ஸ்வாமி, அடியேனுக்கும் இந்த சந்தேகம் உள்ளது.
பகவத் கீதையில் 10.4 மற்றும் 10.5 யில் பெருமாள் சொல்கிறார்:
புத்தி மோஹமின்மை, பொறுமை, சத்தியம், வெளிப்புலனை அடக்குதல், மனத்தை அடக்குதல், சுகம், துக்கம், பிறப்பு, இறப்பு, பயம், பயமின்மை, அஹிம்ஸை, மனத்தின் நடுநிலை, திருப்தி, தானம், தவம், புகழ்ச்சி, இகழ்ச்சி, போன்ற பல விதமான குணங்கள் எல்லா ஜீவங்களுக்கும் என்னிடமிருந்து உண்டாகின்றன.
15.15 தில், நினைவும் மறதியும் அவரிடமிருந்தே அதீனம் என்று சொல்கிறார்.
14.16 ரில் “அஜ்ஞானம் தமஸ பலம்” என்று உள்ளது; அதாவது, தமோ குணத்தின் பலனாக அஜ்ஞானம் கொண்ட சூழழில் ஒரு ஜீவன் பிறக்கிறது என்று பொருள்.
ஆனால் இந்த அஜ்ஞானம் எங்கிருந்து தோன்றுகிறது? பகவானிடத்தில் தான் தோன்றுகிறது என்று எங்கும் குறிப்பிடபவில்லையே! (அடியேன் சிற்றறிவுக்கு எட்டியவரை).
வேறு விதமாக சிந்தித்து பார்த்தால், இருள் என்று ஒன்று இல்லை; ஒளி இல்லாத நிலையையே இருள் என்று குறிப்பிடிகிறோம். அதுபோல, அஜ்ஞானம் என்று ஒன்று இல்லை; பகவானை பற்றியும், அவருக்கு நாம் சேவகர்கள் என்ற நினைவும் மூடபட்ட (மாயையால் மூடப்பட்ட) நிலையை அஜ்ஞானம் என்று சொல்லலாம். குருவின் அனுகிரகதால் ஒளி பிறக்க இந்த இருள் இல்லாமல் போகிறது.
இது சரியான சிந்தனைதானா? நமது ஸ்வாமி விடையளித்தால்தான் தெளிவு பிறக்கும். காத்திருப்போம்.
அடியேன் தாசன்.