Devareer Namaskaram,
EnPani 2585 – என் உறவினர் பாசம் காட்டுவதில்லை
EnPani 2586 – அனுமனும் பீமனும் சந்தித்த போது
தனித்து பிரிந்து இருக்க தேஜஸ் வளர்கிறது. உறவினர் பற்றை அறுக்க பக்தி வளர்கிறது. எல்லாம் சரி தேவரீர்.
ஆனால், அடிப்படை பக்தி வந்த பின், அதை வளர்க்க ஊக்கம் அவசியம் இல்லையா தேவரீர்? நம் இதர உறவினர் அல்லது பந்துக்கள் தானே ஊக்கப்படுத்த வேண்டும்.
அவ்வாறு ஊக்கம் நிறைந்து இருக்கிறதோ நம் குழுமத்திலே !?
அல்லது பகவானே ஊக்கத்தையும் கொடுப்பாரா? அல்லது அனுமனைப் போல் தேஜஸ் வளர்க்க தியானம் தான் கை கூடி இருக்கா?
ஊக்கமும் இல்லாமல் பாசமும் இல்லாமல் அடிப்படை பக்தியிலே பொழுது போக்க வா அல்லது சுவைத்து பார்த்த பின் அதே அளவு பக்தியில் இருக்க மனம் தான் பிரசங்கிக்குமோ?
அடியேனின் ஊக்கத்தை வளர்க்க முயல்பட அதில் எழுந்த விக்னங்களை இந்த பதிவில் எழுதினேன்.
தவறு இருக்க பொறுத்து தெளிவு படுத்துங்கோ.
அடியேன் ராமானுஜ தாசன்