வேளுக்குடி ஸ்வாமி திருவடிகளுக்கு அடியேனின் பணிவான நமஸ்காரங்கள்.
ஸ்வாமி, பெரும் குழப்பமாக உள்ளது. What to do or not to do that is the question!
अहिंसा सत्यमस्तेयं शौचम् इन्द्रियनिग्रहः । एतं सामासिकं धर्मं चातुर्वर्ण्येऽब्रवीन्मनुः அஹிம்சை, சத்யம், பிறர் பொருள் கவராமை, சுத்தம், புலன் அடக்கம் இவை அனைவருக்கும் பொதுவான சாமான்ய தர்மம் ஆயிற்றே. அப்படி இருக்க, தினமும் மிருகங்களை கொல்வதில் ஈடுபடுவது எவ்வாறு கர்ம யோகமாகும்? ஒரு சத்திரியர் தர்மம் சார்ந்த போரிலோ, அல்லது பெரும் குற்றம் செய்தவரை தண்டிக்கையிலோ கொலையில் ஈடுபடலாம் என்று அறிகிறோம். அது போல கசாபு தொழிலில் ஈடுபடுபவருக்கு சில வரையறை இருக்கின்றனவா?
இன்றைய சூழலில் ஒரு மென்பொருள் வல்லுநர் வலை சார்ந்த சூதாட்டம், விபசாரம், automation of salughter houses போன்றவைக்கு மென்பொருள் எழுதுவது தர்மமாகுமா? அல்லது அது போன்ற வாய்ப்புகளை ஏற்காமல் விலகிடவேண்டுமா? “என் தொழில் மென்பொருள் எழுதுவது; மற்றவர் கேட்பதை செய்வது என் தொழில், என் தர்மம்” என்று தப்பித்து கொள்வது சரியா?
பெருமாளும், தைவீக குணங்களை பட்டியல் இடையில் “அஹிம்சா சத்யம் அக்ரோதஸ் த்யாக ஷாந்திர் அபைஸுனம்” என்று அஹிம்சையை குறிப்பிடிகிறாரே. மேலும், எந்த எந்த குணங்கள் நிறைந்த பக்தன் தனக்கு பிரியமானவன் என்று பட்டியலிடையில், “அத்வேஷ்டா சர்வ பூதானாம் மைத்ர கருண ஏவ ச” என்று தானே ஆரம்பிக்கிறார்! அப்படி இருக்க, ஒரு பக்தன் எவ்வாறு கொலை செயல்களில் தினமும் ஈடுபட முடியும்?
புராணங்களில் மற்றும் சரித்திர கதைகளில் சந்தர்ப்ப வசத்தால் விபசாரத்தில் சிக்கிய பெண்கள், அந்நிலையிலும் ஆழ்ந்த பக்தராக திகழ்ந்தனர் என்று கேள்வி பட்டுள்ளோம். அதை மனம் சற்றும் சலனமில்லாமல் ஏற்கிறது. ஆனால் ஒருவர் கசாபு தொழிலில் ஈடுபட்டார் என்று கேள்விபடுகையில் மனம் ஏற்க மறுக்கிறது!
எண்னில் அடங்கா கேள்விகள்; என்னில் அடங்கா கேள்விகள்.
அடியோன்கள் குழப்பத்தை தீர்கவேண்டுமாய் பிரார்திக்கிறோம்.
on behalf of many others on this forum
adiyen kamban dasan.