ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகளுக்கு அடியேன் நமஸ்காரம்.
ஸ்ரீ வைஷ்ணவ பாகவதாளுக்கும் அடியேன் நமஸ்காரம்.
இந்த கேள்வி அடியேன் மனைவி கேட்டது.
தற்போது நாங்கள் இருவரும் சம்பாதித்து வருகிறோம். பகவான் எங்களுக்கு பணத்திற்கு எந்த குறையும் வைக்கவில்லை. அதே சமயம், இருவரும் வேலை பார்ப்பதால் உணவு பழக்கமோ, வீட்டை கவனித்து கொள்ளும் விஷயத்திலோ சரியாக அக்கறை காட்ட முடியவில்லை. வீட்டில் இருக்கும் பெருமாளுக்கு கூட சரியாக உணவு சமர்ப்பிக்க முடியவில்லை. ஒரு வருமானமே போதும் என்கிற நிலையில் இருக்கிறோம்.
இந்த நிலையில் என் மனைவி கேட்டது ‐ ஒரு “house-wife”- ஆக வீட்டில் பக்தியும், கைங்ர்யமும், மங்களமும் பெருக்குவதற்கு தான் என்னென்ன வகையில் contribute செய்ய முடியும்?
இந்த கேள்வி எனக்கு மகிழ்ச்சியும், ஆச்சர்யத்தையும் கொடுத்தது. அடியேனுக்கு தெரிந்த வரை அவளிடம் கூறியது ‐ பெருமாளுக்கு முழுமையாக தளிகை சமர்ப்பிக்கலாம், அதனால் நாம் சாத்வீக உணவை சாப்பிடும் பாக்யம் கிடைக்கும்.
இதை தவிர இன்னும் பல்வேறு விஷயங்கள் இருக்கிறது, அதை ஸ்ரீ வைஷ்ணவ பாகவதர்கள் எங்களுக்கு தெளிவு படுத்தி அருள வேண்டுகிறேன்.
அடியேன் இராமானுஜ தாஸன்.