அடியேனுக்கு சந்தேகம் என்ன என்றால் ஸம்பாதியின் இறகுகள் எரிந்து விட்ட நிலையில் கீழே விழ ,முனிவரின் கருணையால் அந்த பர்வதத்தில் இருப்பது சீதையை தேடி வரும் வானரர்களிடம் தெரிவித்த உடன் இறக்கை முளைத்து பறந்து விட்டது,அந்த சம்பாதி பறக்கும் பொழுது அனுமனை சுமந்து சென்று இலங்கையில் விட்டிருக்கலாம் ஏன் அப்படி செய்யவில்லை,அதன் சகோதரன் ஜடாயுவுக்கு கிடைத்த கைங்கர்ய பிராப்தம் இதற்க்கு கிடைத்தும் பயன் படுத்தவில்லை,இதைதான் பிராப்தம் என்கிறோமா,இதைபற்றி சற்று விளக்கவும்
அடியேன் வேளுக்குடி தாசன்