ஸ்ரீநிவாச தீஷிதர் – false info??

Updated on June 13, 2020 in Daily rituals and practice
2 on June 12, 2020

Swami,
Adiyen Ramanuja Dasan.

Today came across a post in Facebook which was written by someone but shared by a Vaishnavite.

The Article mentions about Srinivasa Dikshitar, a vaishnava Acharya of Vaiganasa Sampradaya who lived in 14th Century. As per this post Dikshitar has said that Pancharatra Agamam and Samashrayanam are against Vaideeham.

While I ignored that as absolutely false, the post mentions some verses from Padma Purana and Koorma Poorna.

While I am sure the article is misleading one, Requesting Swami to clarify on the real meaning behind the verses quoted from Padma and Koorma Purana. Copying the entire post for reference.

Post From Facebook as per below.

வைஷ்ணவ ஆசார்யரே கண்டித்த தப்த முத்ரா
தாரணம்!

பதினான்காம் நூற்றாண்டை சார்ந்த ஸ்ரீநிவாச தீக்ஷிதர் என்ற வைகானச வைஷ்ணவ ஆசார்யர், தான் இயற்றிய “தசவிதஹேது நிரூபணம்” என்ற நூலில் பாஞ்சராத்ர ஆகமங்களும் தப்த முத்ராங்கனமும்( சரீரத்தில் சங்கம்,சக்ரம் முதலிய முத்திரைகளை பொரித்து கொள்வது) முழுக்க முழுக்க அவைதீகம் என்று பல ஸாஸ்த்ர பிரமாணங்களை காட்டி நிலைநாட்டியுள்ளார்.அவைகளை பார்ப்போம்.

வைஷ்ணவ புராணமான பத்ம புராணத்திலிருந்து மேற்கோள்காட்டுகிறார்:

யதா ஸ்மாஷணஜம் காஷ்டம் அநர்ஹம் ஸர்வ கர்மசு |
ததா சக்ராங்கிதோ விப்ரஸ் சர்வகர்மாசு கர்ஹித: ||

எவ்வாறு சுடுகாட்டில் வளர்ந்த மரத்தின் கட்டை அனைத்து வைதீக கர்மங்களுக்கும் விலக்காயிற்றோ அதேபோல் சக்ரத்தை உடம்பிலே பொரித்து கொண்ட ப்ராஹ்மணன் அனைத்து கர்மங்களுக்கும் யோக்யதையற்றவன்.

மோஹாத் வா லோபதோ வாபி விப்ரஸ் சக்ராங்கிதோ யதி |
அநர்ஹஸ் ஸ ஹி விக்ஞேய: ஸ்ரௌத ஸ்மார்த்தேஷு கர்மசு ||

மோஹத்தினாலோ லோபத்தினாலோ உடம்பிலே சக்ரத்தை பொரித்து கொள்ளும் ப்ராஹ்மணன்,வேதம் மற்றும் ஸ்ம்ருதிகள் விதித்த கர்மங்களுக்கு யோக்யதையற்றவனாகின்றான்.

விஷ்ணு புராணம் சங்க சக்ராத்யங்கனம் செய்பவர்களுக்கு த்விஜத்தன்மையே கிடையாது என்று கூறுவதை மேற்கோள்காட்டுகிறார்:

சங்கசக்ராத்யங்கனம் ச கீதந்ருத்தாதிகம் ததா |
ஏகஜாதேர் அயம் தர்ம: ந ஜாது ஸ்யாத் த்விஜன்மனாம் ||

ஸ்ரீநிவாசமகிந் பாஞ்சராத்ர ஆகமங்கள் மோகனூல்(மோஹன சாஸ்த்ரம்)என்று பல ப்ரமாணங்களைக்கொண்டு ஸ்தாபிக்கிறார்:

ஏவம் சன்சோதிதோ ருத்ரோ மாதவேனா முராரினா |
சகார மோஹசாஸ்த்ராணி கேஸவோ’பி சிவேரித: ||
காபாலம் யாமலம் வாமம் பைரவம் பூர்வபஸ்ச்சிமம் |
பாஞ்சராத்ரம் பாசுபதம் ததான்யானிசஹஸ்ரஸ:||

சிவனும் கேசவனும்,கபாலம்,யாமலம்,வாமம்,பைரவம்,பாஞ்சராத்ரம் பாசுபதம் போன்ற
மோஹன சாஸ்திரங்களை படைத்தார்கள் .

– கூர்ம புராணம் (16.119 )

ததீசி,கௌதமர் முதலிய ரிஷிகளின் சாபத்தால்
பீடிக்கபட்டவர்கள் தான்
பஞ்சராத்ரத்தை பின்பற்றுகிறார்கள் என்று கூர்ம புராணம் கூறியதை மேற்கோள்காட்டுகிறார் :ததீசீனா கௌதமேன யே சப்தா ப்ராஹ்மநாதமா- ஸ்கந்த புராணம்

பவுத்தம்,காபலிகம்,பாசுபதம் போல பாஞ்சராத்ரமும் பாஷான்டா மதம் என்று வசிஷ்ட தர்ம சாஸ்திரத்திலிருந்து மேற்கோள்காட்டுகிறார்:

புத்தசாவக நிரகந்தா: பாஞ்சராத்ரவிதோ ஜனா:
காபாலிக: பாசுபத: பாஷான்டா யே ச தத்விதா:

வேதத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்கே/ வேதமார்கத்திற்கு புறம்பானவர்களுக்கே “ஸாத்வதம்” என்று அழைக்கப்படும் பாஞ்சராத்ர தந்திரங்கள் உருவாக்கப்பட்டன:

பாஞ்சராத்ரம் பாகவதம் தந்த்ரம் சாத்வ நாமகம்|
வேதப்ரஷ்டான் சமுத்திஷ்ய கமலாபதிர் அப்ரவீத் ||

கலியில் ஸ்வதர்மத்தை அனுஷ்டிப்பதில் ருச்சியில்லாமல் ப்ராஹ்மணர்கள் பாஞ்சராத்ரத்தை பின்பற்றுவார்கள் :

ஸ்வதர்மே ருசிதா நாஸ்தி ப்ராஹ்மணானாம் கலௌ யுகே ||
பாஞ்சராத்ரம் ப்ரஸம்சந்தி கேசித் பாகவதம் முநே||

இப்படி வைஷ்ணவ ஆசார்யர்களும் வைஷ்ணவ புராணங்களும் ஸ்ம்ருதிகளும் அவைதீகம் என்று கூறுகின்ற பாஞ்சராத்ர ஆகமங்களையும் தப்த முத்ராதாரணத்தையும் பின்பற்றறுபவர்கள் சைவர்களை அவைதீகர் என்று சொல்வது வேடிக்கையே.

Enf of Facebook post.

Adiyen Dasan (Varadharajan)

 
  • Liked by
Reply

Pancharatra Agama and sankha chakra dharanam have been hailed as parama pramanam by all our Sri Vaishnavite Acharyas. Let us not go beyond them.

Dhanyosmi Swamy! Fortunately I scrolled down to see your reply before reading the article pasted from Facebook. Now I don’t have to read it at all! 

adiyen dasan.

Show more replies
  • Liked by
Reply
Cancel