ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகளுக்கு அடியேன் நமஸ்காரம்.
ஸ்ரீவைஷ்ணவ பாகவதாளுக்கும் அடியேன் நமஸ்காரம்.
கண்ணன் பகவத் கீதையில் “மாமேகம் சரணம் வ்ரஜ” – அதாவது, தன்னை தவிர உபாயமாக யாரையும் பற்றாதே என்று விதிக்கிறார்.
ஆனால் நம் சம்பரதாயத்தில், ஆச்சார்யா பக்தி, ஆச்சார்யா அபிமானம், இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆச்சார்யைண பற்றுவது தான் முக்கியம் என்று கூறுகிறோம்.
மோக்ஷத்துக்கு வழி தன்னை மட்டுமே உபாயமாக பற்ற வேண்டும் என்று கண்ணன் கூறுகிறார். ஆச்சார்யைண பற்றுவது தான் மோக்ஷத்துக்கு வழி என்று நம் சம்பரதாயத்தில் கூறப்படுகிறது.
அப்படி என்றால், ஆச்சார்யைண பற்றுவது, பகவானை தவிர வேறோரு உபாயம் ஆகாதா? அல்லது, ஆச்சார்யைண உபாயமாக பற்றுவதும் பகவானை உபாயமாக பற்றுவதும் ஒன்றா? இரண்டும் சமம் என்றால் அது கண்ணன் விதித்ததற்கு முரண்பாடாக இருக்காதா?
அடியேனுக்கு தெளிவு படுத்தவும். கேள்வியில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
அடியேன் இராமானுஜ தாஸன்.