Sri Ramanuja Munaye Namaha,
Sri Velukkudi Krishnan Swami Guruvae Namaha,
எனது அருமை சகோதரனே நண்பனே,
குருபரம்பரையில் இருந்து ஹாஸ்யமான ஒரு சம்பவம், ஆனால் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம்.
***********************
ஒருமுறை ஸ்வாமி கூரத்தாழ்வான் தனது சிறு பிராயத்தில், மற்று குழந்தைகளோடு விளையாடி கொண்டு இருந்த போது, மற்று குழந்தைகள் பௌத்த மதத்தில் இருக்கும் விஷயங்களை கூறி வந்தார்கள்.
இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த கூரத்தாழ்வானுக்கு பௌத்த மதத்தில் உள்ள விஷயங்களை தனது தந்தை கூரத்தாழ்வாரிடம் வினவினார்.
அதற்க்கு கூரத்தாழ்வார் தனது மகன் கூரத்தாழ்வானிடம் கூறியதாவது,
“நீ அங்கு போனதும் தப்பு, போனபின் அங்குள்ள வேத பாஹ்யர்கள் கூறும் விஷயத்தை இங்கு வந்து கூறியதும் தப்பு. சம்சாரத்தில் இருந்து உஜ்ஜிவனம் அடைவதற்கு நாம் தேர்ந்து எடுத்திருக்கும் வேத மார்கத்தில், ஸ்ரத்தையை வைத்து இருக்கும் ஆச்சார்யர்களை மட்டும் பின்பற்றுவோம். இல்லை என்றால், என்ன ஆகும் என்றால், அவர்களை ஸம்ஸாரம் என்கிற படு குழியில் இருந்து தூக்கி விட வந்த நாமும், நிஷ்டை இழந்து அவர்களுடன் நாமும் அதே படு குழியில் விழ வாய்ப்பு உள்ளது.”
********************
உடனே கூரத்தாழ்வான் ஸ்னானம் செய்து விட்டு தனது தந்தை கூரத்தாழ்வாரின் உபதேசத்தின் படி வாழ்ந்து, பினபு சிறந்த பாகவதோத்தமனாகவும் ஆச்சார்யராகவும் விளங்கினார் என்பது நாம் அறியும் செய்தி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமியின் உபன்யாசத்தில் இருந்து.
Adiyen Sri Velukkudi Krishna Dasan,
Uyya Oraey Vazhi UdayavAr ThiruvAdi,
Sarvam SriKrishna Kudumbham.