Namaskaram to all Bhagavathas,
எனது மாணவர்களிடமிருந்தும் எனது குழந்தைகளிடமிருந்தும் நான் அவ்வப்போது எதிர் கொள்ளும் கேள்வி-கோயில்களில் பால் தயிர் இளநீர் போன்று அபிஷேகம் செய்யும் பொருட்களை ஏழைகளுக்கு தரலாமே என்பது.
சமீபத்தில் நான் படித்த திருமூலரின் திருமந்திரத்தில்
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பற்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பற்கு ஒன்று ஈயின்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.
என்று உள்ளது. அவர் ஒரு மகா சித்த புருஷர்.
ஆகவே அது ஆப்த வாக்கியம் தானே.
இந்த சந்தேகத்திற்கு குழந்தைகளுக்கு என்ன பதிலளிப்பது.யாராவது தெளிவு படுத்தவும்.வேளுக்குடி சுவாமிகளின் இதைப்பற்றிய என் பணி பதிவு இருந்தாலும் தயவு செய்து அனுப்பவும் .
அடியேன்
ஹேமா