கர்ம வினைகளுக்கேற்ப ஆன்மா ஒவ்வொன்றும் ஒரு உடல் அழிந்து வேறு உடல் ஏற்கிறது எனில் மக்கள் தொகை ஒரே அளவாகத் தானே இருக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டே இருப்பது ஏன்?
Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
ஆத்மா எண்ணில் அடங்காதது. அவை அனைத்தும் பெருமாளின் திருமேனி என்று வேதம் சொல்கிறது.
கடலில் அதே அளவு தண்ணீர் தானே தெரிகிறது. பின் ஏன் சில வருடம் அதிக மழை சில வருடம் குறைந்த மழை?
ஆத்மா மீதம் பித்ரு லோகத்திலும், சுவர்கத்திலம், பாதாளத்திலும் எம பட்டினத்திலும் (நரகம்) அனுபவித்து கொண்டு வருகிறது.
ஸ்வரகத்தில் இருந்து கீழே தள்ளி விடுவார்கள். அப்போது தலை கீழாக பூமியில் விழுவோம் அதனால் தான் பிறக்கும் பொழுது தலை முதலில் வருகிறது என்று கூறுவது உண்டு. கால் முதலில் வந்தால் ஆபத்து என்று பொருள்.
இது போன்ற தகவல்கள் உபன்யாசத்தின் கேட்டவை. அதனால் ஜன தொகை சுனாமியில் குறைவதும் பிறப்பால் கூடுவதும் அவன் விளையாட்டில் இதுவும் ஒன்று. நேரம் கூடி வரும் பொழுது எதுவும் நடக்கும்.
அடியேனுக்கு அடியேன்
Sri Ramanuja Munaye Namaha,
Sri Velukkudi Krishnan Swami Guruvae Namaha,
அடியேன் பாகவத.
ஸ்வாமியின் உபன்யாசத்தில் இருந்து மேல்கொள் காட்டி நன்று சொன்னீர்கள் . சற்று விரிவாக்கம், ஸ்வாமி அனுகிரஹத்தால் அடியேனுக்கு புரிந்ததை கூறுகிறேன்.
*************
ஐந்து (5) ஆஹூத்தி பற்றி உபநிஷத் கூறுகிறது. ஐந்து நிலைகளில் ஆஹூத்தி கொடுக்க படுகிறது. ஐந்தாவது ஆஹுத்தியில் தான் மனித பிறவி கிடைக்கிறது .
1. முதல் ஆஹூத்தி :
ஜீவாத்மாவை ஸ்வர்கத்தில் இருந்து மேகம் பனிமூட்டத்தில் போட படுகிறது கோடான கோடி ஜனம் ஆத்ம இங்கு கிடக்கும் சரீரம் கிடைக்காமல் .
2. இரண்டாவது ஆஹூத்தி :
கோடான கோடி ஆத்மாக்கள் மேகத்தில் இருக்கும். அதில் ஒரு சில ஆத்மாக்கள் மட்டும் மழைத்துளி மூலம் பூமியில் விழுகிறது .
3. மூன்றாவது ஆஹூத்தி :
அதில் ஒரு சில ஆத்மாக்கள் மட்டும் தான் நெல், பயிறு, தான்யம் போன்ற உணவு வகைக்குள் செல்லும் .
4. நான்காவது ஆஹூத்தி
அதில் இது சில தான்யம் பயிறு மட்டும் தான் ஒரு ஆணின் உடலுக்குள் செல்லும் .
5. ஐந்தாவது ஆஹூத்தி :
அதில் ஒரே ஒரு ஆத்ம மட்டும் தான் ஆண் பெண் திருமணத்துக்கு பிறகு குழந்தை பெரும் பாக்கியம் இருந்தால் அந்த ஆத்மாவுக்கு மனித பிறவி கிடைக்கிறது
**********
அப்படி கஷ்டப்பட்டு கிடைக்கும் மனித பிறவியை அந்த ஆத்ம வீண் அடித்தால் மீண்டும் இதே சம்ஹாரம் என்னும் பிறவி கடலில் சுழல்கிறது.
ஆனால் அந்த ஆத்மாவுக்கு ஒரு நல்ல புத்தி தோன்றி ஆச்சார்யா ஸமாச்ரயணம் செய்து ஸ்வாமி ராமானுஜர் சம்பந்தம் பெற்றால், அந்த ஆத்ம சம்சாரம் என்னும் பிறவி கடலில் இருந்து நிரந்தரமாக விடு பட்டு மோக்ஷம் ஸ்ரீவைகுண்டம் என்னும் பரமபதத்தை அடைந்து பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு கைங்கர்யம் செய்து ஆனந்தமாய் இருக்கிறது.
எல்லாருக்கும் ஸ்வாமி ராமானுஜர் சம்பந்தம் ஸ்ரீவேலுக்குடி ஸ்வாமி அனுகிரஹத்தால் கிடைக்கட்டும் என்று பிரார்த்திப்போம் .
Adiyen Sri Velukkudi Krishna Dasan,
Uyya Oraey Vazhi UdayavAr ThiruvAdi,
Sarvam SriKrishna Kudumbham.
Namaskaram
Srimate Ramnanujaye namaha
To add to the explanation above. Souls migrate from human to animal bodies and vice versa as well. Also souls migrate to upper and lower worlds. So our population calculated by census does not mean soul population is increasing.
Adiyen
Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
3. மூன்றாவது ஆஹூத்தி :
அதில் ஒரு சில ஆத்மாக்கள் மட்டும் தான் நெல், பயிறு, தான்யம் போன்ற உணவு வகைக்குள் செல்லும் .
அதனால் தான் “அன்னம் ப்ரஹ்மம்” என்று கூறுவது உண்டு.
பெருமாளுக்கு வைகுண்டத்தில் சாம வேதம் பிடிக்குமாம்.
சாம வேதத்தில் ” அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னாதோ ” என்று வரும்
அதாவது பெருமாளும் ஆத்மாவும் பரஸ்பரம் அனுபவித்து கொள்ளவார்கள்
நான் உனக்கு உணவு நீ எனக்கு உணவு
நான் உனக்கு அன்னம் நீ எனக்கு அன்னம்
நான் உன்னை சாப்பிடுகிறேன் நீ என்னை சாப்பிடு
அடியேனுக்கு அடியேன்