Prabhadam
|
Pathu
|
TM
|
PNo
|
Paasuram
|
பெரியாழ்வார் திருமொழி
|
1
|
3
|
9
|
52 மெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும் * செய்ய தடங்கண்ணுக்கு * அஞ்சனமும் சிந்துரமும் ** வெய்ய கலைப்பாகி * கொண்டு உவளாய் நின்றாள் * ஐயா அழேல் அழேல் தாலேலோ * அரங்கத்து அணையானே தாலேலோ (9)
|
பெரியாழ்வார் திருமொழி
|
2
|
7
|
2
|
183 கரு உடை மேகங்கள் கண்டால் * உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் * உரு உடையாய் உலகு ஏழும் * உண்டாக வந்து பிறந்தாய் ** திரு உடையாள் மணவாளா * திருவரங்கத்தே கிடந்தாய் * மருவி மணம் கமழ்கின்ற * மல்லிகைப் பூச் சூட்ட வாராய் (2)
|
பெரியாழ்வார் திருமொழி
|
2
|
7
|
8
|
189 சீமாலிகன் அவனோடு * தோழமை கொள்ளவும் வல்லாய் * சாமாறு அவனை நீ எண்ணிச் * சக்கரத்தால் தலை கொண்டாய் ** ஆமாறு அறியும் பிரானே * அணி அரங்கத்தே கிடந்தாய் * ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் * இருவாட்சிப் பூச் சூட்ட வாராய் (8)
|
பெரியாழ்வார் திருமொழி
|
2
|
9
|
4
|
205 கொண்டல்வண்ணா இங்கே போதராயே* கோயிற் பிள்ளாய் இங்கே போதராயே* தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த* திருநாரணா இங்கே போதராயே ** உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி* ஓடி அகம் புக ஆய்ச்சிதானும்* கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக்* கண்ணபிரான் கற்ற கல்வி தானே (4)
|
பெரியாழ்வார் திருமொழி
|
2
|
9
|
11
|
212 ##வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ்* வருபுனற் காவிரித் தென்னரங்கன்* பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்* பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் ** கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்* கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி* எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்* இணையடி என்தலை மேலனவே (11)
|
பெரியாழ்வார் திருமொழி
|
3
|
3
|
2
|
245 கன்னி நன் மா மதில் சூழ்தரு * பூம்பொழிற் காவிரித் தென்னரங்கம் * மன்னிய சீர் மதுசூதனா கேசவா * பாவியேன் வாழ்வு உகந்து ** உன்னை இளங்கன்று மேய்க்கச் * சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன் * என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை * என்குட்டனே முத்தம் தா (2)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
8
|
1
|
402 ##மா தவத்தோன் புத்திரன் போய் * மறிகடல்வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா * உருவுருவே கொடுத்தான் ஊர் ** தோதவத்தித் தூய் மறையோர் * துறைபடியத் துளும்பி எங்கும் * போதில் வைத்த தேன் சொரியும் * புனல் அரங்கம் என்பதுவே (1)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
8
|
2
|
403 பிறப்பு அகத்தே மாண்டு ஒழிந்த * பிள்ளைகளை நால்வரையும் * இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து * ஒருப்படுத்த உறைப்பன் ஊர் ** மறைப் பெருந் தீ வளர்த்திருப்பார் * வருவிருந்தை அளித்திருப்பார் * சிறப்பு உடைய மறையவர் வாழ் * திருவரங்கம் என்பதுவே (2)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
8
|
3
|
404 மருமகன் தன் சந்ததியை * உயிர்மீட்டு மைத்துனன்மார் * உருமகத்தே வீழாமே * குருமுகமாய்க் காத்தான் ஊர் ** திருமுகமாய்ச் செங்கமலம் * திருநிறமாய்க் கருங்குவளை * பொரு முகமாய் நின்று அலரும் * புனல் அரங்கம் என்பதுவே (3)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
8
|
4
|
405 கூன் தொழுத்தை சிதகு உரைப்பக் * கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு ஈன்று எடுத்த தாயரையும் * இராச்சியமும் ஆங்கு ஒழிய ** கான் தொடுத்த நெறி போகிக் * கண்டகரைக் களைந்தான் ஊர் * தேன்தொடுத்த மலர்ச் சோலைத் * திருவரங்கம் என்பதுவே (4)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
8
|
5
|
406 பெருவரங்கள் அவைபற்றிப் * பிழக்கு உடைய இராவணனை * உரு அரங்கப் பொருது அழித்து * இவ் உலகினைக் கண்பெறுத்தான் ஊர் ** குரவு அரும்பக் கோங்கு அலரக் * குயில் கூவும் குளிர் பொழில் சூழ் * திருவரங்கம் என்பதுவே * என் திருமால் சேர்விடமே (5)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
8
|
6
|
407 கீழ் உலகில் அசுரர்களைக் * கிழங்கிருந்து கிளராமே * ஆழி விடுத்து அவருடைய * கரு அழித்த அழிப்பன் ஊர் ** தாழை- மடல் ஊடு உரிஞ்சித் * தவள வண்ணப் பொடி அணிந்து * யாழின் இசை வண்டினங்கள் * ஆளம் வைக்கும் அரங்கமே (6)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
8
|
7
|
408 கொழுப்பு உடைய செழுங்குருதி * கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப் * பிழக்கு உடைய அசுரர்களைப் * பிணம் படுத்த பெருமான் ஊர் ** தழுப்பு அரிய சந்தனங்கள் * தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு * தெழிப்பு உடைய காவிரி வந்து * அடிதொழும் சீர் அரங்கமே (7)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
8
|
8
|
409 வல் எயிற்றுக் கேழலுமாய் * வாள்எயிற்றுச் சீயமுமாய் * எல்லை இல்லாத் தரணியையும் * அவுணனையும் இடந்தான் ஊர் ** எல்லியம் போது இருஞ்சிறை வண்டு * எம்பெருமான் குணம் பாடி * மல்லிகை வெண்சங்கு ஊதும் * மதில் அரங்கம் என்பதுவே (8)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
8
|
9
|
410 குன்று ஆடு கொழு முகில் போல் * குவளைகள் போல் குரைகடல் போல் * நின்று ஆடு கணமயில் போல் * நிறம் உடைய நெடுமால் ஊர் ** குன்று ஊடு பொழில் நுழைந்து * கொடி இடையார் முலை அணவி * மன்று ஊடு தென்றல் உலாம் * மதில் அரங்கம் என்பதுவே (9)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
8
|
10
|
411 ## பரு வரங்கள் அவைபற்றிப் * படை ஆலித்து எழுந்தானைச் * செரு அரங்கப் பொருது அழித்த * திருவாளன் திருப்பதிமேல் ** திருவரங்கத் தமிழ்-மாலை * விட்டுசித்தன் விரித்தன கொண்டு * இருவர் அங்கம் எரித்தானை * ஏத்த வல்லார் அடியோமே (10)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
9
|
1
|
412 ## மரவடியைத் தம்பிக்கு * வான்பணையம் வைத்துப்போய் * வானோர் வாழச் * செரு உடைய திசைக்கருமம் * திருத்திவந்து உலகாண்ட திருமால் கோயில் ** திருவடிதன் திருஉருவும் * திருமங்கை மலர்க்கண்ணும் காட்டி நின்று * உரு உடைய மலர்நீலம் * காற்று ஆட்ட ஒலிசலிக்கும் ஒளி அரங்கமே (1)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
9
|
2
|
413 தன் அடியார் திறத்தகத்துத் * தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல் * என் அடியார் அது செய்யார் * செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் ** மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கைத் திசைநோக்கி மலர்க்கண் வைத்த * என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் * மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரே? (2)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
9
|
3
|
414 கருள் உடைய பொழில் மருதும் * கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும் * உருள் உடைய சகடரையும் மல்லரையும் * உடைய விட்டு ஓசை கேட்டான் ** இருள் அகற்றும் எறி கதிரோன் * மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி * அருள் கொடுத்திட்டு அடியவரை * ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே (3)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
9
|
4
|
415 பதினாறாம் ஆயிரவர் * தேவிமார் பணிசெய்யத் * துவரை என்னும் மதில் நாயகராகி வீற்றிருந்த * மணவாளர் மன்னு கோயில் ** புது நாள்மலர்க் கமலம் * எம்பெருமான் பொன் வயிற்றிற் பூவே போல்வான் * பொது-நாயகம் பாவித்து * இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே (4)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
9
|
5
|
416 ஆமையாய்க் கங்கையாய் * ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய் * நான்முகனாய் நான்மறையாய் * வேள்வியாய்த் தக்கணையாய்த் தானும் ஆனான் ** சேமம் உடை நாரதனார் * சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில் * பூ மருவிப் புள் இனங்கள் * புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே (5)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
9
|
6
|
417 மைத்துனன்மார் காதலியை * மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னர் ஆக்கி * உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட * உயிராளன் உறையும் கோயில் ** பத்தர்களும் பகவர்களும் * பழமொழிவாய் முனிவர்களும் பரந்த நாடும் * சித்தர்களும் தொழுது இறைஞ்சத் * திசை-விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே (6)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
9
|
7
|
418 குறள் பிரமசாரியாய் * மாவலியைக் குறும்பு அதக்கி அரசுவாங்கி * இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை * கொடுத்து உகந்த எம்மான் கோயில் ** எறிப்பு உடைய மணிவரைமேல் * இளஞாயிறு எழுந்தாற்போல் அரவு-அணையின் வாய்ச் சிறப்பு உடைய பணங்கள்மிசைச் * செழுமணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே (7)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
