நீண்ட அப் பெரியவாய கண்கள், BhakthimAn has no logic, logical thinker has no bhakthi

Updated on August 10, 2019 in General
1 on August 10, 2019

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe SriVarAha MahAdEsikAya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam

Sri:

நீண்ட அப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதைமே செய்தனவே

வேளுக்குடி ஸ்வாமி அடிக்கடி சொல்லுவார் “பதட்ட படுபவன் உண்மையான பக்தன்” என்று

அவனை கண்ட பின் கையும் ஒட கூடாது காலும் ஓட கூடாது

மீறி ஓடினாள் அவனிடமே ஒட வேண்டும்

உடையவர் பிரம்ம சூத்திர பாஷயம் எழுதியவர் அரங்கனை கணட பின் கண் கலங்கி போனார்

வேளுக்குடி சாதிப்பார் “இவரா பிரம்ம சூத்திரம் உரை எழுதியவர்?” என்று தோணும்

விதுரர் செய்வது அறியாது திகைத்தார்

சுதாமா கண்ணனை பருகி அவலை மறந்தார் ஆனால் அவனை மறக்கவில்லை

பும்சாம் திருஷ்டி சித்த அபஹாரினம் என்பார்கள்

பார்த்தால் நம்மை திருடி விடுவான்

இதில் யார் பார்த்தால் என்பது அடியேனுக்கு சரியாக புலப்படவில்லை

அவன் அல்லவோ நம்மை பார்க்க வேண்டும்!

நம் பார்வையில் கோளாறு இருக்கலாம்

அதனால் தானோ என்னமோ உறங்காவல்லி தாசருக்கு தனி பார்வை தன்தார் போலும்

* அவனுக்கு எப்படி சளி பிடிக்கும்?
* அவனுக்கு எப்படி வியர்க்கும்?
* அவனுக்கு கால் வலிக்குமா?
* அவன் பேசுவானா?

இது நம் பார்வை

நடந்த கால்கள் நொந்தவோ? என்றார் ஆழ்வார்

கிடைந்தவாறு எழுந்து நின்று பேசு ஆழி கேசனே என்றார் ஆழ்வார்

அவன் எப்படி எழுவான் பேசுவான்?

இதோ கச்சி வரதன்
கிடந்தான்
எழுந்தான்

திருக்கச்சி நம்பிகள் மூலமாக நமக்கு கூறியது என்ன?

“என்னை உன்னில் ஒருவனாக பார்”

வசுதைவ குடும்பகம் என்பார்கள்

அவன் நம் குடும்பத்தில் ஒருவன்

அவனே குடும்பம்

ஊரிலே காணி இல்லை உறவு மற்றொருவர் இல்லை

என்று ஆழ்வர் சாதித்தார்

இந்த உலக அறிவு நம்மை மழுங்க அடித்து விடும்

அவனில் அறிவு மட்டுமே அவனியில் பெருமை சேர்க்கும்

பிழை பொறுத்து அருளவேண்டுன்
தோணியதை கூறினேன்

அடியேனுக்கு அடியேன்

 
  • Liked by
Reply

நாம் சம்சார சாகரத்தை கடக்க வல்ல தோனி அதை கூறினீர்!

  • Liked by
Reply
Cancel