Vikram swamy, namakaram.
துரியோதனனும் சிசுபாலனும் கண்ணன் கடவுள் என உணராமல் அவதூறு பேசினர்.
பின் வந்த சிலர் வேதத்தை ஏற்றுகொள்ளவில்லை
பின் வந்த சிலர் கடவுள் உருவம் அற்றவர்; நாம் நம் சௌகர்யத்திற்காக உருவம் கற்பித்துக்கொண்டோம் என்றனர்.
முழுமுதற்கடவுள் யார் என்று சர்ச்சை எழுப்பி, உடையவருக்கு கூட இடைஞ்சல் செய்தனர்.
பின் வந்த சிலர் கோவில்களை சூரையாடினர்; பக்தர்களை கொடுமை படுத்தினர்; கொல்லவும் செய்தனர்.
கடந்த நூறாண்டுக்குள் பல பல கருத்து திரிபுகள் ஏற்பட்டுள்ளன.
சனாதன தர்மத்திற்கு வந்த சிக்கல்கள் எண்ணற்றவை. இவை ஓய கூடிய அலைகள் அல்ல. கலியுகம் முற்ற முற்ற அந்த அந்த கால சம்மூகத்தில் இருக்கும் ஜீவன்களுக்கேற்ப புது புது அலைகள் நம் தர்மத்தை மூடி மறைக்க முயலும்.
இச்சவால்கள் அனைத்தையும் தாண்டி, நம் ஆச்சார்யர்கள் நமக்கு இந்த தர்மத்தை பொக்கிஷமாக காத்து, இன்றும் நாம் இந்த படகில் ஏறி இறைவனடி பயனிக்க வழிவகுத்துளனர். முதலில் அவர்கள் திருவடியில் நமது பணிவான நமஸ்காரத்தை சமர்பிப்போம். அலைகள் ஆயிரம் ஆயிரம் வந்தாலும் கலியுகத்தின் முடிவு வரை இந்த படகு நிச்சயம் இருக்கும். நம் ஆச்சார்யர்கள் அதற்கு ஆதாரமாக இருப்பர்.
சமீபத்திய என் பணியில் சொன்னது போல, ஆச்சார்யர்கள் இந்த சனாதன தர்ம தோட்டம் செழித்திருக்க வேண்டிய நடவடிக்கைகளையும், பாதுகாப்பாக இருக்க வேண்டிய நடவடிக்கைகளையும் செய்துவருகின்றனர். நாம் அவர்களுக்கு உபகாரமாகவும், உபதிரவமல்லாமலும் இருப்பதே நம் நன்றி கடன்.
உபகாரமாக இருக்க, அவர்கள் சொல்லித்தருபவற்றை முறையாக நன்கு கற்று நம் நம்பிக்கைகளை ஆழபடுத்தி, நம் பண்புகளை செழுமைபடுத்தி வரலாம்.
உபத்திரவமாக இல்லாமல் இருக்க, நாம் ஒருவருக்கொருவர் வீண் சண்டைகள் இட்டுக்கொள்ளாமல் இருக்கலாம். ஒருகை வீசினாலும் நாம் மறுகையை வீசாமல் இருந்தால் சச்சரவுகளை தவிர்கலாம். அவ்வாறு அல்லாமல் “முதலில் அவனை நிறுத்த சொல்லு பின் நான் நிறுத்துகிறேன்” என்று இருந்தோமேயானால், நாம் ‘நல்லவரா இல்ல கெட்டவரா’ என்று நாமே அறியாத நாயகராகிவிடுவோம்.
ஆச்சார்யர் திருவடிகளே சரணம்.
அடியேன் தாசன்.