பெரியோர்களே தாய்மார்களே, உங்க எல்லாருக்கும் அண்ணனுடைய வணக்கம்,
ஒரு முட்டாள், காய்கறி வாங்க சந்தைக்கு போனான். புடலங்காய் வாங்கியவன் காய்கறி கடைக்காரனை கேட்டான், ஏன் வளைந்து இருக்குது என்று?. கடைக்காரன் இன்னொரு புத்திசாலியான முட்டாள் . அவன் சொன்னான் “முதலிலேயே கல்லை கட்டியிருந்தால் அது நேராக வளந்து இருக்கும், அப்படி செய்யாமல் விட்டதால் தான் இப்படி வளைந்து விட்டது” என்றான்.
இப்படி பொது அறிவை வளத்து கொண்ட அந்த முட்டாள், தன் வூட்டுக்கு போனவுடன், வூட்டில் இருந்த குட்டி நாயின் வால் வளைந்து இருப்பதை பாத்தான். உடனே அவன் மூளையில் மின்னல் வெட்டியது. சமீபத்தில் பெத்த அறிவை சரியாக உபோயோகப்படுத்தி கொள்ள நினைத்த அந்த முட்டாள், உடனடியாக ஒரு கல்லை எடுத்து நாய் வாலில் கட்டி விட்டான். என்ன ஆச்சு?. நாய் பாடு திண்ண்டாட்டமாகி விட்டது, அது பரிதாமாக கத்தி அமர்க்களம் செய்ய ஆரம்பித்து விட்டது. நாயின் கூக்குரலை சகித்து கொள்ள முடியாமல் வந்து பாத்த அக்கம்பக்கத்து வூட்டாருக்கு அந்த முட்டாளை நாயின் வாலில் இருந்து கல்லை கழட்ட வைப்பதுக்குள் பெரும்பாடாகி விட்டது.
இந்த முட்டாளின் செய்கை பைத்தியக்காரத்தனமாகவும் கேலிக்குரியதாகவும் தோணலாம், ஆனால் நானும் நீயும் நாமும் அப்படி எத்தனையோ முட்டாள் தனங்களை நம் வாழ்க்கையில் செஞ்சிட்டு தானே இருக்கோம்.
நாய் வாலைப் போல் நம்மால மாத்த முடியாத எத்தனையோ விஷயங்கள் நமக்குள் இருக்கத்தான் செய்யும். அது மாதிரி வெளி உலகத்திலே மாத்த முடியாத மனுஷன்களும் இருக்க தான் இருப்பாங்க. சரி செய்து தான் தீருவேன் என்று மல்லுக்கட்டி நின்னா, இந்த விஷயத்துல நாம் ஜெயிக்க போவதில்லை. வாழ் நாள் முழுவதும் முயற்சித்தாலும் இயற்க்கையை மாத்த முடியாது.
ஏன் மாத்த மூடியாது? அப்படீன்னு கேட்டு மத்தவங்களை தன் வழிக்கு கொண்டு வர, படாதபாடுபடும் பலரை நான் பாத்து இருக்கேன். இந்த விஷயத்துல தேவையில்லாத பிடிவாதத்தை சுயநலத்தை த்ருப்திப்படுத்துவதை விட வேற ஒரு பலனும் இருப்பதாக எனக்கு தோணவில்லை. நாய் வாலில் கல்லை கட்டிய முட்டாளை போல இவங்களும் அடுத்தவங்க மீது திணிக்கும் அந்த கட்டாயம், அடுத்தவங்களுக்கும் பிராண சங்கடம்.
அதுனால நாய் வாலை நிமுத்தமுடியுமா என்பதை கேட்பதை விட்டு, நாய் வாலை நிமுத்துவது தேவையா அவசியமான்னு மொதல்ல யோசிக்கணும். அது தான் புத்திசாலித்தனம். இதை சாதித்து கிடைக்க போகிற பலன் என்னான்னு கணக்கு போட்டு பாத்தா அது விவேகம்.
எனவே, இப்படி நாய் வாலை நிமுத்துவது போல ஏதாவது ஒரு விஷயத்தை, நாம் நம் வாழ்க்கையில் செஞ்சுட்டு இருக்கோமான்னு ஒவொருவரும் நமக்குள் கேப்பது சூப்பரா உத்தமமா இருக்கும் தானே. அப்படி இருந்துச்சுன்னா அதை உடனடியாக விட்டு விடுவது நல்லது தானே. நாம செய்யவேண்டிய உருப்படியான நல்ல விஷயங்கள் (எல்லா சாதி சனத்துக்கு, கோயில் குளத்துக்கு, நல்லவங்களுக்கு) நிறையவே இருக்கு தானே, நம்ம கவனத்தே அந்த பக்கம் திருப்பலாமா.
நமக்குள் இருக்கும், மேல் ஜாதி கீழ் ஜாதி சாதி சனம், அறிவாளி முட்டாள், உள்ளூர்க்காரன் வெளிஊர்க்காரன், உள்நாடு வெளிநாடு, இந்த மதம் அந்த மதம், வெள்ள தோல் கருப்பு தோல், போன்ற எல்லாம் வளைந்த நாய் வால் மாதிரி கடவுளின் படைப்பு, மாத்த முடியாது. அப்போ என்னத்த பாக்கறது? நாய் வால் வளைந்து இருந்தாலும் “அன்பு இருக்கிற நாயா இல்ல கடிக்கற நாயான்னு மட்டும் தான் பாக்கணும்”, ஏன்னா வளைந்த நாய் வால் கடவுளின் பொதுவான படைப்பு நிமுத்தமுடியாது நிமுத்தவும் கூடாது, ஏன்னா அந்த நாய்க்கு வலிக்கும் போது கடவுளுக்கு கண்ணீர் வரும்.
அண்ணன் தத்வம் எப்படி? சும்மா சூப்பரா இருக்குதுல்ல,
அண்ணன் நான் சொல்றத கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வரும்.