ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நான் விரும்புகிறபடி என் கண்முன்னே வந்து காட்சி தந்தருளத் திருவுள்ளமில்லையாகிலும் ‘-நீ பாவி, உனக்கு நான் காட்சிதரமாட்டேன்” என்கிறவொரு வார்த்தையையாவது என் கண் வட்டத்திலே வந்து சொல்லி போனாலாகாதோவென்கிறார்.
அவனோட்டைக் கலவியையே அல்லும் பகலும் ஆசைப்பட்டுக்கொண்டு கிடக்கிற ஆழ்வார் ‘பாவி ‘பாவி நீ யென்றொன்று சொல்லாய்’ என்கைக்குக் கருத்து யாதெனில்; ‘ஆழ்வீர்! நீர் பாவமே செய்து பாவியானவராகையாலே உம்மோடு கலப்பதற்கு எனக்கு விருப்பமில்லை! என்று சொல்லுகிற இந்த வார்த்தையாவது தமது முகத்தை நோக்கி அவன் சொல்லுவானாகில் அப்போதைய ஸேவையாவது கிடைக்குமே என்றும்இ கண்ணிலே தென்பட்டானாகில் பிறகு அவனை உபாயங்களால் கவர்ந்து கொள்ளலாமென்றும் நினைத்துச் சொன்னதத்தனை. ஆண்டாளும் “மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே” என்றது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
“அவச்ய மநு போக்வத்யம் க்ருதம் கர்ம சுபாசுபம்” என்றும் “ நாபுக்தம் க்ஷியதே கர்ம கல்பகோடிசதைரபி” என்றுமுள்ள பிரமாணங்களை நோக்கினால் தீவினைகள் அநுபவித்துத் தீர்க்கமுடியும் என்று ஏற்படுகிறது; அப்படியும் தீராத எத்தனை பாவங்களைப் பண்ணினேனோ! என்கிறார் முதலடியில். “மதியிலேன் வல்வினையே மாளாதோ” என்றதும் காண்க.
தாவியித்யாதி. * தன்னுருவமாரு மறியாமல் தானங்கோர் மன்னுங்குறளுருவில் மாணியாய் மாவலிதன் பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து போர்வேந்தர்மன்னை மனங்கொள்வஞ்சித்து நெஞ்சுருக்கி என்னுடைய பாதத்தால்; யானளப்ப மூவடிமண் மன்னா! தருகென்று வாய்திறப்ப, மற்றவனுமென்னால் தரப்பட்டதென்றலுமே, அத்துணைக் கண் மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த பொன்னார் கனைகழற்காலேழுலகும் போய்;க்கடந்த பரத்வத்தைச் சொல்லுவேன்; * உறியார்ந்த நறுணெ;ணெயொளியால் சென்று அங்குண்டானைக்கண்டு ஆய்ச்சியுரலோடார்க்கத் தறியார்ந்த கருங்களிறே போல நின் தடங்கண்கள் பனிமல்குந் தன்மையாகிய ஸௌலப்யத்தைப்பேசுவேன்; இங்ஙனே பரத்வ ஸௌப்யங்களை மாறிமாறிப்பேசிக் கண்ணுங் கண்ணீருமாய் நின்றக்கால் கண்ணெதிரே வந்து ஸேவைத்தந்தருளலாகாதோ? அநுக்ரஹம் செய்யத் திருவுள்ளமில்லையாகிலும் நிக்ரஹித்து விட்டேனென்றாவது கண்முன்னே வந்து நின்று சொல்லிப்போனாலாகாதோ? என்னை நீ பாக்கியான் என்றாலும் பாவியென்றாலும் அதில் எனக்கொரு நிர்ப்பந்தமில்லை; உன் திரு மிடற்றோசை கேட்கவேண்டுவதே எனக்கு அபேக்ஷிதம்; கண்ணுக்குத் தோற்றாதே நின்று மிடற்றோசையைக் காட்டிவிட்டாலும் த்ருப்தியடையேன்; என் கண்ணுக்கு காட்சி தந்து போ
Namaskaram
Dasan