Srimathe Ramanujaya Namaha,
Namaskaram All Swami’s,
Today Kali Yuga year 5122 “Kaarthigayil Kaarthigai” [Gregorian calendar 2020 November 29th] is Swami ThiruMangai Alwar ThiruNakshthiram and Swami Nampillai Acharyan ThiruNakshathiram. Lets chant Vaazhi Thirunaamams for our Athma Ujjivanam.
திருமங்கைஅழவார் வாழி திருநாமம்
கலந்ததிருக் கார்த்திைகயில் கார்த்திைக வந்தோன் வாழிேய,
காசினியில் குறையலூர்க் கவலோன் வாழிேய,
நலம் திகழ் ஆயிரத்து எண்பத்து நாலுரைத்தான் வாழிேய,
நாலைந்தும் ஆறைந்தும் நமக்குரைத்தான் வாழிேய,
இலங்கெழு கூற்றிருக்கை இருமடல் ஈந்தான் வாழிேய,
இம்மூன்றில் இருநூற்றி இருபத்தி ஈந்தான் வாழிேய,
வலந்திகழும் குமுதவல்லி மணவாளன் வாழிேய,
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழிேய.
நம்பிள்ளை வாழி திருநாமம்
தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே,
திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே,
தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே,
தாமரைக் கை இணையழகும் தடம் புயமும் வாழியே,
பாமருவும் தமிழ்வேதம் பயில் பவளம் வாழியே,
பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே,
நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே,
நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே,
காதலுடன் நஞ்சீயர் கழல்தொழுவோன் வாழியே,
கார்த்திகைக் கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே,
போதமுடன் ஆழ்வார் சொல் பொருளுரைப்போன் வாழியே,
பூதூரான் பாடியத்தைப் புகழுமவன் வாழியே,
மாதகவா லெவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே,
மதிளரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியே.
Adiyen (ElayaAlwar) Srinivasa (DhoddayacharyAr) Dasan.
Perumal-Thayar-Alwar-Emperumanaar-Jeeyar-Acharyan ThiruvAdigalaey Sharanam.