அடியேன் சிவராஜா, கர்ணனையொப்ப வள்ளலாக, வைணவ அடியார்களின் தாயகமா விளங்கிய சீரடி சாய்பாபாவை குருவாக வரித்து கொண்டவன். நாளும் நமசிவாய சொல்லும் சிவனடியன். வாழையடி வாழையாக வந்து உதிக்கும் குருமார்களிடம் பேதம் பார்க்காமல் சரணடைய வேண்டும் என்பதற்கிணங்க வாழ விரும்பும் அடியார்க்கு அடியேன். அதன் வழியே உடையவர் ஸ்ரீமத் ராமானுஜர் அடியவர்களுக்கும் அடியேன். பலருக்கும் பயனுற வாழ வேண்டும் என்ற மேன்மை மிகு எண்ணம் கொண்டவன் ஆனால் செயல்படும் வகையறியாதவன்.
செயல் தொடங்க நல்லோர், நடத்துவிப்போரிடம் சேர குருவினிடத்து சரணாகதியடைந்தவன். காலம் கருதி கலங்காது இருப்பவன். கீழ்க்கண்ட பாடலில் குறிப்பிட்டுள்ளவாறு ஆசிவதிக்கப்பட்டுள்ளவன். அதற்குகந்தவாறு இருக்க பிரயாசை படுபவன், தகுந்த வழிகாட்டுதல்களை நாடுபவன்.
முத்தரையும் பெத்தரையும் முகக் குறியான்
நகக்குறியான முழுதுந் தேறின
மெத்தனவா கியமொழியும் ஆனந்தப்
பரவசத்தான் மிகுந்த் சோர்வுஞ்
சித்தநிலை தெரியாத செல்வமுமா
யிருப்பர் நல்லோர் தீயோ ரெல்லாம்
இத்தகைமை யோர்களையும் இகழ்ந்து புகழ்ந்
தோர்க்குறவா யிருப்பர் தாமே.
போகாம லிருக்கவென்றா லசான் தன்னைப்
பொற்பூவைச் சாத்தியல்லோ காக்க வேண்டுமா?
வேகாத தலையல்லோ முன்னே கேளு;
விளம்பியபின் சாகாலை விரும்பிக் கேளு;
வாகாக வாதவித்தை கண்டார்க் கையா!
வலது முழந் தாழிலொரு மறுவைப் பாரு;
ஆகமுடன் கண்டமது சாய்வு காணும்
அப்பனே! இன்னமுரு வங்கங் கேளே;
கேளப்பா இடமுதுகில் மறுத்தான் காணும்;
கெடியான் இடக்கையில் சங்கு சகரம்
நாளப்பா இக்குறியை நன்றாய்ப் பாரு;
நாசியிட நாசியிலே மறுவைப் பாரு:
வேளப்பா இடமுதுகில் மறுவைப் பாரு:
வேதாந்த வாதியெனிக் குறியே பாரு:
ஆளப்பா இப்படியே அடையா ளங்கள்
ஆறையும் நீ கண்டவரை யடுத்துக் காணே
நெற்றியில் சூல ரேகையுமிருக்கும்.