Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam.
Swamy,.
What is the difference between Rakshasas and AsurAs?
Dasanudasan
Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam.
Swamy,.
What is the difference between Rakshasas and AsurAs?
Dasanudasan
असुरः : सुराणां विरोधी राक्षसः : अस्मात् रक्षन्ति அசுரர் அசுரர்கள் தேவர்களின் விரோதிகள் ஆவர். அவர்கள் அசுர குணங்கள் படைத்தவராக விளங்குவர். கண்ணன் கூறுகையில் அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீஸ்வரம் அபரஸ்பரஸம்பூதம் கிமந்யத்காமஹைதுகம் [ ஜகத் அஸத்யம் அப்ரதிஷ்டம்-இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும், அநீஸ்வரம்-கடவுளற்றதென்றும், அபரஸ்பரஸம்பூதம்-சொல்லுகிறார்கள், காமஹைதுகம்-காமத்தை ஏதுவாக உடையது, அந்யத் கிம் தே ஆஹூ:-இது தவிர என்ன அவர்கள் (அசுர குணம் படைத்தவர்) கூறுவர்? ] அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும் கடவுளற்றதென்றும், சொல்லுகிறார்கள். இது தொடர்பின்றி பிறந்ததென்றும், வெறுமே காமத்தை ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள். சத்தியமும், தர்மமும், ஈசுவரனும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவைகள். அவைகளின் ஆதிக்கமின்றி உலகம் நடவாது என்பது ஆஸ்திகர் கொள்கை. லோகாயதர்கள் அம்மூன்றையும் மறுக்கின்றனர். காமத்தின் பயனாக வந்துள்ள உலக வாழ்க்கையை வேண்டியவாறு கையாண்டு களித்திரு என்பது அவர்களது கொள்கை. சமயானுஷ்டானத்தில் வெறுப்புக்கொள்வதிலிருந்து ஒருவனை லௌகிகனென நன்கறியலாம். பகவந் நாமத்தை உச்சரிக்கவோ பக்தியூட்டும் பாடலைக் கேட்கவோ அவனுக்குப் பிரியம் இருப்பதில்லை. பிறர் அவ்வாறு செய்வதையும் அவன் தடுப்பான். தோத்திரம் செய்வதை நிந்திப்பவனும், தர்ம ஸ்தாபனங்களையும் தர்மாத்மாக்களையும் ஏளனம் பண்ணுபவனும் சரியான லௌகிகனாவான். ராக்ஷஸர் ராக்ஷஸர்களோ அவர்களின் உருவத்திலும் செயல்களிலும் வேறுபட்டு விளங்குகின்றனர். பொதுவாக பூதாகரமான உடலுடனும், அசிங்கமாகவும், கோரமாகவும் இருப்பது உண்டு. மாமிசத்தை விரும்புவதால் அவர்களிடத்திலிருந்து மற்ற பிறப்புகளைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட அஃதாவது அவர்களிடம் இருந்து ரட்சிக்க வேண்ட ராக்ஷஸர்கள் என பெயர் காரணம் உருவாயிற்று. இந்த வலைதளத்தில் கூறப்பட்டிருக்கும் பதில்களைப் பார்த்தும் மேலும் தெரிந்துகொள்ளலாம். https://www.quora.com/Is-there-any-difference-between-Asuras-and-Rakshasas-per-Hindu-mythology-Was-Ravana-an-Asura-or-a-Rakshasa அடியேன் ராமானுஜ தாசன்
असुरः : सुराणां विरोधी
राक्षसः : अस्मात् रक्षन्ति
அசுரர்
அசுரர்கள் தேவர்களின் விரோதிகள் ஆவர். அவர்கள் அசுர குணங்கள் படைத்தவராக விளங்குவர். கண்ணன் கூறுகையில்
அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீஸ்வரம் அபரஸ்பரஸம்பூதம் கிமந்யத்காமஹைதுகம்
[ ஜகத் அஸத்யம் அப்ரதிஷ்டம்-இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும், அநீஸ்வரம்-கடவுளற்றதென்றும், அபரஸ்பரஸம்பூதம்-சொல்லுகிறார்கள், காமஹைதுகம்-காமத்தை ஏதுவாக உடையது, அந்யத் கிம் தே ஆஹூ:-இது தவிர என்ன அவர்கள் (அசுர குணம் படைத்தவர்) கூறுவர்? ]
அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும் கடவுளற்றதென்றும், சொல்லுகிறார்கள். இது தொடர்பின்றி பிறந்ததென்றும், வெறுமே காமத்தை ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள். சத்தியமும், தர்மமும், ஈசுவரனும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவைகள். அவைகளின் ஆதிக்கமின்றி உலகம் நடவாது என்பது ஆஸ்திகர் கொள்கை. லோகாயதர்கள் அம்மூன்றையும் மறுக்கின்றனர். காமத்தின் பயனாக வந்துள்ள உலக வாழ்க்கையை வேண்டியவாறு கையாண்டு களித்திரு என்பது அவர்களது கொள்கை. சமயானுஷ்டானத்தில் வெறுப்புக்கொள்வதிலிருந்து ஒருவனை லௌகிகனென நன்கறியலாம். பகவந் நாமத்தை உச்சரிக்கவோ பக்தியூட்டும் பாடலைக் கேட்கவோ அவனுக்குப் பிரியம் இருப்பதில்லை. பிறர் அவ்வாறு செய்வதையும் அவன் தடுப்பான். தோத்திரம் செய்வதை நிந்திப்பவனும், தர்ம ஸ்தாபனங்களையும் தர்மாத்மாக்களையும் ஏளனம் பண்ணுபவனும் சரியான லௌகிகனாவான்.
ராக்ஷஸர்
ராக்ஷஸர்களோ அவர்களின் உருவத்திலும் செயல்களிலும் வேறுபட்டு விளங்குகின்றனர். பொதுவாக பூதாகரமான உடலுடனும், அசிங்கமாகவும், கோரமாகவும் இருப்பது உண்டு. மாமிசத்தை விரும்புவதால் அவர்களிடத்திலிருந்து மற்ற பிறப்புகளைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட அஃதாவது அவர்களிடம் இருந்து ரட்சிக்க வேண்ட ராக்ஷஸர்கள் என பெயர் காரணம் உருவாயிற்று.
இந்த வலைதளத்தில் கூறப்பட்டிருக்கும் பதில்களைப் பார்த்தும் மேலும் தெரிந்துகொள்ளலாம்.
Asura vs Rakshasa – Quora
அடியேன் ராமானுஜ தாசன்