Enpani #1913யும் மாத்யானமும்?

Updated on November 2, 2020 in Daily rituals and practice
2 on November 1, 2020

ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகளுக்கு அடியேன் நமஸ்காரம்.
ஸ்ரீ வைஷ்ணவ பாகவதாளுக்கும் அடியேன் நமஸ்காரம்.

அடியேன் Enpani Audio 1913 “அன்றாடம் கர்மம் செய்ய சில முறைகள்” கேட்டேன்.

அதில் ஓரிடத்தில் “கர்மாவை காலம் தாழ்த்தி செய்தாலும் ப்ராயச்சித்தம் செய்து அந்த கர்மாவை செய்யலாம். ஆனால் அதே கர்மாவை தகுந்த காலத்திற்கு முன்பு செய்தால் அந்த கர்மாவை செய்ததாக ஏற்றுக்கொள்ள மாட்டாது” என்று கூறியுள்ளார்.

ஆனால் வேறொரு Enpani Audioவில் மாத்யானம் பற்றி கூறும்போது, நம் கால கட்டத்தின் காரணமாக அந்த கர்மாவை மத்யான வேளையில் செய்ய முடியாத நிலை இருந்தால், முன்கூட்டியே செய்யலாம், அதனால் தவறில்லை என்று கூறி கேட்டதாக அடியேனுக்கு ஞாபகம்.

இந்த இரண்டும் அடியேன் மந்த புத்திக்கு முரண்பாடாக தெரிவதால், அதனை தெளிவு படுத்தி அருள வேண்டுகிறேன். இதில் அடியேன் தவறாக புரிந்து கொண்டிருந்தால், அடியேன் பிழையை பொருத்து மன்னித்து அருள வேண்டுகிறேன்.

அடியேன் இராமானுஜ தாஸன்.

 
  • Liked by
  • கம்பன்தாசன்
Reply

For Madhyanhikam, the prescribed time itself is from any time after Prata: sandhya to noon.

on November 2, 2020

தண்யோஸ்மி சுவாமி. மீண்டும் ஒருமுறை அடியேன் தவறாக ஏதேனும் கேட்டிருப்பின் அடியேனை மன்னித்தருள வேண்டுகிறேன்.

அடியேன் இராமானுஜ தாஸன்.

Show more replies
  • Liked by
Reply
Cancel