ntgk swamy நமஸ்காரம்.
அடியேனின் புரிதலின் படி, ஆழ்வார்கள் ஒவ்வொரு பொருளிலும் இறைவனை கண்டதாக தெரிகிறது. இருட்டு கண்ணனின் நிறத்தை நினைவுபடுத்துவதால் இருட்டையும் விழுந்து வண்ங்குவராம்!!
பாரதியின் காக்கைச்சிறகினிலே நந்தலாலா பாடல் வரிகளும் இதுபோன்ற ஓர் எண்ண ஓட்டத்தையே காட்டுகின்றன.
வேறு ஒரு கோணத்திலும் சிந்திந்து பார்த்தேன். அடியேனின் ஆச்சார்யனின் படத்தை நமஸ்கரிக்கும் போது, ஆச்சார்யனை நமஸ்கரிகின்றேனா அல்லது printed paperஐ நமசரிக்கின்றேனா? அல்லது printed paperஐ ஆச்சார்யனாக ஏற்கிறேன் என்று கொள்ளலாம?
ஆச்சார்யனைதான் நமஸ்கரிக்கின்றேன்; printed papeரில் ஆச்சார்யனை காண்கிறேன். என் அச்சார்யன் தான் எனக்கு ஆச்சார்யர்; paper வெறும் சாதனமே.
இந்த தர்கத்தின் அடிப்படையில் அடியேன் புரிந்து கொள்வது, திருமழிசை ஆழ்வார், ஆண்டாள், மதுரகவி ஆழ்வார் தவிற மற்ற ஆழ்வார்களுக்கு சாக்ஷாத் பகவானே ஆச்சார்யனாக அருளி இருக்கிறார். அவர்கள் பறவைகளை தூதுவராக பார்த்திருக்கின்றனர். ஒரு நாட்டின் தூதுவரை அந்த நாட்டின் அடையாளமாகவே கொள்வது நம் வழக்கத்திலும் உள்ளதுதானே! அதுபோலவே அவர்களும் பகவானிடம் தூது செல்பவர்களை பகவானிடமிருந்து பிரித்து பார்க்கவில்லை என்று கொள்ளலாம்.
ஓருவேளை பகவானே பறவை உறுவில் வந்து அவர்களது பாடல்களை அனுபவித்டாரோ என்னவோ!!
அடியேன் தாசன்.
பி கு: (வேடிக்கையாக கொள்ளவும்). நாம் கூடதான் visa issue officeசின் காவலரை கூட அந்த நாட்டின் அதிபதியாகவே மரியாதை கொடுக்கிறோம்!!! நம் இலக்கின் மீது நமக்குள்ள ஆவல், அந்த இலக்கு சம்பந்தபட்ட ஒவ்வொரு பொருளுக்கும் நாம் கொடுக்கும் மரியாதையை நிர்ணயிக்கிறது!!