ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீ வராஹ மஹாதேசிகாய நம:
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி திருவடிகளே சரணம்
ராமன் பரஸுராமன் பற்றி நாம் அறிவோம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
குழந்தை துருவன் தாயில் சிறந்தது ஒரு கோவிலும் இல்லை
நாரதரே வந்தாலும் நாரணன் மீது பற்று கொள்ள அன்னை சொல்வதையே கடை பிடித்தான்
நாரதர் குழந்தையை சோதனை செய்தார் ஆனால் குருவை பற்றி குருவையே மிஞிவிட்டான் அச்சிறுவன்
சொல்ல படும் விஷயம்
திண்ணம் நாரணமே
பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி – பாடல் 1
கண்ணன் கழல் இணை
நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்,
திண்ணம் நாரணமே.
கண்ணனின் கழலணிந்த திருவடிகளைப் பெறவேண்டும் என்ற மனம் உள்ளவர்களே, நீங்கள் எண்ணவேண்டிய திருநாமம், ‘நாரணன்’ என்ற திருநாமம்தான், இது உறுதி.
அடியேனுக்கு அடியேன்