ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ
சுவாமிகள் திருவடிகளே சரணம்
அடியேன் முன்னோர்ககளைத் தொடர்ந்து , சனிக்கிழமை தோறும் திருவேங்கடமுடையானுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்தி அது நிரம்பிய பின்னர் திருமலை சென்று சமர்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம்.
சென்ற ஆண்டு மே மாதம் நிரம்பிய உண்டியலை கொரோனா காரணத்தினால் திருமலை சென்று சமர்ப்பிக்க முடியவில்லை.
இந்த நிலையில் , சென்ற ஆண்டு ஆனி மாதம் (July, 2020), அடியேனின் சித்தப்பா பரமபதித்து விட்டார். அவரை தொடர்ந்து , அடியேனின் சின்ன தாத்தா (தந்தையின் சித்தப்பா ) தை மாதம் (January 2021) பரமபதித்து விட்டார் .
தற்பொழுது , அடியேனின் சித்தப்பாவின் ஒரு வருட காரியங்கள் அனைத்தும் முடிவடைந்து விட்டது .
அடியேனின் சந்தேகம்.
தர்ம சாஸ்திரத்தின்படி , முதல் தீட்டு முடியும் முன்னால் இரண்டாவது தீட்டு வந்தால் , முதல் தீட்டு முடியும்போது இரண்டாவது தீட்டும் முடிந்து விடும்.
மேற்கண்ட கூற்றினை அடிப்படையாகக் கொண்டு , அடியேனின் சித்தப்பாவுடைய காரியம் முடிந்துவிட்டதால் , சின்ன தாத்தா தீட்டும் முதிந்துவிட்டதாக கொண்டு, அடியேனின் உண்டியலை திருமலை சென்று சமர்ப்பிக்கலாமா அல்லது சின்ன தாத்தாவின் அனைத்து காரியங்களும் முடியும் வரை காத்திருக்க வேண்டுமா?
தங்களின் பதில் அடியேனுக்கும், அடியேன் போன்று உள்ளவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
அடியேன் ராமானுஜ தாசன்