Srimathe Ramanujaya Namaha,
These flower showering scene are only in category 2) & 3) sponsored &/or made movies, not in Vyasa bharatham.
In Vyasa bharatham “Karna parva part 91” details about it.
Karna blames SrKrishna that HE didn’t follow dharma by instructing Arjuna to kill him when he was armless.
For that SriKrishna Scolds and Advices Karna by blasting him by reminding his adharma activities that he has done as below.
In Tamil அறம் means Dharma.
Few details in English, but full details in Tamil from Vyasa Bharatham as below.
SriKrishna scolds and advices to Karna:
1. When you and your group killed lonely Abhimanu, where was your அறம் (dharma)
2. When you instigated your friend duryodhana to order dushshasana to disrobe Draupadhi Infront of everyone, where was your அறம் (dharma),
3. When your friend burned down the wax palace when pandavas were residing where was your அறம் (dharma),
4. Etc…etc….almost SrKrishna points out karna’s more than 15 criminal offences…..
In Tamil full details
“தேரில் நின்றிருந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, அந்தக் கர்ணனிடம், “ஓ! ராதையின் மகனே {கர்ணா},
நீ அறத்தை நினைவு கூர்வது நற்பேறாலேயே. கீழ்த்தரமானவர்கள் {நீசர்கள்}, தாங்கள் துன்பத்தில் மூழ்கும்போது, தங்கள் தேவைக்குப் பழிப்பதும், தாங்கள் செய்யும் தீச்செயல்களின் போது பழிக்காததும் பொதுவாகக் காணப்படுகிறது.(1)
நீ, சுயோதனன், துச்சாசனன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர், ஒற்றையாடையில் இருந்த திரௌபதியைச் சபைக்கு மத்தியில் கொண்டு வரச் செய்தீர்கள். ஓ! கர்ணா, அச்சந்தர்ப்பத்தில் உனது அறம் வெளிப்படவில்லை. (2)
பகடையில் திறன்பெற்ற சகுனி, அஃதை {பகடையை} அறியாத குந்தியின் மகனான யுதிஷ்டிரரை சபையில் வெற்றிக் கொண்ட போது, இந்த உனது அறம் {தர்மம்} எங்கே சென்றது?(3)
உன் ஆலோசனைப்படி செயல்பட்ட குரு மன்னன் (துரியோதனன்), பாம்புகள் மற்றும் நஞ்சூட்டப்பட்ட உணவு ஆகியவற்றின் உதவியால் பீமரைப் பீடித்தபோது, உனது அறம் எங்கே சென்றது?(4)
காடுகளுக்குள் நாடுகடத்தப்பட்ட காலமும், {மறைந்து வாழ வேண்டிய} பதிமூன்றாவது {13} வருடமும் கழிந்த பிறகும், பாண்டவர்களுக்கு அவர்களது அரசை நீங்கள் கொடுக்காதபோது, உனது அறம் எங்கே சென்றது?(5)
உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களை எரித்துக் கொல்வதற்காக வாரணாவதத்தின் அரக்கு வீட்டுக்கு நீங்கள் நெருப்பிட்டீர்களே, ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அப்போது, உனது அறம் எங்கே சென்றது?(6)
மாதவிடாயின் காரணமாகக் குறைந்த உடையில் இருந்தவளும், துச்சாசனனின் விருப்பப்படிக் கீழ்ப்படிந்திருந்தவளுமான கிருஷ்ணை {திரௌபதி} சபைக்கு மத்தியில் நின்றிருந்தபோது அவளைக் கண்டு சிரித்தாயே, ஓ! கர்ணா, அப்போது இந்த உனது அறம் எங்கே சென்றது?(7)
பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் அத்துமீறி, அப்பாவியான கிருஷ்ணை {திரௌபதி} இழுக்கப்பட்டபோது, நீ தலையிடவில்லையே. ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அப்போது உனது அறம் எங்கே சென்றது?(8)
யானையின் நடை கொண்ட பெண்மணியாக மதிக்கப்பட்ட இளவரசி திரௌபதியிடம் நீ பேசியபோது, “ஓ! கிருஷ்ணையே, பாண்டவர்கள் தொலைந்தனர். அழிவில்லா நரகில் அவர்கள் மூழ்கிவிட்டனர். நீ வேறொரு கணவனைத் தேர்ந்தெடுப்பாயாக” என்றாயே. ஓ! கர்ணா, அப்போது உனது அறம் எங்கே சென்றது?(9)
அரசின் மீது பேராசை கொண்டும், காந்தாரர்களின் ஆட்சியாளனை {சகுனியை} நம்பியும் (பகடையாட) பாண்டவர்களை நீங்கள் அழைத்தீர்களே. அப்போது உனது அறம் எங்கே சென்றது?(10)
வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர், சிறுவனான அபிமன்யுவைப் போரில் சூழ்ந்துகொண்டு, அவனைக் கொன்ற போது, உனது அறம் எங்கே சென்றது?(11)
இப்போது நீ இருப்புக்கு அழைக்கும் இந்த அறம், அந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் எங்குமில்லையெனில், இப்போது அவ்வார்த்தையைச் சொல்லி உன் {வாயின்} மேலண்ணத்தை உலர்த்துவதால் யாது பயன்? ஓ! சூதா {கர்ணா}, நீயோ இப்போது அறத்தின் நடைமுறைகளைக் குறித்துப் பேசுகிறாய், ஆனாலும் நீ உயிரோடு தப்ப மாட்டாய்.(12)
புஷ்கரனால் வீழ்த்தப்பட்ட நளன், மீண்டும் தன் ஆற்றலால் அரசை மீட்டதைப் போல, ஆசையிலிருந்து விடுபட்ட பாண்டவர்களும், தங்கள் கரங்களின் ஆற்றலாலும், தங்கள் நண்பர்கள் அனைவரின் உதவியாலும் தங்கள் அரசை மீட்பார்கள்.(13)
தங்கள் பலமிக்க எதிரிகளைக் கொன்ற பிறகு, சோமகர்களுடன் சேர்ந்து தங்கள் அரசை அவர்கள் மீட்பார்கள். அறத்தால் எப்போதும் காக்கப்படும் இந்த மனிதர்களில் சிங்கங்களின் (பாண்டு மகன்களின்) கைகளால் தார்தராஷ்டிரர்கள் அழிவை அடைவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}[1].”(14)
These Nasthikas and Asthika-Nasthikas are the dangerous people who have made films projecting the Adharmik people as good people hiding all the True facts. Like செஞ்சோற்று கடன் தீர்க்க song in the movie is one of the biggest atrocity. It makes one think Karna was a great charitable person and people like N.Nurthy or anyone who have similar mindset get carried away easily, but it doesn’t last long. Truth always comes out
Adiyen (ElayaAlwar) Srinivasa (DhoddayacharyAr) Dasan