நமஸ்காரம் ஐயா. எனக்கு ஒரு சந்தேகம் . உங்களின் பதில்தான் எனக்கு தெளிவு பெற செய்யும் என்று நம்புகிறேன். எனக்கு 13 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தார். ( 2015இல் மூளையில் கட்டி வந்தது டெஸ்ட் செய்து பார்த்ததில் brain கேன்சர் என்று சொல்லிவிட்டார்கள். நான்கு வருட போராட்டத்திற்கு பின்பு போன வருடம் தை மாதத்தில் இறைவன் அவளை அழைத்துக் கொண்டார்). இப்பொழுது ஒரு வருடம் ஆகிவிட்டது. வருகின்ற புதன்கிழமை அவள் இங்கிருந்து கிளம்பிய திதி நாள் வருகிறது அன்று அவளுக்கு எப்படி சாமி கும்பிடுவது. சிலரிடம் கேட்டால் ஆன்மாவாக இவ்வுலகில் பிறப்பு எடுத்துவிட்டால் வருடா வருடம் திதி கொடுத்து தான் ஆக வேண்டும் என்கிறார்கள். ஒரு சில பேர் அந்தக்குழந்தை ,பெரிய பெண் ஆகாததால் இறைவனடி சேர்ந்து இருப்பாள் திதி கொடுக்க கூடாது(பிண்டம் வைத்து) என்கிறார்கள். ஒரு சில பேர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றுங்கள் என்கிறார்கள். எந்த முறையில் அவளை வணங்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை நீங்கள் பதில் கூறுங்கள். அப்படியே திதி கொடுப்பதாக இருந்தால் சொந்த வீட்டில் தான் கொடுக்க வேண்டுமா இல்லை ஆற்றிலோ குளத்தங்கரை யிலோ கொடுக்க வேண்டுமா. (அவள் போன துக்கத்தில் நாங்கள் இருந்த வீட்டைவிட்டு வாடகை வீட்டில் குடியேறி விட்டோம் அதனால் கேட்கின்றோம்.)உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா.
இந்த ஒரு வருட காலமாக தங்களின் பேச்சை கேட்டு தான் ஆன்மா என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டு தினமும் யூடியூப் வழியாக உங்களின் உபன்யாசங்கள் எல்லாம் கேட்டு கொண்டு எதோ பொழுதை கழித்து கொண்டு இருக்கிறோம்.
இப்படிக்கு
நன்றியுடன்
கணேசன்