் அருளிய கத்யத்ரயம் – எளிய விளக்க உரை” நூலில், பெரியவாச்சான் பிள்ளையின் கத்யத்திரய வ்யாக்யானத்தை பின்பற்றி உரை அருளியுள்ள உரை ஆசிரியர் உ வே சடகோப முத்து ஸ்ரீநிவாசன் ஸ்வாமி, இங்கு ‘பகவந்’ என்ற சொல்லுக்கு அருளியுள்ள பத உரை வருமாறு:
<‘பகவந்’ என்ற சொல்லாலே ‘தீக்குணங்களற்ற’ ஆறு குணங்களை உடைமை காட்டப்படுகிறது; ‘பகவந்’ என்ற சொல் ஞானம் (முற்றறிவு), சக்தி (திறன்), பலம் (வலிமை), ஐச்வர்யம் (செல்வம், உடைமை), வீர்யம் (நிலைகுலையாமை), தேஜஸ் (ஒளியுடைமை) என்ற ஆறு பண்புகள் யாரிடம் நீங்காது நிலை பெற்றீடுக்குமோ அவரையே குறிக்கும். இந்நிலை பரப்பிரம்ம்மான நாராயணன் ஒருவனுக்கே முற்றிலும் பொருந்தும். வேறு சிலருக்கும், ‘பகவான் வ்யாஸர்’ என்பது போல், இவற்றில் ஓரோர் குணங்களில் சிறப்புடைமையால் வழங்கப்பட்டது; எனினும் இவ்விடத்தில் நாராயணனையே குறிக்கிறது>
இந்த நூலுக்கு ஆசியுரை அருளியுள்ள ஸ்ரீ உ வே அப்பு சடகோபாச்சாரியர் (ஆத்தான் மேலத் திருமாளிகை), “பகவான் என்ற சொல் ஆறு பண்புகளையுடைய இறைவனைக் குறிக்கும். அவையானவன: ஞானம், பலம், உக்தி, ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் என்பன. இந்த ஆறு பண்புகளை உடையவன் பாகவான் நாராயணன் …. ” என்று விளக்கியுள்ளார்.
மேலும், விஷ்ணு புராணத்தில் (வ்யாசரின் தந்தையான) பராசரர் ” ‘பகவான்’ என்ற சொல் ஐஸ்வர்யம், வீர்யம், புகழ், அழகு, ஞானம், மற்றும் வைராக்யம் ஆகிய ஆறு குணங்களை நீங்காது சாஷ்வதாமாக நிறையுடன் இருப்பவரை குறிக்கிறது” என்று விளக்குகிறாராம்.
இவ்வாறு ‘பகவான்’ என்ற சொல் ஸ்ரீமன் நாராயணனையே குறிப்பிடுவதாக யான் அறிகிறேன்.
அதே போல், “பெருமைகள் நிறைந்தவர் ‘பெருமான்’ என்று அகராதி விளக்குகிறது. ‘சிவ பெருமான்’, ‘முருக பெருமான்’ என்று அவர்கள்தம் குறிப்பிட்ட பெருமைகளை போற்றும் வண்ணம் அழைத்தாலும், பொதுவாக ‘பெருமாள்’ என்றால் அது அனைத்து பெருமைகளும் நிறைந்தவரான ஸ்ரீமன் நாராயணனையே குறிக்கிறது.
எனவே தாங்கள் பெருமாளையும் பகவானையும் ஸ்ரீமன் நாரயணனையும் வேறு படுத்திப்பார்ப்பது அடியேனுக்கு விளங்கவில்லை.
அடியேன் தாசன்.