எந்த பெருமாள் தங்களுக்குள்ளிருந்து இப்படி சரியான நேரத்தில் சரியான கேள்விகளை தோன்றுவிக்கிறாரோ, அவரேதான் அடியேனுக்கு பதில் இருக்கும் இடத்தை தெரியப்படுத்துகிறார்.
सर्वस्य चाहं हृदि संनिविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च ।
वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् ॥१५- १५॥
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி³ ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச |
வேதை³ஸ்²ச ஸர்வைரஹமேவ வேத்³யோ வேதா³ந்தக்ருத்³வேத³விதே³வ சாஹம் || 15- 15||
ஸர்வஸ்ய ஹ்ருதி³ அஹம் ஸந்நிவிஷ்ட: = எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
ச மத்த: = மேலும் என்னிடம் இருந்து தான்
ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச = நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன
ஸர்வை: வேதை³: ச வேத்³ய: அஹம் ஏவ = எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் நான்
வேதா³ந்தக்ருத் வேத³வித் ச அஹம் ஏவ = வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே
எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் யான்; வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.
தாங்களே தேடி கண்டுபிடித்திருந்தால், கேள்வியாக கேட்டிருக்க மாட்டீர்; எங்களுக்கு ஆடிப்பெருக்கை பற்றி மீண்டும் ஸ்வாமியிடமிருந்து கேட்கும் வாய்ப்பு கிட்டியிருக்காது! அடியோன்கள் நன்மைக்கே பெருமாள் தங்களுக்கு நேரடியாக பதில் தராமல் கேள்வியாக கேட்க வைத்தார்.
அடியேன் தாசன்.