9
|
8
|
419 உரம் பற்றி இரணியனை * உகிர்-நுதியால் ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றிச் * சிரம் பற்றி முடி இடியக் கண் பிதுங்க * வாய் அலறத் தெழித்தான் கோயில் ** உரம் பெற்ற மலர்க்கமலம் * உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட * வரம்பு உற்ற கதிர்ச்செந்நெல் * தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண் அரங்கமே (8)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
9
|
9
|
420 தேவு உடைய மீனமாய் ஆமையாய் * ஏனமரி குறளும் ஆகி மூ-உருவில் இராமனாய்க் * கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் ** சேவலொடு பெடை அன்னம் * செங்கமல மலர் ஏறி ஊசல் ஆடிப் * பூ-அணைமேல் துதைந்து எழு * செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே (9)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
9
|
10
|
421 செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் * செருச்செயும் நாந்தம் என்னும் * ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் * விழுக்கை யாளன் ** இரவு ஆளன் பகலாளன் எனையாளன் * ஏழு உலகப் பெரும் புரவாளன் * திருவாளன் இனிதாகத் * திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே (10)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
9
|
11
|
422 ## கைந்நாகத்து இடர் கடிந்த * கனல் ஆழிப் படை உடையான் கருதும் கோயில் * தென்நாடும் வடநாடும் தொழநின்ற * திருவரங்கத் திருப்பதியின் மேல் ** மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டுசித்தன் * விரித்த தமிழ் உரைக்க வல்லார் * எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ் * இணை பிரியாது இருப்பர் தாமே (11)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
10
|
1
|
423 ## துப்புடையாரை அடைவது எல்லாம் * சோர்விடத்துத் துணை ஆவர் என்றே * ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன் * ஆனைக்கு நீ அருள் செய்தமையால் ** எய்ப்பு என்னை வந்து நலியும்போது * அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் * அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (1)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
10
|
2
|
424 சாம் இடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் * சங்கொடு சக்கரம் ஏந்தினானே * நா மடித்து என்னை அனேக தண்டம் * செய்வதா நிற்பர் நமன்தமர்கள் ** போம் இடத்து உன்திறத்து எத்தனையும் * புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை * ஆம் இடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (2)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
10
|
3
|
425 எல்லையில் வாசல் குறுகச் சென்றால் * எற்றி நமன்-தமர் பற்றும்போது * நில்லுமின் என்னும் உபாயம் இல்லை * நேமியும் சங்கமும் ஏந்தினானே ** சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம் * சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் * அல்லற் படாவண்ணம் காக்க வேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (3)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
10
|
4
|
426 ஒற்றை விடையனும் நான்முகனும் * உன்னை அறியாப் பெருமையோனே! * முற்ற உலகு எல்லாம் நீயே ஆகி * மூன்று எழுத்து ஆய முதல்வனே!ஓ! ** அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி * அஞ்ச நமன்தமர் பற்றல் உற்ற * அற்றைக்கு நீ என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (4)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
10
|
5
|
427 பை அரவின் அணைப் பாற்கடலுள் * பள்ளி கொள்கின்ற பரம முர்த்தி! * உய்ய உலகு படைக்க வேண்டி * உந்தியிற் தோற்றினாய் நான்முகனை ** வைய மனிசரைப் பொய் என்று எண்ணிக் * காலனையும் உடனே படைத்தாய் * ஐய இனி என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (5)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
10
|
6
|
428 தண்ணனவு இல்லை நமன்தமர்கள் * சாலக் கொடுமைகள் செய்யாநிற்பர் * மண்ணொடு நீரும் எரியும் காலும் * மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய் ** எண்ணலாம் போதே உன் நாமம் எல்லாம் * எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் * அண்ணலே நீ என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (6)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
10
|
7
|
429 செஞ்சொல் மறைப்பொருள் ஆகி நின்ற * தேவர்கள் நாயகனே எம்மானே * எஞ்சலில் என்னுடை இன் அமுதே * ஏழ் உலகும் உடையாய் என் அப்பா ** வஞ்ச உருவின் நமன்தமர்கள் * வலிந்து நலிந்து என்னைப் பற்றும்போது * அஞ்சலை என்று என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (7)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
10
|
8
|
430 நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் * நமன்தமர் பற்றி நலிந்திட்டு * இந்த ஊனே புகே என்று மோதும்போது * அங்கு உன்னை நான் ஒன்றும் நினைக்கமாட்டேன் ** வான் ஏய வானவர் தங்கள் ஈசா * மதுரைப் பிறந்த மா மாயனே * என் ஆனாய் நீ என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (8)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
10
|
9
|
431 குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா * கோநிரை மேய்த்தவனே எம்மானே * அன்று முதல் இன்று அறுதியாக * ஆதி அஞ் சோதி மறந்து அறியேன் ** நன்றும் கொடிய நமன்தமர்கள் * நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது * அன்று அங்கு நீ என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (9)
|
பெரியாழ்வார் திருமொழி
|
4
|
10
|
10
|
432 ## மாயவனை மதுசூதனனை * மாதவனை மறையோர்கள் ஏத்தும் * ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை * அரங்கத்து அரவணைப் பள்ளியானை ** வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் * விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் * தூய மனத்தினர் ஆகி வல்லார் * தூ மணிவண்ணனுக்கு ஆளர் தாமே (10)
|
நாச்சியார் திருமொழி
|
1
|
11
|
1
|
607 ## தாம் உகக்கும் தம் கையிற் * சங்கமே போலாவோ * யாம் உகக்கும் எம் கையில் * சங்கமும்? ஏந்திழையீர் ** தீ முகத்து நாகணைமேல்* சேரும் திருவரங்கர் * ஆ முகத்தை நோக்காரால்* அம்மனே அம்மனே (1)
|
நாச்சியார் திருமொழி
|
1
|
11
|
2
|
608 எழில் உடைய அம்மனைமீர் * என் அரங்கத்து இன்னமுதர் * குழல் அழகர் வாய் அழகர் * கண் அழகர் கொப்பூழில் * எழு கமலப் பூ அழகர்* எம்மானார் * என்னுடைய கழல் வளையைத்* தாமும் கழல் வளையே ஆக்கினரே (2)
|
நாச்சியார் திருமொழி
|
1
|
11
|
3
|
609 ## பொங்கு ஓதம் சூழ்ந்த * புவனியும் விண்-உலகும் * அங்கு ஆதும் சோராமே * ஆள்கின்ற எம்பெருமான் ** செங்கோல் உடைய * திருவரங்கச் செல்வனார் * எம் கோல்-வளையால் * இடர் தீர்வர் ஆகாதே? (3)
|
நாச்சியார் திருமொழி
|
1
|
11
|
4
|
610 மச்சு அணி மாட * மதில் அரங்கர் வாமனனார்* பச்சைப் பசுந் தேவர் * தாம் பண்டு நீர் ஏற்ற ** பிச்சைக் குறையாகி* என்னுடைய பெய்வளை மேல் * இச்சை உடையரேல்* இத் தெருவே போதாரே? (4)
|
நாச்சியார் திருமொழி
|
1
|
11
|
5
|
611 பொல்லாக் குறள் உருவாய்ப் * பொற் கையில் நீர் ஏற்று * எல்லா உலகும்* அளந்து கொண்ட எம்பெருமான் ** நல்லார்கள் வாழும்* நளிர் அரங்க நாகணையான்* இல்லாதோம் கைப்பொருளும் * எய்துவான் ஒத்து உளனே (5)
|
நாச்சியார் திருமொழி
|
1
|
11
|
6
|
612 கைப் பொருள்கள் முன்னமே* கைக்கொண்டார் * காவிரி நீர் செய்ப் புரள ஓடும் * திருவரங்கச் செல்வனார் ** எப் பொருட்கும் நின்று ஆர்க்கும் * எய்தாது * நான் மறையின் சொற்பொருளாய் நின்றார் * என் மெய்ப்பொருளும் கொண்டாரே (6)
|
நாச்சியார் திருமொழி
|
1
|
11
|
7
|
613 உண்ணாது உறங்காது * ஒலிகடலை ஊடறுத்துப் * பெண் ஆக்கை யாப்புண்டு* தாம் உற்ற பேது எல்லாம் ** திண்ணார் மதில் சூழ் * திருவரங்கச் செல்வனார் * எண்ணாதே தம்முடைய* நன்மைகளே எண்ணுவரே (7)
|
நாச்சியார் திருமொழி
|
1
|
11
|
8
|
614 ## பாசி தூர்த்தக் கிடந்த * பார்-மகட்குப் * பண்டு ஒரு நாள் மாசு உடம்பில் சீர் வாரா * மானம் இலாப் பன்றி ஆம் ** தேசு உடைய தேவர்* திருவரங்கச் செல்வனார் * பேசியிருப்பனகள் * பேர்க்கவும் பேராவே (8)
|
நாச்சியார் திருமொழி
|
1
|
11
|
9
|
615 கண்ணாலம் கோடித்துக் * கன்னிதன்னைக் கைப்பிடிப்பான் * திண் ஆர்ந்து இருந்த* சிசுபாலன் தேசு அழிந்து ** அண்ணாந்து இருக்கவே * ஆங்கு அவளைக் கைப்பிடித்த * பெண்ணாளன் பேணும் ஊர் * பேரும் அரங்கமே (9)
|
நாச்சியார் திருமொழி
|
1
|
11
|
10
|
616 ##செம்மை உடைய * திருவரங்கர் தாம் பணித்த * மெய்ம்மைப் பெரு வார்த்தை * விட்டுசித்தர் கேட்டிருப்பர் ** தம்மை உகப்பாரைத் * தாம் உகப்பர் என்னும் சொல் * தம்மிடையே பொய்யானால்* சாதிப்பார் ஆர் இனியே? (10)
|
பெருமாள் திருமொழி
|
1
|
1
|
1
|
