பார்வேட்டை உத்ஸவம் – தாத்பரியம் யாது?

Updated on May 11, 2022 in General
2 on May 10, 2022

அடியேன் ஸ்ரீநிவாச தாசன்

ஸ்வாமி, இதர தேவதா ஆலயங்களில் மிருக பலி கொடுக்கிறார்கள். அந்த தேவதைகளின் குணத்திற்க்கேற்ப அந்த க்ரியை நடைபெறுகிறது. நமது எம்பெருமானோ பரம சாத்விக தெய்வம். பரம சாத்விக பதார்த்தங்களாலும் சாத்விக அனுஷ்டானங்களால் மட்டுமே ஆராதிக்கத்தக்கவன். இவ்வாறு இருக்க கனு நாள் அன்று பார்வேட்டை உத்ஸவம் பெருமாளுக்கு நடைபெறுகிறது. இந்த உத்ஸவத்தில் பெருமாள் மிருகங்களை வேடையாடுவதுபோல் வருகிறது ‌. இந்த உத்ஸவத்தின் தாத்பரியத்தை தேவரீர் சாதித்தருள வேண்டும் ‌. பலி கொடுப்பதற்கும் இந்த உத்ஸவத்திற்க்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று தேவரீர் சாதித்தருள வேண்டும்.

அடியேன் ஸ்ரீநிவாச தாசன்

 
  • Liked by
Reply

எந்தப் பெருமாள் கோவிலிலாவது பரி வேட்டை உத்ஸவத்தில் பலி கொடுக்கிறார்களா ?

on May 11, 2022

அடியேன் ஸ்வாமி. தேவரீர் சொல்வதுபோல் எந்த கோயிலிலும் பலி கொடுப்பதில்லை. மேலே அடியேன் இவ்விஷயத்தை குறிப்பிடாமல் இருந்து அடியேன் செய்த மிகப்பெரிய தவறாகும். பொறுத்தருள வேண்டுகிறேன். உத்ஸவத்தில் வாழை மரத்தையோ பொம்மையையோ வைத்து வேட்டையாடுவது போல் உள்ளது. ஆனால் இந்த உத்ஸவத்தின் தாத்பர்யம் யாது என்பது அடியேனின் சந்தேகம். வாழை மரத்தையோ பொம்மையையோ வேட்டையாடுவதாக வருவதன் உள்ளர்த்தம் “மிருக வேட்டை/பலி” என்பதா அல்லது வேறு காரணமா என்பதை சாதித்தருள வேண்டுகிறேன்

தாசன்

Show more replies
  • Liked by
Reply
Cancel