ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகளுக்கு அடியேன் நமஸ்காரம்.
ஸ்ரீ வைஷ்ணவ பாகவதாளுக்கும் அடியேன் நமஸ்காரம்.
சூரியன் சுற்றுவதில்லை, பூமி தான் சூரியனை சுற்றி வருகிறது என்று வானவியல் சாஸ்திரத்தில் படிக்கிறோம். ஆனால், வேதத்தில், சூரிய பகவான் ஏழு குதிரைகள் கொண்ட ஒற்றை சக்கர தேரில் சுற்றி வருவதாகவும், அந்த தேரின் தேரோட்டி தான் அருணன் என்றும், அதனால் தான் அருணோதயம் என்ற பேரும் உள்ளது என்று சொல்லப்படுகிறதே? இந்த வேறுபாட்டை எப்படி சமன் செய்து புரிந்து கொள்வது?
அடியேன் இராமானுஜ தாஸன்.