647 ## இருள் இரியச் சுடர்-மணிகள் இமைக்கும் நெற்றி* இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த * அரவு-அரசப் பெருஞ் சோதி அனந்தன் என்னும் * அணி விளங்கும் உயர் வெள்ளை-அணையை மேவித் ** திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி * திரைக் கையால் அடி வருடப் பள்ளிகொள்ளும் * கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு * என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே (1)
|
பெருமாள் திருமொழி
|
1
|
1
|
2
|
648 ## வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த * வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ * வீயாத மலர்ச் சென்னி விதானமே போல் * மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ் ** காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை * கடி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் * மாயோனை மணத்தூணே பற்றி நின்று* என் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே! (2)
|
பெருமாள் திருமொழி
|
1
|
1
|
3
|
649 எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்* எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு * எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும் * தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற ** செம்பொன்- அம்மான்தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற* அணி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் * அம்மான்தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு * அங்கு அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே (3)
|
பெருமாள் திருமொழி
|
1
|
1
|
4
|
650 மாவினை வாய் பிளந்து உகந்த மாலை * வேலை வண்ணனை என் கண்ணனை * வன் குன்றம் ஏந்தி ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர்-ஏற்றை * அமரர்கள் தம் தலைவனை அந் தமிழின் இன்பப் பாவினை ** அவ் வடமொழியை பற்று-அற்றார்கள் * பயில் அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் * கோவினை நா உற வழுத்தி என்தன் கைகள்* கொய்ம்மலர் தூய் என்றுகொலோ கூப்பும் நாளே (4)
|
பெருமாள் திருமொழி
|
1
|
1
|
5
|
651 இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி * இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த * துணையில்லாத் தொல் மறை நூல்-தோத்திரத்தால்* தொல் மலர்க்கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த ** மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ * மதில்-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் * மணிவண்ணன் அம்மானைக் கண்டுகொண்டு* என் மலர்ச் சென்னி என்றுகொலோ வணங்கும் நாளே (5)
|
பெருமாள் திருமொழி
|
1
|
1
|
6
|
652 அளி மலர்மேல் அயன் அரன் இந்திரனோடு * ஏனை அமரர்கள்தம் குழுவும் அரம்பையரும் மற்றும் * தெளி மதி சேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித் * திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும் ** களி மலர் சேர் பொழில்-அரங்கத்து உரகம் ஏறிக்* கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும் * ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு * என் உள்ளம் மிக என்றுகொலோ உருகும் நாளே (6)
|
பெருமாள் திருமொழி
|
1
|
1
|
7
|
653 மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி * வன் புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம் துறந்து * இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத் தொல் நெறிக்கண் * நிலைநின்ற தொண்டரான ** அறம் திகழும் மனத்தவர்தம் கதியை பொன்னி * அணி அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் * நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்* நீர் மல்க என்றுகொலோ நிற்கும் நாளே (7)
|
பெருமாள் திருமொழி
|
1
|
1
|
8
|
654 கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்* கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள் * கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும்* வென்றிக் கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப ** சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த * திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் * மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி * வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே (8)
|
பெருமாள் திருமொழி
|
1
|
1
|
9
|
655 தூராத மனக்காதல்-தொண்டர் தங்கள் குழாம் குழுமித் *திருப்புகழ்கள் பலவும் பாடி * ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் * மழை சோர நினைந்து உருகி ஏத்தி * * நாளும் சீர் ஆர்ந்த முழவு-ஓசை பரவை காட்டும் * திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் * போர் ஆழி அம்மானைக் கண்டு துள்ளிப் * பூதலத்தில் என்றுகொலோ புரளும் நாளே! (9)
|
பெருமாள் திருமொழி
|
1
|
1
|
10
|
656 ## வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய * மண்-உலகில் மனிசர் உய்ய * துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச் சுகம் வளர * அகம் மகிழும் தொண்டர் வாழ ** அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும் * அணி-அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் * இன்ப மிகு பெருங் குழுவு கண்டு* யானும் இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும் நாளே (10)
|
பெருமாள் திருமொழி
|
1
|
1
|
11
|
657 ## திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவுபாட்டுத்* திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் * கடல் விளங்கு கருமேனி அம்மான்தன்னைக் * கண்ணாரக் கண்டு உகக்கும் காதல்தன்னால் ** குடை விளங்கு விறல்-தானைக் கொற்ற ஒள் வாள்* கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற் செய்த * நடை விளங்கு தமிழ்-மாலை பத்தும் வல்லார் * நலந்திகழ் நாரணன்-அடிக்கீழ் நண்ணுவாரே (11)
|
பெருமாள் திருமொழி
|
1
|
2
|
1
|
658 ##தேட்டு அருந் திறல்-தேனினைத்* தென் அரங்கனைத்* திருமாது வாழ் வாட்டம் இல் வனமாலை மார்வனை வாழ்த்தி * மால் கொள் சிந்தையராய் ** ஆட்டம் மேவி அலந்து அழைத்து* அயர்வு- எய்தும் மெய்யடியார்கள்தம் * ஈட்டம் கண்டிடக் கூடுமேல் * அது காணும் கண் பயன் ஆவதே (1)
|
பெருமாள் திருமொழி
|
1
|
2
|
2
|
659 தோடு உலா மலர்-மங்கை தோளிணை தோய்ந்ததும் * சுடர்-வாளியால் * நீடு மா மரம் செற்றதும் * நிரை மேய்த்ததும் * இவையே நினைந்து ** ஆடிப் பாடி அரங்க ஓ என்று அழைக்கும் * தொண்டர் அடிப்-பொடி ஆட நாம் பெறில்* கங்கை நீர் குடைந்து ஆடும் * வேட்கை என் ஆவதே? (2)
|
பெருமாள் திருமொழி
|
1
|
2
|
3
|
660 ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் * முன் இராமனாய் * மாறு அடர்த்ததும் மண் அளந்ததும்* சொல்லிப் பாடி * * வண் பொன்னிப் பேர்- ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு *அரங்கன் கோயில்-திருமுற்றம் * சேறு செய் தொண்டர் சேவடிச் * செழுஞ் சேறு என் சென்னிக்கு அணிவனே (3)
|
பெருமாள் திருமொழி
|
1
|
2
|
4
|
661 தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும் * உடன்று ஆய்ச்சி கண்டு * ஆர்த்த தோள் உடை எம்பிரான்* என் அரங்கனுக்கு அடியார்களாய் ** நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து * மெய் தழும்பத் தொழுது ஏத்தி * இன்பு உறும் தொண்டர் சேவடி* ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே (4)
|
பெருமாள் திருமொழி
|
1
|
2
|
5
|
662 பொய் சிலைக் குரல் ஏற்று-எருத்தம் இறுத்தப்* போர்-அரவு ஈர்த்த கோன் * செய் சிலைச் சுடர் சூழ் ஒளித்* திண்ண மா மதில்-தென் அரங்கனாம் ** மெய் சிலைக் கருமேகம் ஒன்று* தம் நெஞ்சில் நின்று திகழப் போய் * மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து * என் மனம் மெய் சிலிர்க்குமே (5)
|
பெருமாள் திருமொழி
|
1
|
2
|
6
|
663 ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன * வானவர் தம்பிரான் * பாத மா மலர் சூடும் பத்தி இலாத * பாவிகள் உய்ந்திடத் ** தீதில் நன்னெறி காட்டி * எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே * காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும்* காதல் செய்யும் என் நெஞ்சமே (6)
|
பெருமாள் திருமொழி
|
1
|
2
|
7
|
664 கார்-இனம் புரை மேனி நற் கதிர் முத்த * வெண்ணகைச் செய்ய வாய் * ஆர-மார்வன் அரங்கன் என்னும் * அரும் பெருஞ்சுடர் ஒன்றினைச் ** சேரும் நெஞ்சினர் ஆகிச் சேர்ந்து * கசிந்து இழிந்த கண்ணீர்களால் * வார நிற்பவர் தாளிணைக்கு * ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே (7)
|
பெருமாள் திருமொழி
|
1
|
2
|
8
|
665 மாலை உற்ற கடற் கிடந்தவன் * வண்டு கிண்டு நறுந்துழாய் * மாலை உற்ற வரைப் பெருந் திரு மார்வனை* மலர்க் கண்ணனை ** மாலை உற்று எழுந்து ஆடிப்பாடித்* திரிந்து அரங்கன் எம்மானுக்கே * மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு * மாலை உற்றது என் நெஞ்சமே (8)
|
பெருமாள் திருமொழி
|
1
|
2
|
9
|
666 மொய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப * ஏங்கி இளைத்து நின்று * எய்த்துக் கும்பிடு நட்டம் இட்டு எழுந்து * ஆடிப் பாடி இறைஞ்சி என் ** அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடி யார்கள் ஆகி *அவனுக்கே பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் * மற்றையார் முற்றும் பித்தரே (9)
|
பெருமாள் திருமொழி
|
1
|
2
|
10
|
667 ##அல்லி மா மலர்-மங்கை நாதன்* அரங்கன் மெய்யடியார்கள் தம் * எல்லை இல் அடிமைத் திறத்தினில் * என்றும் மேவு மனத்தனாம் ** கொல்லி-காவலன் கூடல்-நாயகன் * கோழிக்கோன் குலசேகரன் * சொல்லின் இன்தமிழ் மாலை வல்லவர் * தொண்டர் தொண்டர்கள் ஆவரே (10)
|
பெருமாள் திருமொழி
|
1
|
3
|
1
|
668 ##மெய் இல் வாழ்க்கையை * மெய் எனக் கொள்ளும் * இவ் வையம்தன்னொடும் * கூடுவது இல்லை யான் ** ஐயனே * அரங்கா என்று அழைக்கின்றேன் * மையல் கொண்டொழிந்தேன் * என்தன் மாலுக்கே (1)
|
பெருமாள் திருமொழி
|
1
|
3
|
2
|
669 நூலின் நேர்-இடையார் * திறத்தே நிற்கும் * ஞாலம் தன்னொடும் * கூடுவது இல்லை யான் ** ஆலியா அழையா * அரங்கா என்று * மால் எழுந்தொழிந்தேன் * என்தன் மாலுக்கே (2)
|
பெருமாள் திருமொழி
|
1
|
3
|
3
|
670 மாரனார் * வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும் * பாரினாரொடும் * கூடுவது இல்லை யான் ** ஆர-மார்வன் * அரங்கன் அனந்தன் * நல் நாரணன் * நரகாந்தகன் பித்தனே (3)
|
பெருமாள் திருமொழி
|
1
|
3
|
4
|
671 உண்டியே உடையே * உகந்து ஓடும் * இம் மண்டலத்தொடும் * கூடுவது இல்லை யான் ** அண்டவாணன் * அரங்கன் வன் பேய்-முலை * உண்ட வாயன்தன் * உன்மத்தன் காண்மினே (4)
|
பெருமாள் திருமொழி
|
1
|
3
|
5
|
672 தீதில் நன்னெறி நிற்க *அல்லாது செய் * நீதியாரொடும் * கூடுவது இல்லை யான் ** ஆதி ஆயன் * அரங்கன் அந் தாமரைப் * பேதை மா மணவாளன்* தன் பித்தனே (5)
|
பெருமாள் திருமொழி
|
1
|
3
|
6
|
673 எம் பரத்தர் * அல்லாரொடும் கூடலன் * உம்பர் வாழ்வை * ஒன்றாகக் கருதலன் ** தம்பிரான் அமரர்க்கு * அரங்க நகர் * எம்பிரானுக்கு * எழுமையும் பித்தனே (6)
|
பெருமாள் திருமொழி
|
1
|
3
|
7
|
674 எத் திறத்திலும் * யாரொடும் கூடும் * அச் சித்தந்தன்னைத் * தவிர்த்தனன் செங்கண் மால் ** அத்தனே * அரங்கா என்று அழைக்கின்றேன் * பித்தனாய் ஒழிந்தேன் * எம்பிரானுக்கே (7)
|
பெருமாள் திருமொழி
|
1
|
3
|
8
|
675 பேயரே * எனக்கு யாவரும் * யானும் ஓர் பேயனே * எவர்க்கும் இது பேசி என் ** ஆயனே * அரங்கா என்று அழைக்கின்றேன் * பேயனாய் ஒழிந்தேன் * எம்பிரானுக்கே (8)
|
பெருமாள் திருமொழி
|
1
|
3
|
9
|
676 ##அங்கை-ஆழி * அரங்கன் அடியிணை * தங்கு சிந்தைத் * தனிப் பெரும் பித்தனாய்க் ** கொங்கர்கோன் * குலசேகரன் சொன்ன சொல் * இங்கு வல்லவர்க்கு * ஏதம் ஒன்று இல்லையே (9)
|
பெருமாள் திருமொழி
|
1
|
8
|
10
|
728 ## தேவரையும் அசுரரையும் * திசைகளையும் படைத்தவனே * யாவரும் வந்து அடி வணங்க * அரங்கநகர்த் துயின்றவனே ** காவிரி நல் நதி பாயும் * கணபுரத்து என் கருமணியே * ஏ வரி வெஞ்சிலை வலவா * இராகவனே தாலேலோ (10)
|
திருச்சந்த விருத்தம்
|
1
|
1
|
21
|
772 அரங்கனே! தரங்க நீர்* கலங்க அன்று குன்று சூழ்* மரங்கள் தேய மாநிலம் குலுங்க* மாசுணம் சுலாய் ** நெருங்க நீ கடைந்தபோது* நின்ற சூரர் என் செய்தார்?* குரங்கை ஆள் உகந்த எந்தை!* கூறு தேற வேறு இதே (21)
|
திருச்சந்த விருத்தம்
|
1
|
1
|
49
|
800 கொண்டை கொண்ட கோதை மீது * தேன் உலாவு கூனி கூன் * உண்டை கொண்டு அரங்க ஓட்டி * உள் மகிழ்ந்த நாதன் ஊர் ** நண்டை உண்டு நாரை பேர * வாளை பாய நீலமே * அண்டை கொண்டு கெண்டை மேயும் * அந் தண் நீர் அரங்கமே (49)
|
திருச்சந்த விருத்தம்
|
1
|
1
|
50
|
801 வெண் திரைக் கருங் கடல் * சிவந்து வேவ முன் ஒர் நாள் * திண் திறற் சிலைக்கை வாளி * விட்ட வீரர் சேரும் ஊர் ** எண் திசைக் கணங்களும் * இறைஞ்சி ஆடு தீர்த்த நீர் * வண்டு இரைத்த சோலை வேலி * மன்னு சீர் அரங்கமே (50)
|
திருச்சந்த விருத்தம்
|
1
|
1
|
51
|
802 சரங்களைத் துரந்து * வில் வளைத்து இலங்கை மன்னவன் * சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த * செல்வர் மன்னு பொன்-இடம் ** பரந்து பொன் நிரந்து நுந்தி * வந்து அலைக்கும் வார் புனல் * அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த * கோயிலே (51)
|
திருச்சந்த விருத்தம்
|
1
|
1
|
52
|
803 பொற்றை உற்ற முற்றல் யானை * போர் எதிர்ந்து வந்ததைப் * பற்றி உற்று மற்று அதன் * மருப்பு ஒசித்த பாகன் ஊர் ** சிற்றெயிற்று முற்றல் மூங்கில் * மூன்று தண்டர் ஒன்றினர் * அற்ற பற்றர் சுற்றி வாழும் * அந்தண் நீர் அரங்கமே (52)
|
திருச்சந்த விருத்தம்
|
1
|
1
|
53
|
804 மோடியோடு இலச்சையாய * சாபம் எய்தி முக்கணான் * கூடு சேனை மக்களோடு * கொண்டு மண்டி வெஞ்சமத்து ஓட ** வாணன் ஆயிரம் * கரங் கழித்த ஆதி மால் * பீடு கோயில் கூடு நீர் * அரங்கம் என்ற பேரதே (53)
|
திருச்சந்த விருத்தம்
|
1
|
1
|
54
|
805 இலைத் தலைச் சரம் துரந்து * இலங்கை கட்டழித்தவன் * மலைத் தலைப் பிறந்து இழிந்து * வந்து நுந்து சந்தனம் ** குலைத்து அலைத்து இறுத்து எறிந்த * குங்குமக் குழம்பினோடு * அலைத்து ஒழுகு காவிரி * அரங்கம் மேய அண்ணலே (54)
|
திருச்சந்த விருத்தம்
|
1
|
1
|
55
|
806 மன்னு மா மலர்க் கிழத்தி * வைய மங்கை மைந்தனாய் * பின்னும் ஆயர் பின்னை தோள் * மணம் புணர்ந்து அது அன்றியும் ** உன்ன பாதம் என்ன சிந்தை * மன்ன வைத்து நல்கினாய் * பொன்னி சூழ் அரங்கம் மேய * புண்டரீகன் அல்லையே? (55)
|
திருச்சந்த விருத்தம்
|
1
|
1
|
93
|
844 சுரும்பு அரங்கு தண் துழாய் * துதைந்து அலர்ந்த பாதமே * விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு * இரங்கு அரங்கவாணனே ** கரும்பு இருந்த கட்டியே * கடல் கிடந்த கண்ணனே * இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த * வில் இராமனே (93)
|
திருச்சந்த விருத்தம்
|
1
|
1
|
119
|
870 ## பொன்னி சூழ் அரங்கம் மேய * பூவை-வண்ண மாய கேள் * என்னது ஆவி என்னும் * வல்வினையினுட் கொழுந்து எழுந்து ** உன்ன பாதம் என்ன நின்ற * ஒண்சுடர்க் கொழுமலர் * மன்ன வந்து பூண்டு * வாட்டம் இன்றி எங்கும் நின்றதே (119)
|
திருமாலை
|
1
|
1
|
1
|
872 ##காவலிற் புலனை வைத்து* கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து* நாவலிட்டு உழிதர்கின்றோம்* நமன்-தமர் தலைகள் மீதே ** மூவுலகு உண்டு உமிழ்ந்த* முதல்வ நின் நாமம் கற்ற* ஆவலிப்பு உடைமை கண்டாய்* அரங்க மா நகருளானே (1)
|
திருமாலை
|
1
|
1
|
2
|
873 ## பச்சை மா மலை போல் மேனி* பவளவாய் கமலச் செங்கண் * அச்சுதா அமரர் ஏறே* ஆயர் தம் கொழுந்தே என்னும் ** இச் சுவை தவிர யான் போய்* இந்திர-லோகம் ஆளும்* அச் சுவை பெறினும் வேண்டேன்* அரங்க மா நகருளானே (2)
|
திருமாலை
|
1
|
1
|
3
|
874 வேத நூற் பிராயம் நூறு* மனிசர் தாம் புகுவரேலும்* பாதியும் உறங்கிப் போகும்* நின்றதிற் பதினையாண்டு ** பேதை பாலகன் அது ஆகும்* பிணி பசி மூப்புத் துன்பம் * ஆதலால் பிறவி வேண்டேன்* அரங்க மா நகருளானே (3)
|
திருமாலை
|
1
|
1
|
4
|
875 மொய்த்த வல்வினையுள் நின்று* மூன்று எழுத்து உடைய பேரால்* கத்திரபந்தும் அன்றே* பராங்கதி கண்டு கொண்டான் ** இத்தனை அடியர் ஆனார்க்கு* இரங்கும் நம் அரங்கன் ஆய * பித்தனைப் பெற்றும் அந்தோ* பிறவியுள் பிணங்குமாறே (4)
|
திருமாலை
|
1
|
1
|
5
|
876 பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்* பெரியது ஓர் இடும்பை பூண்டு* உண்டு இராக் கிடக்கும் போது* உடலுக்கே கரைந்து நைந்து ** தண் துழாய்-மாலை மார்பன்* தமர்களாய்ப் பாடி ஆடி* தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத்* தொழும்பர்சோறு உகக்குமாறே (5)
|
திருமாலை
|
1
|
1
|
6
|
877 மறம் சுவர் மதில் எடுத்து * மறுமைக்கே வெறுமை பூண்டு * புறம் சுவர் ஓட்டை மாடம் * புரளும் போது அறிய மாட்டீர் ** அறம் சுவர் ஆகி நின்ற * அரங்கனார்க்கு ஆட் செய்யாதே * புறஞ் சுவர்க் கோலஞ் செய்து * புள் கௌவக் கிடக்கின்றீரே (6)
|
திருமாலை
|
1
|
1
|
7
|
878 புலை-அறம் ஆகி நின்ற * புத்தொடு சமணம் எல்லாம் * கலை அறக் கற்ற மாந்தர் * காண்பரோ? கேட்பரோ தாம்? ** தலை அறுப்பு உண்டும் சாவேன் * சத்தியம் காண்மின் ஐயா * சிலையினால் இலங்கை செற்ற * தேவனே தேவன் ஆவான் (7)
|
திருமாலை
|
1
|
1
|
8
|
879 வெறுப்பொடு சமணர் முண்டர் * விதி இல் சாக்கியர்கள் * நின்பால் பொறுப்பு அரியனகள் பேசில் * போவதே நோயது ஆகி ** குறிப்பு எனக்கு அடையும் ஆகில் * கூடுமேல் தலையை * ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய் * அரங்க மா நகருளானே (8)
|
திருமாலை
|
1
|
1
|
9
|
880 மற்றும் ஓர் தெய்வம் உண்டே? * மதி இலா மானிடங்காள் * உற்றபோது அன்றி நீங்கள் * ஒருவன் என்று உணர மாட்டீர் ** அற்றம் மேல் ஒன்று அறியீர் * அவன் அல்லால் தெய்வம் இல்லை * கற்றினம் மேய்த்த எந்தை * கழலிணை பணிமின் நீரே (9)
|
திருமாலை
|
1
|
1
|
10
|
881 நாட்டினான் தெய்வம் எங்கும் * நல்லது ஓர் அருள் தன்னாலே * காட்டினான் திருவரங்கம் * உய்பவர்க்கு உய்யும் வண்ணம் ** கேட்டிரே நம்பிமீர்காள் * கெருடவா கனனும் நிற்கச் * சேட்டை தன் மடியகத்துச் * செல்வம் பார்த்து இருக்கின்றீரே (10)
|
திருமாலை
|
1
|
1
|
11
|
882 ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் * அடைத்து உலகங்கள் உய்யச் * செருவிலே அரக்கர்கோனைச் * செற்ற நம் சேவகனார் ** மருவிய பெரிய கோயில் * மதில்-திருவரங்கம் என்னா * கருவிலே திரு இலாதீர் * காலத்தைக் கழிக்கின்றீரே (11)
|
திருமாலை
|
1
|
1
|
12
|
883 நமனும் முற்கலனும் பேச * நரகில் நின்றார்கள் கேட்க * நரகமே சுவர்க்கம் ஆகும் * நாமங்கள் உடையன் நம்பி ** அவனது ஊர் அரங்கம் என்னாது * அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் * கவலையுள் படுகின்றார் என்று * அதனுக்கே கவல்கின்றேனே (12)
|
திருமாலை
|
1
|
1
|
13
|
884 எறியும் நீர் வெறிகொள் வேலை * மாநிலத்து உயிர்கள் எல்லாம் * வெறிகொள் பூந்துளவ மாலை * விண்ணவர்கோனை ஏத்த ** அறிவு இலா மனிசர் எல்லாம் * அரங்கம் என்று அழைப்பராகில் * பொறியில் வாழ் நரகம் எல்லாம் * புல் எழுந்து ஒழியும் அன்றே (13)
|
திருமாலை
|
1
|
1
|
14
|
885 ## வண்டினம் முரலும் சோலை * மயிலினம் ஆலும் சோலை * கொண்டல் மீது அணவும் சோலை * குயிலினம் கூவும் சோலை ** அண்டர்கோன் அமரும் சோலை * அணி திருவரங்கம் என்னா * மிண்டர்பாய்ந்து உண்ணும்சோற்றை விலக்கி * நாய்க்கு இடுமின் நீரே (14)
|
திருமாலை
|
1
|
1
|
15
|
886 மெய்யர்க்கே மெய்யன் ஆகும் * விதி இலா என்னைப் போலப் * பொய்யர்க்கே பொய்யன் ஆகும் * புட்கொடி உடைய கோமான் ** உய்யப்போம் உணர்வினார்கட்கு * ஒருவன் என்று உணர்ந்த பின்னை * ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் * அழகன் ஊர் அரங்கம் அன்றே (15)
|
திருமாலை
|
1
|
1
|
16
|
887 சூதனாய்க் கள்வனாகித் * தூர்த்தரோடு இசைந்த காலம் * மாதரார் கயற்கண் என்னும் * வலையுள் பட்டு அழுந்துவேனைப் ** போதரே என்று சொல்லிப் * புந்தியுள் புகுந்து * தன்பால் ஆதரம் பெருக வைத்த * அழகன் ஊர் அரங்கம் அன்றே (16)
|
திருமாலை
|
1
|
1
|
17
|
888 விரும்பி நின்று ஏத்த மாட்டேன் * விதி இலேன் மதி ஒன்று இல்லை * இரும்புபோல் வலிய நெஞ்சம் * இறை-இறை உருகும் வண்ணம் ** சுரும்பு அமர் சோலை சூழ்ந்த * அரங்க மா கோயில் கொண்ட * கரும்பினைக் கண்டு கொண்டு * என் கண்ணினை களிக்குமாறே (17)
|
திருமாலை
|
1
|
1
|
18
|
889 இனி திரைத் திவலை மோத * எறியும் தண் பரவை மீதே * தனி கிடந்து அரசு செய்யும் * தாமரைக்கண்ணன் எம்மான் ** கனி இருந்தனைய செவ்வாய்க் * கண்ணனைக் கண்ட கண்கள் * பனி-அரும்பு உதிருமாலோ * என் செய்கேன் பாவியேனே? (18)
|
திருமாலை
|
1
|
1
|
19
|
890 ## குடதிசை முடியை வைத்துக் * குணதிசை பாதம் நீட்டி * வடதிசை பின்பு காட்டித் * தென்திசை இலங்கை நோக்கிக் ** கடல்-நிறக் கடவுள் எந்தை * அரவணைத் துயிலுமா கண்டு * உடல் எனக்கு உருகுமாலோ * என் செய்கேன் உலகத்தீரே? (19)
|
திருமாலை
|
1
|
1
|
20
|
891 பாயும் நீர் அரங்கந் தன்னுள் * பாம்பு-அணைப் பள்ளிகொண்ட * மாயனார் திரு நன் மார்வும் * மரகத-உருவும் தோளும் ** தூய தாமரைக் கண்களும் * துவர்-இதழ்ப் பவள-வாயும் * ஆய சீர் முடியும் தேசும் * அடியரோர்க்கு அகலல் ஆமே? (20)
|
திருமாலை
|
1
|
1
|
21
|
892 பணிவினால் மனமது ஒன்றிப் * பவள-வாய் அரங்கனார்க்குத் * துணிவினால் வாழ மாட்டாத் * தொல்லை நெஞ்சே நீ சொல்லாய் ** அணியின் ஆர் செம்பொன் ஆய * அருவரை அனைய கோயில் * மணி அனார் கிடந்தவாற்றை * மனத்தினால் நினைக்கல் ஆமே? (21)
|
திருமாலை
|
1
|
1
|
22
|
893 பேசிற்றே பேசல் அல்லால்* பெருமை ஒன்று உணரல் ஆகாது * ஆசற்றார் தங்கட்கு அல்லால் * அறியல் ஆவானும் அல்லன் ** மாசற்றார் மனத்துளானை * வணங்கி நாம் இருப்பது அல்லால் * பேசத்தான் ஆவது உண்டோ? * பேதை நெஞ்சே நீ சொல்லாய் (22)
|
திருமாலை
|
1
|
1
|
23
|
894 கங்கையிற் புனிதம் ஆய * காவிரி நடுவுபாட்டுப் * பொங்குநீர் பரந்து பாயும் * பூம்பொழில் அரங்கந் தன்னுள் ** எங்கள் மால் இறைவன் ஈசன் * கிடந்தது ஓர் கிடக்கை கண்டும் * எங்ஙனம் மறந்து வாழ்கேன்? * ஏழையேன் ஏழையேனே (23)
|
திருமாலை
|
1
|
1
|
24
|
895 வெள்ள-நீர் பரந்து பாயும் * விரி பொழில் அரங்கந் தன்னுள் * கள்வனார் கிடந்தவாறும் * கமல நன் முகமும் கண்டும் ** உள்ளமே வலியை போலும் * ஒருவன் என்று உணர மாட்டாய் * கள்ளமே காதல் செய்து * உன் கள்ளத்தே கழிக்கின்றாயே (24)
|
திருமாலை
|
1
|
1
|
25
|
896 குளித்து மூன்று அனலை ஓம்பும் * குறிகொள் அந்தணமை தன்னை * ஒளித்திட்டேன் என்கண் இல்லை * நின்கணும் பத்தன் அல்லேன் ** களிப்பது என் கொண்டு? நம்பீ * கடல்வண்ணா கதறுகின்றேன் * அளித்து எனக்கு அருள்செய் கண்டாய் * அரங்க மா நகருளானே (25)
|
திருமாலை
|
1
|
1
|
26
|
897 போதெல்லாம் போது கொண்டு * உன் பொன்னடி புனைய மாட்டேன் * தீதிலா மொழிகள் கொண்டு * உன் திருக்குணம் செப்ப மாட்டேன் ** காதலால் நெஞ்சம் அன்பு * கலந்திலேன் அது தன்னாலே * ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே * என் செய்வான் தோன்றினேனே? (26)
|
திருமாலை
|
1
|
1
|
27
|
898 குரங்குகள் மலையை நூக்கக் * குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித் * தரங்க நீர் அடைக்கல் உற்ற * சலம் இலா அணிலும் போலேன் ** மரங்கள் போல் வலிய நெஞ்ச * வஞ்சனேன் நெஞ்சு தன்னால் * அரங்கனார்க்கு ஆட் செய்யாதே * அளியத்தேன் அயர்க்கின்றேனே (27)
|
திருமாலை
|
1
|
1
|
28
|
899 உம்பரால் அறியல் ஆகா * ஒளியுளார் ஆனைக்கு ஆகிச் * செம் புலால் உண்டு வாழும் * முதலைமேல் சீறி வந்தார் ** நம் பரம் ஆயது உண்டே? * நாய்களோம் சிறுமை ஓரா * எம்பிராற்கு ஆட் செய்யாதே * என் செய்வான் தோன்றினேனே (28)
|
திருமாலை
|
1
|
1
|
29
|
900 ஊர் இலேன் காணி இல்லை * உறவு மற்று ஒருவர் இல்லை * பாரில் நின் பாத மூலம் * பற்றிலேன் பரம மூர்த்தி ** காரொளி வண்ணனே என் * கண்ணனே கதறுகின்றேன் * ஆர் உளர் களைகண்? அம்மா * அரங்க மா நகருளானே (29)
|
திருமாலை
|
1
|
1
|
30
|
901 மனத்தில் ஓர் தூய்மை இல்லை * வாயில் ஓர் இன்சொல் இல்லை * சினத்தினால் செற்றம் நோக்கித் * தீவிளி விளிவன் வாளா ** புனத்துழாய் மாலையானே * பொன்னி சூழ் திருவரங்கா * எனக்கு இனிக் கதி என் சொல்லாய்? * என்னை ஆளுடைய கோவே (30)
|
திருமாலை
|
1
|
1
|
31
|
902 தவத்துளார் தம்மில் அல்லேன் * தனம் படைத்தாரில் அல்லேன் * உவர்த்த நீர் போல * என்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன் ** துவர்த்த செவ்வாயினார்க்கே * துவக்கு அறத் துரிசன் ஆனேன் * அவத்தமே பிறவி தந்தாய் * அரங்க மா நகருளானே (31)
|
திருமாலை
|
1
|
1
|
32
|
903 ஆர்த்து வண்டு அலம்பும் சோலை * அணி திரு அரங்கந் தன்னுள் * கார்த் திரள் அனைய மேனிக் * கண்ணனே உன்னைக் காணும் ** மார்க்கம் ஒன்று அறியமாட்டா * மனிசரில் துரிசனாய * மூர்க்கனேன் வந்து நின்றேன் * மூர்க்கனேன் மூர்க்கனேனே (32)
|
திருமாலை
|
1
|
1
|
33
|
904 மெய் எல்லாம் போக விட்டு * விரிகுழலாரிற் பட்டுப் * பொய் எல்லாம் பொதிந்து கொண்ட * போழ்க்கனேன் வந்து நின்றேன் ** ஐயனே அரங்கனே * உன் அருள் என்னும் ஆசை தன்னால் * பொய்யனேன் வந்து நின்றேன் * பொய்யனேன் பொய்யனேனே (33)
|
திருமாலை
|
1
|
1
|
34
|
905 உள்ளத்தே உறையும் மாலை * உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக் * கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் * தொண்டுக்கே கோலம் பூண்டு ** உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் * உடன் இருந்து அறிதி என்று * வெள்கிப்போய் என்னுள்ளே நான் * விலவு அறச் சிரித்திட்டேனே (34)
|
திருமாலை
|
1
|
1
|
35
|
906 தாவி அன்று உலகம் எல்லாம் *தலைவிளாக்கொண்ட எந்தாய் * சேவியேன் உன்னை அல்லால் * சிக்கெனச் செங்கண் மாலே ** ஆவியே அமுதே * என்தன் ஆருயிர் அனைய எந்தாய் * பாவியேன் உன்னை அல்லால் * பாவியேன் பாவியேனே (35)
|
திருமாலை
|
1
|
1
|
36
|
907 மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் * மைந்தனே மதுர ஆறே * உழைக் கன்றே போல நோக்கம் * உடையவர் வலையுள் பட்டு ** உழைக்கின்றேற்கு என்னை நோக்காது * ஒழிவதே உன்னை யன்றே * அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி * அரங்கமா நகருளானே (36)
|
திருமாலை
|
1
|
1
|
37
|
908 தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ்* திருவரங்கத்துள் ஓங்கும் * ஒளியுளார் தாமே யன்றே * தந்தையும் தாயும் ஆவார்? ** எளியது ஓர் அருளும் அன்றே * என் திறத்து? எம்பிரானார் * அளியன் நம் பையல் என்னார் * அம்மவோ கொடியவாறே (37)
|
திருமாலை
|
1
|
1
|
38
|
909 ## மேம் பொருள் போக விட்டு * மெய்ம்மையை மிக உணர்ந்து * ஆம் பரிசு அறிந்துகொண்டு * ஐம்புலன் அகத்து அடக்கிக் ** காம்பு அறத் தலை சிரைத்து * உன் கடைத்தலை இருந்து வாழும் * சோம்பரை உகத்தி போலும் * சூழ் புனல் அரங்கத்தானே (38)
|
திருமாலை
|
1
|
1
|
39
|
910 அடிமையிற் குடிமை இல்லா * அயல் சதுப்பேதிமாரிற் * குடிமையிற் கடைமை பட்ட * குக்கரில் பிறப்பரேலும் ** முடியினில் துளபம் வைத்தாய் * மொய் கழற்கு அன்பு செய்யும் * அடியரை உகத்தி போலும் * அரங்க மா நகருளானே 39
|
திருமாலை
|
1
|
1
|
40
|
911 திருமறுமார்வ நின்னைச் * சிந்தையுள் திகழ வைத்து * மருவிய மனத்தர் ஆகில் * மா நிலத்து உயிர்கள் எல்லாம் ** வெருவு உறக் கொன்று சுட்டிட்டு * ஈட்டிய வினையரேலும் * அருவினைப் பயன துய்யார் * அரங்க மா நகருளானே (40)
|
திருமாலை
|
1
|
1
|
41
|
912 வானுளார் அறியல் ஆகா * வானவா என்பர் ஆகில் * தேனுலாம் துளப மாலைச் * சென்னியாய் என்பர் ஆகில் ** ஊனம் ஆயினகள் செய்யும் * ஊனகாரகர்களேலும் * போனகம் செய்த சேடம் * தருவரேல் புனிதம் அன்றே (41)
