ஸ்வாமியின் திருவடிகளில் தண்டவத் ப்ரணாமங்கள்.
இராமாயண உபந்யாஸம் கேட்கும் ஸந்தர்பத்தில் அடியேனுக்கு ஒரு சிறிய ஸந்தேஹம் உண்டானது. அதை ஸ்வாமி தீர்த்து வைக்க ப்ரார்த்தனை.
*தசரதனின் இரு நிலைப்பாடு*
மஹரிஷி விஸ்வாமித்திரருக்கு எதைக் கேட்டாலும் தருவதாக வாக்களித்த தசரதன் ராமனைக் கேட்டவுடன் தரமுடியாது என்று நேரடியாகவே மறுத்து விட்டார். நீ வாக்கு தவறியவனாகி விடுவாய் என்பதற்கும் கவலைப்படவில்லை. (பின்னர் வசிஷ்டர் சொல்லி ராமனைத் தந்தது வேறு விஷயம்) வசிஷ்டர் தலையிடாவிட்டால் தசரதன் ராமனை விஸ்வாமித்ரருடன் அனுப்பி இருக்கவே மாட்டார்.
ஆனால் கைகேயியிடம் இந்த நிலைப்பாட்டை அவர் எடுக்கவில்லை. பல வாதங்கள் கூறினாலும் இறுதியில் (வேறு எவரின் தலையீடு இல்லாமல்) கைகேயியின் வரத்திற்கு இசைந்தாரே.
விஸ்வாமித்ரருக்கு தந்த வாக்கையே மீறத் துணிந்தவர் கைகேயிக்கு தந்த வாக்கை மீற யோசிப்பானென்?
கேள்வி தவறாக இருப்பின் க்ஷமிக்கவும்.
தந்யோஸ்மி
அடியேன் தாஸன்,
வேங்கடாசலம்