ஐயா வணக்கம். எங்கள் தந்தை இறந்து 30 நாட்கள் ஆகிவிட்டது. ஒரு வருடகாலத்திற்கு நாங்கள் செய்ய வேண்டியது மற்றும் செய்ய கூடாத செயல்களை (வீட்டில் குறிப்பாகச் சாமிக்கு நெய்வேதனம் செய்யலாமா, பதிகம் படிக்கலாமா, கோவிலுக்கு பூ போன்றவை கொடுக்கலாமா)தாங்களே எங்களுக்கு விளக்க வேண்டும். எங்களுக்கு வழிநடத்த மூத்தோர்கள் யாரும் கிடையாது. தாங்கள் கூறும் பதிலைக் பின்பற்றுவதற்கு சைவம், வைணவம் என்பதில் வேறுபாடு உண்டா அல்லது அனைவருக்கும் பொதுவானதா என்பதை தாங்களே எங்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி