Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri:
Swamy,
ஆன்மீகவாதி ஏமாளியா?
ராமன் அனைத்தயும் இழந்தான் காட்டில் ரிஷி களோடு ஷாந்தாமாக இருந்தான்
பரதன் ராஜ்ஜியம் கிடைத்த பின்பும் சாந்தி இல்லாமல் இருந்தான்
என்கிறார்களே (ஶ்ரீமதி விஷாகா ஹரி ஹரி கதா )
கூரதாழ்வான் சுவாமி பணம் இல்லாமல் தான தர்மம் செய்து இருக்க முடியுமா?
பக்குவம் இல்லாதவன் எப்படி இழப்பை ஏற்று கொள்வது?
நிறைவு பணத்தில் இல்லை என்பது தெரிகிறது இருந்தும் மனித மனம் இழப்பை ஏற்று கொள்ள மறுப்பது ஏன்?
உத்தம புருஷ லட்சணம் அடுதவருக்காக வாழ்வது , தன்னை இழந்தாலும் பரவா இல்லை என்று தெரிய வருகிறது
இது இயல்பாக வருமா இல்லை வரவழைத்து கொள்ளவேண்டுமா இல்லை சுவாபாவதின் படி நடப்பது சரியா?
இப்பொழுது ஒருவருக்கு ₹100 குடுத்து விட்டு அய்யோ குடுத்து விட்டேனே என்று நினைத்தால் தர்மம் ஆகாது என்கிறார்கள்
அதே சமயம், நேற்று ஒருவருக்கு ₹100 குடுக்கும் நிலை இருந்தது என்று ஏழ்மை நிலை வந்து விட்டது குடுத்தது தவறோ? என்று என்றோ ஒரு நாள் நினைக்க வாய்ப்பு உண்டு
அதுவரைக்கும் தர்மம், நினைத்த பின்பு தர்மம் போய் விடுமா?
தர்மம் தலை காக்கும் என்று சொல்கிறார்களே இதன் உண்மை அர்த்தம் என்ன?
கர்ணன் உண்மையில் தன்னுடைய சொத்தை தானம் செய்தாரா இல்லை துரியோதனன் சொத்தை தானம் செய்தாரா?
துரியோதனன் கர்ணனுக்கு தானம் செய்தது தானே பன்மை வடிவமாக பெருக்கு எடுத்தது?
துரியோதனன் சுயநலத்துக்காக செய்தது தர்மம் ஆகாது என்று ஆகி விடுகிறதா?
கர்ணன் செய்த தானத்தில், துரியோதனனுக்கு பங்கு கிடையாதா?
ஒரு திருடன் வீட்டில் சாப்பிட்டால் நமக்கும் திருட்டு புத்தி வரும் என்று ஒரு கதை அறிந்தேன்.
அது பாவத்தின் வெளிப்பாடு தானே
புண்ணியம் அப்படி பரவாதா?
ஒன்றும் புரியவில்லை
Adiyen
தாசானுதாசன்