தர்பணத்திற்கு எள் ஏன்?

Updated on January 18, 2021 in Daily rituals and practice
5 on January 16, 2021

ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகளுக்கு அடியேன் நமஸ்காரம்.
ஸ்ரீ வைஷ்ணவ பாகவதாளுக்கும் அடியேன் நமஸ்காரம்.

எத்தனையோ தானியங்கள் இருக்க, தர்பணத்திற்கு எள்ளை மட்டும் ஏன் பயன்படுத்துகிறோம்?

அடியேன் இராமானுஜ தாஸன்.

 
  • Liked by
Reply
4 on January 17, 2021

ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ:

 

நமஸ்காரம் என்டிசிகெ பாகவதா,

 

எள் என்னும் கருமை நிற விதை திருமாலின் வியர்வைத் துளியிலிருந்து வெளிவந்த பரிசுத்தமான தானியம் என்பது வேதக்கூற்று. 

 

எள்ளுடன் தண்ணீரும் கலந்து அளிக்கப்படும் தர்ப்பணம் பித்ருக்களுக்கு அமிர்தமாகக் கருதப்படுகிறது, ஏன் என்றால் அந்த எள் திருமாலின் வியர்வை ஆனபடியால், அது பித்ருகளுக்கு திருமால் பிரசாதமாக அமைகிறது.

 

பித்ரு லோகம் நரக லோகத்திற்க்கு அருகில் உள்ளது. பித்ருக்களின் உலகிற்குத் தலைவனான எமதர்மனின் சம்யமினீ என்ற அரசாங்கம் தெற்கில் உள்ளதால் பித்ரு பூஜை தென்முகமாகச் செய்யப்படுகிறது. 

 

அந்த பித்ருக்கள் முன்பு பூமியில் மனிதர்களாக வாழ்ந்த காலத்தில், திருமாலின் திருவடியில் ஷரணாகதி செய்யாத காரணத்தால், நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி (திருமாலின் பிரசாதம்), அவர்கள் செய்த பாவங்களில்  இருந்தெல்லாம் விடுவித்து. அவர்களும் ஒரு காலத்தில் மனிதர்களாக மறுபடி பிறந்து ஷரணாகதி செய்து, திருமாலின் திருவடியை நோக்கி செல்வதற்கு உதவும் என்பது நம்பிக்கை.

 

நாமும் முன்பு பித்ருவாக இருந்து இப்போது மனித உடல் கிடைத்துள்ளது. இராமானுஜர் கருணையால் மறுபிறவி இல்லை. 

பித்ருகளுக்கும் இராமானுஜர் கடாக்ஷம் கிட்டட்டும் என்று திருமாலின் திருவடியில் பிரார்த்திப்போம்.

 

 

டியேன் (இளயாழவார்) ஸ்ரீநிவாச (தொட்டயாசார்யார்) தாசன்.

on January 17, 2021

Beautifull explanation Elayalwar Swami!

on January 17, 2021

Adiyen Charamavathi Dasan Badri Swami.
Adiyen still owe devareer about BhagavAn Shristi/Panchikaram flow chart as discussed in other thread. Adiyen don’t have MS office, so Adiyen is thinking how to do it, but Adiyen have plan to do it and Adiyen remember to post it with Acharya ThiruvAdi Bhalam and Velukkudi Sri Krishnan Swami’s Aasirvadham.

on January 17, 2021

@elayaalwar swami, thank you for the explanation. You have been answering so many questions and very nice to be associated with Bagavathas like you.

on January 18, 2021

Adiyen Charamavathi Dasan ntgk Swami.
Sarvam KKC Sholinghur DhoddayacharyAr-VedantacharyAr-KumaraSingaracharyAr- Velukkudi Swamigal ThiruvAdigalil Samarpanam.

Show more replies
  • Liked by
Reply
Cancel