|
திருமாலை
|
1
|
1
|
42
|
913 பழுது இலா ஒழுகல்-ஆற்றுப் * பல சதுப்பேதிமார்கள் * இழிகுலத்தவர்களேலும் * எம் அடியார்கள் ஆகில் ** தொழுமின் நீர் கொடுமின் கொண்மின் * என்று நின்னோடும் ஒக்க * வழிபட அருளினாய் போல் * மதில்-திருவரங்கத்தானே (42)
|
திருமாலை
|
1
|
1
|
43
|
914 அமர ஓர் அங்கம் ஆறும் * வேதம் ஓர் நான்கும் ஓதித் * தமர்களிற் தலைவராய * சாதி-அந்தணர்களேலும் ** நுமர்களைப் பழிப்பர் ஆகில் * நொடிப்பது ஓர் அளவில் * ஆங்கே அவர்கள்தாம் புலையர் போலும் * அரங்க மா நகருளானே (43)
|
திருமாலை
|
1
|
1
|
44
|
915 ## பெண் உலாம் சடையினானும் * பிரமனும் உன்னைக் காண்பான் * எண் இலா ஊழி ஊழி * தவம் செய்தார் வெள்கி நிற்ப ** விண் உளார் வியப்ப வந்து * ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறா * உன்னை என்னோ? * களைகணாக் கருதுமாறே (44)
|
திருமாலை
|
1
|
1
|
45
|
916 ## வள எழும் தவள மாட * மதுரை மா நகரந் தன்னுள் * கவள மால் யானை கொன்ற * கண்ணனை அரங்க-மாலைத் ** துளவத் தொண்டு ஆய தொல் சீர்த் * தொண்டரடிப் பொடி சொல் * இளைய புன் கவிதையேலும் * எம்பிராற்கு இனியவாறே (45)
|
திருப்பள்ளியெழுச்சி
|
1
|
1
|
1
|
917 ## கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்* கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய் * மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்* வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி ** எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த* இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் * அதிர்தலில் அலை-கடல் போன்றுளது எங்கும்* அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (1)
|
திருப்பள்ளியெழுச்சி
|
1
|
2
|
2
|
918 கொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக் * கூர்ந்தது குண-திசை மாருதம் இதுவோ* எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்* ஈன்பணி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி ** விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய்* வெள் எயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி* அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த * அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (2)
|
திருப்பள்ளியெழுச்சி
|
1
|
3
|
3
|
919 சுடர்-ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்* துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி* படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ* பாயிருள் அகன்றது பைம் பொழிற் கமுகின் ** மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற* வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ* அடல்-ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை* அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (3)
|
திருப்பள்ளியெழுச்சி
|
1
|
4
|
4
|
920 மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்* வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்* ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் * இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை ** வாட்டிய வரிசிலை வானவர் ஏறே * மா முனி வேள்வியைக் காத்து*அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே* அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (4)
|
திருப்பள்ளியெழுச்சி
|
1
|
5
|
5
|
921 .புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்* போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி* கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம்* களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த ** அலங்கல் அம் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்* அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா* இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில் * எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. (5)
|
திருப்பள்ளியெழுச்சி
|
1
|
6
|
6
|
922 இரவியர் மணி நெடுந் தேரொடும் இவரோ* இறையவர் பதினொரு விடையரும் இவரோ* மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ* மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி ** புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்* குமர-தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம் * அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ* அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (6)
|
திருப்பள்ளியெழுச்சி
|
1
|
7
|
7
|
923 .அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ* அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ * இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ * எம்பெருமான் உன கோயிலின் வாசல் ** சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க * இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான் * அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ * அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (7)
|
திருப்பள்ளியெழுச்சி
|
1
|
8
|
8
|
924 வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க * மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா * எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு* ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர் ** தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ * தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி * அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள் போய் * அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (8)
|
திருப்பள்ளியெழுச்சி
|
1
|
9
|
9
|
925 ## ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி * யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி * கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் * கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம் ** மாதவர் வானவர் சாரணர் இயக்கர்* சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் * ஆதலில் அவர்க்கு நாள்-ஓலக்கம் அருள * அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே. (9)
|
திருப்பள்ளியெழுச்சி
|
1
|
10
|
10
|
926 ## கடி-மலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ* கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ* துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்* துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா ** தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து * தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும் அடியனை* அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய்* பள்ளி எழுந்தருளாயே (10)
|
அமலனாதிபிரான்
|
1
|
1
|
1
|
927 ## . அமலன் ஆதிபிரான்* அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்* விண்ணவர்கோன்* விரையார் பொழில் வேங்கடவன் * * நிமலன் நின்மலன் நீதி வானவன்* நீள் மதில் அரங்கத்து அம்மான்* திருக் கமல பாதம் வந்து * என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே (1)
|
அமலனாதிபிரான்
|
1
|
2
|
2
|
928 உவந்த உள்ளத்தனாய்* உலகம் அளந்து அண்டம் உற* நிவந்த நீள் முடியன்* அன்று நேர்ந்த நிசாசரரை* * கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்* கடியார் பொழில் அரங்கத்து அம்மான்* அரைச் சிவந்த ஆடையின் மேல்* சென்றது ஆம் என சிந்தனையே (2)
|
அமலனாதிபிரான்
|
1
|
3
|
3
|
929 ## . மந்தி பாய்* வட வேங்கட மா மலை* வானவர்கள் சந்தி செய்ய நின்றான்* அரங்கத்து அரவினணையான் * * அந்தி போல் நிறத்து ஆடையும்* அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில்* உந்தி மேலது அன்றோ* அடியேன் உள்ளத்து இன்னுயிரே (3)
|
அமலனாதிபிரான்
|
1
|
4
|
4
|
930 சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன்* தலை பத்து உதிர ஓட்டி* ஓர் வெங்கணை உய்த்தவன்* ஓதவண்ணன் * * மதுர மா வண்டு பாட* மா மயில் ஆடு அரங்கத்து அம்மான்* திரு வயிற்று உதர பந்தம்* என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே (4)
|
அமலனாதிபிரான்
|
1
|
5
|
5
|
931 பாரமமாய* பழவினை பற்றறுத்து * என்னைத் தன் வாரம் ஆக்கி வைத்தான்* வைத்தது அன்றி என் உள் புகுந்தான்* * கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான் திரு ஆர மார்ப த ன்றோ* அடியேனை ஆட்கொண்டதே (5)
|
அமலனாதிபிரான்
|
1
|
6
|
6
|
932 துண்ட வெண் பிறையன்* துயர் தீர்த்தவன் *அஞ்சிறைய- வண்டு வாழ் பொழில் சூழ்* அரங்க நகர் மேய அப்பன்* * அண்டரண்ட பகிரண்டத்து* ஒரு மா நிலம் எழு மால் வரை* முற்றும் உண்ட கண்டம் கண்டீர்* அடியேனை உய் யக் கொண்டதே (6)
|
அமலனாதிபிரான்
|
1
|
7
|
7
|
