Perumal’s Kalyana Gunangal, Swami tweets in twitter

Updated on January 22, 2018 in Avatars
0 on January 22, 2018

Sri Ramanuja Munaye Namaha,
Sri Velukkudi Krishnan Swami Guruvae Namaha,

Dear All Bhaktas,

Sri Velukkudi Krishnan Swami tweets in Tamil about Sharanagathy and Sriman Narayanan’s Kalyana Gunangal, as how HE protects a Sharanagathan (Aashiratha Pakshapaadhi).

****************************

1. Vathsalyam gunam (Mothers Love):

1.பெருமானிடம் உள்ள இந்நான்கு குணங்கள் சரணாகதியின்போது நமக்கு உதவும். நம் குற்றங்களை நினைத்து பயந்து ஒதுங்கி சரணாகதி செய்யாமல் இருந்தால் – பகவானின் “வாத்ஸல்யம்” எனும் குணம் குற்றங்களையே நற்பண்புகளாக ஏற்கும். தாய்ப்பசு அன்று ஈன்ற கன்றின் உடம்பழுக்கை விருப்பத்தோடு நாவால் நக்குவது போல்.

2. Swamithvam gunam (I’m The Supreme Master):

2. நம் வேண்டுகோள் நிறைவேறுமா என்று தயங்கும் சரணாகதனுக்கு – இறைவனின் “ஸ்வாமித்வம்” எனும் பண்பு, “நானே ஸ்வாமி, உன்னை உடையவன். உன் விருப்பத்தை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்” என்று நம்பிக்கை தரும்.

3. Sowsheelyam gunam (Equal to All):

3. பகவானின் உயர்வையும் நம் தாழ்வையும் நினைத்து அகல்பவனுக்கு எம்பெருமானின் “ஸௌசீல்யம்” எனும் பண்பு பயன்படும். அதுவே உயர்வு தாழ்வு பாராமல் பக்தனோடு கலந்து பழகுவது. குஹனையும் ஸுக்ரீவனையும் விபீஷணனையும் தம்பி என்றாரே இராமன் !

4. Sowlabhyam gunam (Easy Access):

4. எங்கு சென்று தஞ்சமடைவோம் என்று தவிப்பவர்களுக்கு, எம்பெருமானின் “ஸௌலப்யம்” எனும் பண்பு உதவும். விக்ரஹ வடிவில் நமக்கருகே கோவில் கொண்டு தன் திருவடிகளை நீட்டி “இவையே தஞ்சம்” என்று உணர்த்தும் “எளிமை” இதுவே.

**********************

Sri Velukkudi Krishnan Swami ThiruvAdigalaey Sharanam,

Thayar-Perumal-Alwar-Emperumanaar-Jeeyar-Acharyar Thiruvadigalaey Sharanam,

Rukmini Thayar Samedha SriKrishna BhagavAn ki Jai,

Sarvam SriKrishna Kudumbham.

 
  • Liked by
Reply