ஸ்ரீ மதே வேதாந்த இராமானுஜ மஹா தேசிகாய நம:
பக்தன் கடவுளை சோதித்த கதை தெரியுமா?
திருக்குடந்தை ஆண்டவன் அருளிய ஸ்ரீமத் இராமாயண உபன்யாசம்
பொதுவாக கடவுள் தான் பக்தனை சொதிப்பான்
ஆனால் கடவுளை பக்தன் சோதித்த கதை இது
சுகிரீவனுக்கு பயம் தொற்றி கொண்டது . ஸ்ரீ ராமனை பார்த்து கேட்கிறார்
ஹே ராமா உன்னால் துந்துபி ராக்ஷஸனின் எலும்பை உதைக்க முடியுமா?
இராமன் தன் திருவடி விரலால் தூக்கி எறிந்து விட்டார்
இலக்குவன் தன் தலையில் அடித்து கொள்கிறான் . ஒரு குரங்கு போய் நம் அண்ணாவை சோதிக்கிறது என்று
நாம் ஸ்ரீமத் இராமாயணத்தை பல முறை படித்திருப்போம்
இந்த கோணத்தில் படித்ததுண்டா ?
நம் ஆசார்யன் மட்டுமே நமக்கு புரிய வைக்க முடியும்
சுகிரீவன் சந்தேக பட்டது சரியா ? என்றால் அவன் வாலி யின் (அதாவது இந்த சம்சாரதின்) வலிமையை (ஆழத்தை) கண்டு இருக்கிறான்
கடவுளை கண்டதில்லை . கடவுளின் வலிமையை கண்ட உடன் அவன் மீது நம்பிக்கை வந்து விடுகிறது
அவனுக்கே அடிமை செய்கிறான். இந்த பிறப்பு இறப்பை ஜெயித்து விடுகிறான்
அடியேன்