ஸ்ரீ வேளுக்குடி சுவாமிக்கு அடியேனுடைய நமஸ்காரம்.
ஸ்ரீ வைஷ்ணவ அடியார்களுக்கும் அடியேனுடைய நமஸ்காரம்.
நம் கர்ம வினையாக நமக்கு ஒரு பிறவி கிடைக்கிறது. அதற்கு எற்றார்போல், நம்முடைய பக்தியும், ஞானமும் குறைந்த அளவே உள்ளது. நம் கர்மாவை பொருத்து, பகவான் கொடுத்த பிறவி, அதனால் அவரிடம் “அடியேனுக்கு பக்தி, ஞானம் இல்லை” என்று கூறுவதில் தவறில்லை. அது தான் உண்மை.
ஆனால், ஆச்சார்ய சம்மந்தமோ, நம்முடைய பக்தியையும், ஞானத்தையும் வளர்ப்பதற்கு என்றே இருப்பது. அதற்காக தான் அவரும் ப்ரயத்தன படுகிறார்.
ஆச்சார்ய சம்மந்தம் ஏற்பட்டு வெகு நாட்களுக்கு பிறகும், அவர் அளவிற்கு அடியேனுடைய பக்தியோ, ஞானமோ வளர்ந்துவிட போவதில்லை.
இந்த நிலைமையில், இப்போதும் “அடியேனுக்கு பக்தி, ஞானம் இல்லை” என்று அவரிடத்தில் கூறிக்கொள்வதால், இன்னார் சிஷ்யனாக இருந்தும் தனக்கு பக்தி-ஞானம் இலலை என்கிறானே என்று அது ஆச்சார்யனுக்கு இழுக்கோ, குற்றத்தையோ ஏற்படுத்தி விடுமா? ஆனால் அதுதானே உண்மை நிலை?
ஆச்சார்யனிடத்தில் “அடியேனுக்கு பக்தி, ஞானம் இல்லை” என்று கூறிக்கொள்ளலாமா?
அடியேன் இராமானுஜ தாஸன்.