Adimai sAsanam ezhudhi kudukkanuma? From vikraminside
அதுதான் ஏற்கெனவே எழுதி கொடுத்து முத்திரைகளும் பதித்துக்கொண்டு விட்டோமே ஸ்வாமி!
இப்போது அவர் இஷ்டம் போல் நம்மை பல வித சோதனைகளுக்கு ஆட்படுத்தி, அவர் ப.கீ. 12.13, 12.14 ஸ்லோகங்களில் கூறியிருக்கும் பாடங்கள் படி வழி நடக்கிறோமா என்று சோதித்துப்பார்கிறார். சரம ஸ்லோகத்தில் சொன்ன படி இரு கைகளையும் மேலே தூக்குகிறோமா என்று பார்கிறார்! நாம் முயலுவோம். மற்றவவை அவர் பாடு! அவர் சொத்தை அவர் கவணிக்க வில்லை என்றால் அது யாருக்கு இழுக்கு?
நாம் செய்ய வேண்டியது ஒன்று மட்டும் தான். “ஆம் நான் உன் சொத்துதான்” என்று ஒவ்வொரு சோதனையிலும் நிலையாய் நிற்பது. எப்போதேனும் தவறினால், அதை உணர்ந்து, அடுத்த சோதனையில் கவணமாக, நிலையாய் இருப்பது.
விடியும் ஒவ்வொரு நாளும் சோதனைதான்! இதைத்தான் குந்தி தேவியும் சொல்கிறார். ஒவ்வொரு நாளும் சோதனை என்ற புரிதல் நிலைத்திருந்தால், உன் நினைவும் நிலைத்திருக்கும்; உன்னை பற்றி தொடர் நினைவு மீண்டும் பிறக்காமல் இருக்க வழி வகுக்கும்.
Option 2: அடிமைதனத்திலிருந்து unsubscribe செய்துவிடலாமா?
சிந்திக்கலாம்.
அடியேன் தாசன்.