அடியேன் ஸ்ரீனிவாச தாசன்🙏
நம் சுவாமியான வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிக்கும் அனைத்து தர்ம சந்தேகா கோஷ்டியாருக்கும் அடியேனுடைய ப்ரணாமங்கள்।
ஸ்வாமி.
“சூழ்ந்திருந்த ஏத்துவர் பல்லாண்டு, வைகுந்தம் எய்துவரே, வைகுந்தம் மண்ணி இருப்பாரே” என்று பெரியாழ்வாரும், “கோதை வாய்த்த தமிழ் வள்ளலார் குறைவின்றி வைகுண்டம் சேர்வரே ect,” என்று ஆண்டாளும் மற்றும் பலவிடங்களில் பல ஆழ்வார்கள் 10 பாசுரங்களையோ அல்லது அந்த பதிகத்தையோ சேவித்தாலே வைகுண்டம் செல்வர் என்றும்,
ஸ்தோத்திர ரத்னத்தில் ஆளவந்தார் அஞ்சலி செய்தாலே எல்லா பாவங்களும் கழிய பெற்று வைகுண்டம் செல்வர் என்றும், யதுகிரி தாயார் ” இவ்வளவு பெரிய அஞ்சலி செய்த இவனுக்கு வைகுண்டத்தை தான் கொடுக்க முடிகிறதே” என்று பரம கருணையாலே வெட்கப்பட்டு இருப்பாள் என்றும்,
இந்த நதியில் ஸ்நானம் செய்தால் மோக்ஷம், வைகுந்த வாசலில் நுழைந்து வந்தால் மோக்ஷம், இந்த திவ்ய தேசத்தை சேவித்தால் மோக்ஷம், “முத்தி தரு நகர்” போன்ற பலவிதமாக கேள்வி பட்டிருக்கிறோம்.
இவைகளை பார்க்கும்போது ஒருவனுக்கு ” எதற்கு ராமானுஜ சம்பந்தத்தை பெற வேண்டும், எதற்கு ஆச்சாரிய உபதேசத்தை கடைபிடிக்க வேண்டும், எதற்கு ஆசார அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டும்? அதுதான் மேல் சொன்னவயில் ஒன்றை செய்துவிட்டோமே?” என்று தோன்றுமே?
மோக்ஷம் அவ்வளவு எளிதானதா?
அபராதங்களை க்ஷமிக்கப் பிரார்த்திக்கிறேன் ஸ்வாமி🙏
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.