நம்ம குழல் ஊதும் கண்ணனுக்கு ஒரு ஃபிலையிங் கிஸ் குடுக்கலாமே

Updated on June 17, 2020 in General

பெரியோர்களே தாய்மார்களே, உங்க எல்லாருக்கும் அண்ணனுடைய வணக்கம்,

நம்ம கடவுள் கண்ணனுக்கு ஒரு பாடல் கிடைத்தது,

………….பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ ! நந்த குமாரன்
விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ !

அனைவரும் கூடி அவன் புகழ் பாடி
நிர்மல யமுனா நதியினில் ஆடி
வனம் வனம் திரிந்து வரதனைத் தேடி
அனுதினம் அமுதனை தரிசனம் செய்த (அந்த)

மானினம் நாணிடும் மங்கையரோடு
மாதவத்தோரும் மயங்கிடுமாறு
தேனினும் இனித்திடும் தீங்குழல் ஊதி
மானிடர் தேவரின் மேல் என செய்தான்

ஏகானனம் அருங்கானனம் சென்று ஆநிரை கன்று
கருணை மாமுகில் மேய்த்திட – அன்று
புனித மேனியில் புழுதியும் கண்டு
வானோர் பூமியை விழைந்ததும் உண்டு
போதமிலா ஒரு பேதை மீரா
ப்ரபு கிரிதாரி இதய சஞ்சாரி
வேதமும் வேதியர் விரிஞ்சனும் தேடும்
பாத மலர்கள் நோக நடந்த (அந்த)………..

அண்ணன் நான் சொல்றத கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வரும்.

 
  • Liked by
Reply

https://youtu.be/EyIDUWoj5H4

 

எப்போ இந்த மாதிரி மீரா (1945) பக்தி படங்கள் பாடல்கள் மீண்டும் வரும்?

  • Liked by
Reply
Cancel