933 கையின் ஆர்* சுரி சங்கு அன லாழியர் நீள் வரைபோல் மெய்யனார்* துளப விரையார் கமழ்* நீள் முடி எம் * * ஐயனார்* அணி அரங்கனார் * அர வின ணைமிசை மேய மாயனார்* செய்ய வாய் ஐயோ* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே (7)
|
அமலனாதிபிரான்
|
1
|
8
|
8
|
934 பரியனாகி வந்த* அவுணன் உடல் கீண்ட* அமரர்க்கு அரிய ஆதிப்பிரான்* அரங்கத்து அமலன் முகத்துக்* * கரிய ஆகிப் புடை பரந்து* மிளிர்ந்து செவ்வரி ஓடி* நீண்ட அப் பெரிய ஆய கண்கள்* என்னைப் பேதைமை செய்தனவே (8)
|
அமலனாதிபிரான்
|
1
|
9
|
9
|
935 ## . ஆல மா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய் * ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின ணையான்* * கோல மா மணி-ஆரமும்* முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில் * நீல மேனி ஐயோ* நிறைகொண்டது என் நெஞ்சினையே (9)
|
அமலனாதிபிரான்
|
1
|
10
|
10
|
936 ## . கொண்டல்வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்* என் உள்ளம் கவர்ந்தானை * * அண்டர்கோன் அணி-அரங்கன்* என் அமுதினைக் கண்ட கண்கள்* மற்றொன்றினைக் காணாவே (10)
|
பெரிய திருமொழி
|
1
|
8
|
2
|
1019 ## பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம் * இரங்க வன் பேய் முலை * பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை * பிரான்-அவன் பெருகும் இடம் ** வெள்ளியான் கரியான் * மணி நிற வண்ணன் என்று எண்ணி * நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத் * திருவேங்கடம் அடை நெஞ்சமே-2
|
பெரிய திருமொழி
|
3
|
7
|
6
|
1213 என் துணை என்று எடுத்தேற்கு * இறையேனும் இரங்கிற்றிலள் * தன் துணை ஆய என்-தன் * தனிமைக்கும் இரங்கிற்றிலள் ** வன் துணை வானவர்க்கு ஆய் * வரம் செற்று அரங்கத்து உறையும் * இன் துணைவனொடும் போய் * எழில் ஆலி புகுவர்கொலோ?-6
|
பெரிய திருமொழி
|
5
|
4
|
1
|
1378 ## உந்திமேல் நான்முகனைப் படைத்தான்* உலகு உண்டவன் எந்தை பெம்மான்* இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால் **- சந்தினோடு மணியும் கொழிக்கும்* புனல் காவிரி* அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ்* தென் அரங்கமே-1
|
பெரிய திருமொழி
|
5
|
4
|
2
|
1379 வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன்* மணி நீள் முடி* பை கொள் நாகத்து அணையான்* பயிலும் இடம் என்பரால் **- தையல் நல்லார் குழல் மாலையும்* மற்று அவர் தட முலைச்* செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ்* தென் அரங்கமே-2
|
பெரிய திருமொழி
|
5
|
4
|
3
|
1380 பண்டு இவ் வையம் அளப்பான் சென்று* மாவலி கையில் நீர கொண்ட* ஆழித் தடக் கைக்* குறளன் இடம் என்பரால் **- வண்டு பாடும் மது வார்* புனல் வந்து இழி காவிரி* அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே-3
|
பெரிய திருமொழி
|
5
|
4
|
4
|
1381 விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன்* நகர் பாழ்பட* வளைத்த வல் வில் தடக்கை-அவனுக்கு* இடம் என்பரால் **- துளைக் கை யானை மருப்பும் அகிலும்* கொணர்ந்து உந்தி* முன் திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ்* தென் அரங்கமே-4
|
பெரிய திருமொழி
|
5
|
4
|
5
|
1382 வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன்* வான் புக* அம்பு-தன்னால் முனிந்த* அழகன் இடம் என்பரால் **- உம்பர்-கோனும் உலகு ஏழும்* வந்து ஈண்டி வணங்கும்* நல் செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே-5
|
பெரிய திருமொழி
|
5
|
4
|
6
|
1383 கலை உடுத்த அகல் அல்குல்* வன் பேய் மகள் தாய் என* முலை கொடுத்தாள் உயிர் உண்டவன்* வாழ் இடம் என்பரால் **- குலை எடுத்த கதலிப்* பொழிலூடும் வந்து உந்தி* முன் அலை எடுக்கும் புனல் காவிரி சூழ்* தென் அரங்கமே-6
|
பெரிய திருமொழி
|
5
|
4
|
7
|
1384 கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும்* சகடமும் காலினால்* துஞ்ச வென்ற சுடர் ஆழியான்* வாழ் இடம் என்பரால் **- மஞ்சு சேர் மாளிகை* நீடு அகில் புகையும் மா மறையோர்* செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்* தென் அரங்கமே-7
|
பெரிய திருமொழி
|
5
|
4
|
8
|
1385 ஏனம் மீன் ஆமையோடு * அரியும் சிறு குறளும் ஆய் * தானும் ஆய * தரணித் தலைவன் இடம் என்பரால் ** வானும் மண்ணும் நிறையப் * புகுந்து ஈண்டி வணங்கும் * நல்தேனும் பாலும் கலந்த * அன்னவர் சேர் தென் அரங்கமே-8
|
பெரிய திருமொழி
|
5
|
4
|
9
|
1386 சேயன் என்றும் மிகப் பெரியன்* நுண் நேர்மையன் ஆய* இம் மாயை ஆரும் அறியா* வகையான் இடம் என்பரால் **- வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து* ஆர் புனல் காவிரி* ஆய பொன் மா மதிள் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே-9
|
பெரிய திருமொழி
|
5
|
4
|
10
|
1387 ## அல்லி மாதர் அமரும்* திரு மார்வன் அரங்கத்தைக்* கல்லின் மன்னு மதிள்* மங்கையர்-கோன் கலிகன்றி சொல் **நல் இசை மாலைகள்* நால் இரண்டும் இரண்டும் உடன்* வல்லவர்-தாம் உலகு ஆண்டு* பின் வான் உலகு ஆள்வரே-10
|
பெரிய திருமொழி
|
5
|
5
|
1
|
1388 ## வெருவாதாள் வாய்வெருவி* வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்* மருவாளால் என் குடங்கால்* வாள் நெடுங் கண் துயில் மறந்தாள் **-வண்டு ஆர் கொண்டல் உருவாளன் வானவர்-தம் உயிராளன்* ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட திருவாளன்* என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சிந்திக்கேனே?-1
|
பெரிய திருமொழி
|
5
|
5
|
2
|
1389 கலை ஆளா அகல் அல்குல்* கன வளையும் கை ஆளா-என் செய்கேன் நான்?* விலை ஆளா அடியேனை* வேண்டுதியோ? வேண்டாயோ? என்னும் **-மெய்ய மலையாளன் வானவர்-தம் தலையாளன்* மராமரம் ஏழ் எய்த வென்றிச் சிலையாளன்* என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சிந்திக்கேனே?-2
|
பெரிய திருமொழி
|
5
|
5
|
3
|
1390 மான் ஆய மென் நோக்கி* வாள் நெடுங் கண் நீர் மல்கும் வளையும் சோரும்* தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்* திறம் பேசி உறங்காள் காண்மின் **- கான்-ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக* நந்தன் பெற்ற ஆன்-ஆயன்* என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர் அறிகிலேனே-3
|
பெரிய திருமொழி
|
5
|
5
|
4
|
1391 தாய் வாயில் சொல் கேளாள்* தன் ஆயத் தோடு அணையாள் தட மென் கொங்கை- யே *ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் **- பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட பெரு வயிற்றன்* பேசில் நங்காய்* மா மாயன் என் மகளைச் செய்தனகள்* மங்கைமீர் மதிக்கிலேனே-4
|
பெரிய திருமொழி
|
5
|
5
|
5
|
1392 பூண் முலைமேல் சாந்து அணியாள்* பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்* ஏண் அறியாள் எத்தனையும் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் **- நாள் மலராள் நாயகன்* ஆய் நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி* ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர்-5
|
பெரிய திருமொழி
|
5
|
5
|
6
|
1393 தாது ஆடு வன மாலை* தாரானோ? என்று என்றே தளர்ந்தாள் காண்மின்* யாதானும் ஒன்று உரைக்கில்* எம் பெருமான் திருவரங்கம் என்னும் **-பூமேல் மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்* மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற தூதாளன்* என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சொல்லுகேனே?-6
|
பெரிய திருமொழி
|
5
|
5
|
7
|
1394 வார் ஆளும் இளங் கொங்கை* வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள்* எண்ணில் பேராளன் பேர் அல்லால் பேசாள்* இப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்? ** தார் ஆளன் தண் குடந்தை நகர் ஆளன்* ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த தேர் ஆளன்* என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் செப்புகேனே?-7
|
பெரிய திருமொழி
|
5
|
5
|
8
|
1395 உறவு ஆதும் இலள் என்று என்று* ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால்* மறவாதே எப்பொழுதும்* மாயவனே மாதவனே என்கின்றாளால் **- பிறவாத பேராளன் பெண் ஆளன் மண் ஆளன்* விண்ணோர்-தங்கள் அறவாளன்* என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர் அறிகிலேனே-8
|
பெரிய திருமொழி
|
5
|
5
|
9
|
1396 பந்தோடு கழல் மருவாள்* பைங் கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள்* வந்தானோ திருவரங்கன்?* வாரானோ? என்று என்றே வளையும் சோரும் **- சந்தோகன் பௌழியன்* ஐந் தழல் ஓம்பு தைத்திரியன் சாமவேதி* அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர் அறிகிலேனே-9
|
பெரிய திருமொழி
|
5
|
5
|
10
|
1397 ## சேல் உகளும் வயல் புடை சூழ்* திருவரங்கத்து அம்மானைச் சிந்தைசெய்த* நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்* தாய் மொழிந்த-அதனை ** நேரார் கால வேல் பரகாலன்* கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்* மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்* பொன்-உலகில் வாழ்வர்-தாமே-10
|
பெரிய திருமொழி
|
5
|
6
|
1
|
1398 ## கைம் மான மழ களிற்றை* கடல் கிடந்த கருமணியை* மைம் மான மரகதத்தை* மறை உரைத்த திருமாலை ** எம்மானை எனக்கு என்றும் இனியானை* பனி காத்த அம்மானை* யான் கண்டது*-அணி நீர்த் தென் அரங்கத்தே-1
