அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
ஆடி மகம் இன்று. நம் தெய்வமான ஸ்ரீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி அவதரித்த பன்ய திருநன்நாள்.
இந்த இருள் சூழ்ந்த சம்சார துக்க சாகரத்தில், திக்கு திசை அறியாமல், அதர்மத்தையே விடாமல் செய்துஙொண்டு, ஏன் வாழ்கிறேன் என்று தெரியாமலே வீழ்ந்து, இந்த சம்சாரத்திலே நித்யனாய் இருந்திருக்க வேண்டிய என்னை, எந்த ஒரு காரணமின்றி, ஒருவிதமான தகுதியைக்கூட பார்க்காமல், ஒருவிதமான கைமாறையும் எதிர்பார்க்காமல், “நம்மைக்காட்டிலும்(படிப்பு, ஞானம் மற்றுமுள்ளவற்றில்)இவன் எந்த எல்லைகோடிலோ உள்ளான்” என்று தொலைவும் பாராமல், “இவனை நாம் திருத்துவோம்” என்று கங்கணம் கட்டிக் கொண்டாப்போலே, திருத்தி பணிகொண்டு, எனையே மீட்டெடுத்த பால வாக் அம்ருதவர்ஷியான, ஸ்ரீராமானுஜ சேவா ஸ்ரீயான, செல்லில் செல்வரான, ஸ்ரீவைஷ்ணவ பேரொளியன வேளுக்குடி ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்வாமிக்கு பலகோடி பல்லாண்டுகள்.
ஸ்வாமியின் உபன்யாசம் இல்லையேல், இன்று நான் திவ்யப்ரபந்தம் என்றால் என்ன?, ராமானுஜர் யார்?, ஆசார்யன் என்றால் யார்?, பகவான் என்றால் யார்? என்று சிறிதளவும்கூட கேள்விப்படாமல் வீழ்ந்திருப்பேன். ஸ்வாமியின் உபன்யாசமே அடியேனுக்கு ஞானத்தை தந்து, நல்வாழ்வான உயர்ந்ததான அசார்ய சம்மந்தத்தை அடைவித்து, அவ்வாசார்யனுக்கே உரியவனாய் அடியேனை மாற்றியது…
ஸ்வாமியின் பெருமையை சிறிதளவு செல்லாம் என்று எடுத்த இந்த முயற்சி, கடலில் ஒருதுளியளவும் சொல்ல இயலாமல் போனதால் இந்த தோள்வியை ஒப்புக்கொள்கிறேன்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு க்ருஷ்ணன் ஸ்வாமி வாழி. க்ருஷ்ணன் ஸ்வாமி திருவடிகள் வாழி.