ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
தேவரீருடய திருவடிகளுக்கு பல்லாண்டு. அடியேனுக்கு ஒரு சந்தேகம்.
இராமபிரான் பரதனிடம் “காடேற வராமல் நந்திக்ராமத்தினின்று வசிப்பாய்” என்று கட்டளையிட்டதும் அப்படியே செய்தபடியால் நமது சம்ப்ரதாயத்தில் பரதனை ஒப்பற்ற பரதந்த்ரன் என்று கொண்டாடுகிறோம். ஆனால் அதே பரதனிடம் இரான் “ராஜ்யத்தை நீ அரசனாய் இருந்து ஆள்வாய்!” என்று உறைத்ததற்கு பரதன் ஏன் மறுத்தான்? இதுவும் இராமனின் கட்டளையன்றோ? பரதன் ஆள்வது இராமனுக்கும் உகத்தியாகவன்றோ இருந்திருக்கும்?
அபராதங்களை க்ஷமித்தருள ப்ரார்த்திக்கிறேன்.
அடியேன் ஸ்ரீநிவாச தாசன்.