தர்மத்தை நிலை நாட்டும் பொழுது பிறருக்கு இனியவனாக இருப்பது முக்கியமா?
இல்லை தர்மத்தை நிலை naattuvadhu முக்கியமா?From vikraminside
இனிமையானவனான் இருந்து தர்மத்தை நிலை நாட்டுவது முக்கியம்.
சத்வமாக பேசுவது எப்படி என்று பகவத் கீதை 17.15 விளக்குகிறது:
“பிறர் மனம் புண்படும்படி பேசாமையும், இனிமையாக பேசுதலும், வேதம் வேதாந்தங்களை ஓதுதலும் வாக்கினால் செய்யப்படும் தவமாகும்”
எனவே இடம் பொருள் ஏவல் அறிந்து, தன் நிலை மற்றும் கேட்பவரின் நிலை அறிந்து பேச வேண்டும். கேட்பவரின் உண்மை நலனை உண்மையிலேயே நாம் நாடவேண்டும்; அவர் மீது நமக்கு உண்மையான அன்பும் அக்கறையும் இருத்தல் வேண்டும். அப்படி நம் மனநிலை இருக்கையில் எப்படி எடுத்துறைத்தால் எடுபடுமோ, எப்படி எடுத்துறைத்தால் உண்மையான நன்மை ஏற்படுமோ அப்படி எடுத்துறைக்க வேண்டும்.
உண்மையான அன்புடன் கோவமான வார்த்தைகள் வந்தாலும் அதுவும் இனிமையே (தாயின் சொல்லைப்போல); கோவமான மனநிலையுடன் அன்பாக பேசுவது போல் பாவனை செய்தால் அது இனிமை அல்ல.
விதுரர் பல முறை ஒரு மந்திரியின் நிலையில் இருந்து எவ்வளவு எடுத்துறைக்க முடியுமோ அவ்வளவு மட்டுமே செய்தார். சகுனி மற்றும் துரியோதனாதிகள் மாண்ட பின்னரே, அவர்கள் ஆதிகத்திலிருந்து திருதிராஷ்ரர் விடுபட்ட பின்னரே, தன் சொல் எடுபடும் என உணர்ந்து, அந்த தருணத்தில் திருதிராஷ்ரர் மட்டும் தனிமையில் இருக்கையில் தன்னுடைய அன்பான அறிவிறையை விரிவாக போதித்தார்.
இதை பின்பற்றுகையில், சில இடங்களில் நாம் அமைதி காப்பது சிறப்பு.
1. நம்மை விட பெரியவர்கள், அவர்தம் செயல்கள் நமக்கு விளங்கவில்லை என்றால், அமைதியாக இருக்க வேண்டும். நாம் அறிந்த அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு அவர்களிடம் குற்றம் எடுத்துறைக்க முயல்வது முட்டாள்தனம். அவர்கள் நம்மை விட பெரியவர்; நன்கு கற்றறிந்தவர். சரி எது தவறு எது என்று பாகுபடுத்தி பார்பதில் நம்மை விட சிறந்தவர்.
ஒருக்கால் அவர் தவறே செய்தாலும், அதை சரி செய்வது அவரை காட்டிலும் பெரியவர் செய்யவேண்டியது. நாம் அல்ல.
2. ஒருவர் தவறே செய்தாலும், அதை இந்த தருணத்தில் எடுத்துறைபதால் எந்த பயனும் இருக்க போவதிலை என்றால், அமைதி காத்து நாம் அங்கிருந்து விளகுவது சிறப்பு. உதாரணமாக, வழிப்போக்கர் ஒருவர் மது குடிக்கிறார் என்றால் அவருக்கு அறிவுறை கூறி எந்த பயனும் இல்லை. மாறாக, ஒரு நன்பன் மது குடிக்கிறான் என்றால், அவனிடம் சரியான முறையில் சரியான நேரத்தில் எடுத்துறைப்பது நம் கடமை.
நன்றி
அடியேன் தாசன்.