ஸ்வாமி, பணிவான நமஸ்காரங்கள்
அடியேன் கோடான கோடி பிறவிகளாய் சுமந்து வரும் தீய பண்புகளை அடையாளம் கண்டு களைய கீதை 14, 17, 18 அத்தியாங்களில் முக்குணங்களின் பண்புளின் அறிகுறிகளையும், 16 அத்தியாத்தில் தேவ- மற்றும் அசுர பண்புகளின் அறிகுறிகளையும், ‘நோய் பரிசோதனை அட்டவனையாக’ பயன்படுத்திவருகிறேன். அடுத்தவர்களிடம் இருக்கும் நோயின் அளவை அவர்களது பேச்சின் தன்மையை வைத்து கணிக்கலாம் என்பது அடியேனின் புரிதல்.
இன்று (என் பணி 2147) தாங்கள் “வெளியேயும் தெரியாது; தனக்காவவும் புரியாது; தொற்றாதென்று சொல்ல முடியாது; பிறர் ஒதுங்கி இருப்பதற்கும் வழி விடாது. … எனவே உடல்ரீதியான தொற்றை விட பண்பு ரீதியான தொற்றில் இன்னும் எச்சரிக்கையாக இருப்போம்” என்று கூறியது அடியேனுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
அடியோங்கள் தத்தம் துர்குணங்களிலிருந்து விடுபட செய்ய வேண்டியது என்ன? அடுத்தவர்ளிடம் இருந்து தொற்று ஏற்படாமல் இருக்க எடுக்க வேண்டிய எச்சரிக்கை என்ன. தயவு செய்து விரிவாக விளக்கி வழி நடத்தவும். நன்றிகள் பல.
அடியேன் தாசன்.