|
பெரிய திருமொழி
|
5
|
6
|
2
|
1399 ## பேரானை* குறுங்குடி எம் பெருமானை* திருத்தண்கால் ஊரானை* கரம்பனூர் உத்தமனை ** முத்து இலங்கு கார் ஆர் திண் கடல் ஏழும்* மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு* ஆராது என்று இருந்தானைக்* கண்டது-தென் அரங்கத்தே-2
|
பெரிய திருமொழி
|
5
|
6
|
3
|
1400 ஏன் ஆகி உலகு இடந்து * அன்று இரு நிலனும் பெரு விசும்பும் * தான் ஆய பெருமானை * தன் அடியார் மனத்து என்றும் ** தேன் ஆகி அமுது ஆகித் * திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால் * ஆன்-ஆயன் ஆனானைக் * கண்டது-தென் அரங்கத்தே-3
|
பெரிய திருமொழி
|
5
|
6
|
4
|
1401 வளர்ந்தவனைத் தடங் கடலுள்* வலி உருவில் திரி சகடம்* தளர்ந்து உதிர உதைத்தவனை* தரியாது அன்று இரணியனைப் பிளந்தவனை ** பெரு நிலம் ஈர் அடி நீட்டிப்* பண்டு ஒருநாள் அளந்தவனை* யான் கண்டது*-அணி நீர்த் தென் அரங்கத்தே-4
|
பெரிய திருமொழி
|
5
|
6
|
5
|
1402 நீர் அழல் ஆய்* நெடு நிலன் ஆய் நின்றானை* அன்று அரக்கன்- ஊர் அழலால் உண்டானை* கண்டார் பின் காணாமே ** பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய்* பின் மறையோர் மந்திரத்தின்* ஆர் அழலால் உண்டானைக்* கண்டது-தென் அரங்கத்தே-5
|
பெரிய திருமொழி
|
5
|
6
|
6
|
1403 தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார்* தவ நெறியை தரியாது* கஞ்சனைக் கொன்று* அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை ** வெம் சினத்த கொடுந் தொழிலோன்* விசை உருவை அசைவித்த* அம் சிறைப் புள் பாகனை* யான் கண்டது-தென் அரங்கத்தே-6
|
பெரிய திருமொழி
|
5
|
6
|
7
|
1404 ## சிந்தனையை தவநெறியை* திருமாலை* பிரியாது வந்து எனது மனத்து இருந்த* வடமலையை ** வரி வண்டு ஆர் கொந்து அணைந்த பொழில் கோவல்* உலகு அளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை* யான் கண்டது*-அணி நீர்த் தென் அரங்கத்தே-7
|
பெரிய திருமொழி
|
5
|
6
|
8
|
1405 துவரித்த உடையவர்க்கும்* தூய்மை இல்லாச் சமணர்க்கும்* அவர்கட்கு அங்கு அருள் இல்லா* அருளானை ** தன் அடைந்த எமர்கட்கும் அடியேற்கும்* எம்மாற்கும் எம் அனைக்கும்* அமரர்க்கும் பிரானாரைக்* கண்டது-தென் அரங்கத்தே-8
|
பெரிய திருமொழி
|
5
|
6
|
9
|
1406 பொய் வண்ணம் மனத்து அகற்றி* புலன் ஐந்தும் செல வைத்து* மெய் வண்ணம் நினைந்தவர்க்கு* மெய்ந் நின்ற வித்தகனை ** மை வண்ணம் கரு முகில்போல்* திகழ் வண்ணம் மரகதத்தின்* அவ் வண்ண வண்ணனை* யான் கண்டது-தென் அரங்கத்தே-9
|
பெரிய திருமொழி
|
5
|
6
|
10
|
1407 ## ஆ மருவி நிரை மேய்த்த* அணி அரங்கத்து அம்மானைக்* காமரு சீர்க் கலிகன்றி* ஒலிசெய்த மலி புகழ் சேர் ** நா மருவு தமிழ்-மாலை* நால் இரண்டோடு இரண்டினையும்* தாம் மருவி வல்லார்மேல்* சாரா தீவினை தாமே-10
|
பெரிய திருமொழி
|
5
|
7
|
1
|
1408 ## பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப்* பதங்களும் பதங்களின் பொருளும்* பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்* பெருகிய புனலொடு நிலனும் ** கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்* ஏழு மா மலைகளும் விசும்பும்* அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்*- அரங்க மா நகர் அமர்ந்தானே-1
|
பெரிய திருமொழி
|
5
|
7
|
2
|
1409 இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் * எண் இல் பல் குணங்களே இயற்ற * தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் * சுற்றி நின்று அகலாப் பந்தமும் ** பந்தம் அறுப்பது ஓர் மருந்தும் பான்மையும்* பல் உயிர்க்கு எல்லாம்* அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்*- அரங்க மா நகர் அமர்ந்தானே-2
|
பெரிய திருமொழி
|
5
|
7
|
3
|
1410 மன்னு மா நிலனும் மலைகளும் கடலும்* வானமும் தானவர் உலகும்* துன்னு மா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி* தொல்லை நான்மறைகளும் மறைய ** பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி* பிறங்கு இருள் நிறம் கெட *ஒருநாள் அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்* -அரங்க மா நகர் அமர்ந்தானே-3
|
பெரிய திருமொழி
|
5
|
7
|
4
|
1411 மா இருங் குன்றம் ஒன்று மத்து ஆக* மாசுணம் அதனொடும் அளவி* பா இரும் பௌவம் பகடு விண்டு அலற* படு திரை விசும்பிடைப் படர ** சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும்* தேவரும் தாம் உடன் திசைப்ப* ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்*- அரங்க மா நகர் அமர்ந்தானே-4
|
பெரிய திருமொழி
|
5
|
7
|
5
|
1412 எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்?* -இரணியன் இலங்கு பூண் அகலம்* பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து* பொழிதரும் அருவி ஒத்து இழிய ** வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்* விண் உறக் கனல் விழித்து எழுந்தது* அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்*- அரங்க மா நகர் அமர்ந்தானே-5
|
பெரிய திருமொழி
|
5
|
7
|
6
|
1413 ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய* அடல் புரை எழில் திகழ் திரள் தோள்* ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி* மற்று அவன் அகல் விசும்பு அணைய ** ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச* அறிதுயில் அலை கடல் நடுவே* ஆயிரம் சுடர் வாய் அரவு-அணைத் துயின்றான்*- அரங்க மா நகர் அமர்ந்தானே-6
|
பெரிய திருமொழி
|
5
|
7
|
7
|
1414 சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த* கொடுமையின் கடு விசை அரக்கன்* எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து* இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி* வரி சிலை வளைய அடு சரம் துரந்து* மறி கடல் நெறிபட* மலையால் அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்*- அரங்க மா நகர் அமர்ந்தானே-7
|
பெரிய திருமொழி
|
5
|
7
|
8
|
1415 ஊழி ஆய் ஓமத்து உச்சி ஆய்* ஒருகால் உடைய தேர் ஒருவன் ஆய்* உலகில் சூழி மால் யானைத் துயர் கெடுத்து* இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து ** பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி* பகலவன் ஒளி கெடப்* பகலே ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்*- அரங்க மா நகர் அமர்ந்தானே-8
|
பெரிய திருமொழி
|
5
|
7
|
9
|
1416 பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய்* ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயன் ஆய்* மால் ஆய் ஆல் இலை வளர்ந்து மணி முடி வானவர்-தமக்கு சேயன் ஆய் ** அடியோர்க்கு அணியன் ஆய் வந்து* என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்* ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்* -அரங்க மா நகர் அமர்ந்தானே-9
|
பெரிய திருமொழி
|
5
|
7
|
10
|
1417 ## பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து* பொரு திரை மா நதி புடை சூழ்ந்து* அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த* அரங்க மா நகர் அமர்ந்தானை* மன்னு மா மாட மங்கையர் தலைவன்* மான வேல் கலியன் வாய் ஒலிகள்* பன்னிய பனுவல் பாடுவார்* நாளும் பழவினை பற்று அறுப்பாரே-10
|
பெரிய திருமொழி
|
5
|
8
|
1
|
1418 ## ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி* மற்று அவற்கு இன் அருள் சுரந்து * மாழை மான் மட நோக்கி உன் தோழி* உம்பி எம்பி என்று ஒழிந்திலை ** உகந்து தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து* அடியேன் மனத்து இருந்திட* ஆழி வண்ண நின் அடி-இணை அடைந்தேன்*- அணி பொழில் திருவரங்கத்து அம்மானே-1
|
பெரிய திருமொழி
|
5
|
8
|
2
|
1419 வாத மா மகன் மர்க்கடம் விலங்கு* மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை* உகந்து காதல் ஆதரம் கடலினும் பெருகச்* செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு ** என்று கோது இல் வாய்மையினாயொடும் உடனே* உண்பன் நான் என்ற ஒண் பொருள்* எனக்கும் ஆதல் வேண்டும் என்று அடி-இணை அடைந்தேன்* -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே-2
|
பெரிய திருமொழி
|
5
|
8
|
3
|
1420 கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை* வைகு தாமரை வாங்கிய வேழம்* முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற* மற்று அது நின் சரண் நினைப்ப ** கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்* கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து* உன அடியனேனும் வந்து அடி-இணை அடைந்தேன்*- அணி பொழில் திருவரங்கத்து அம்மானே-3
|
பெரிய திருமொழி
|
5
|
8
|
4
|
1421 நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம் * வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்* நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு* அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து ** வெம் சொலாளர்கள் நமன்-தமர் கடியர்* கொடிய செய்வன உள* அதற்கு அடியேன் அஞ்சி வந்து நின் அடி-இணை அடைந்தேன்* அணி பொழில் திருவரங்கத்து அம்மானே-4
|
பெரிய திருமொழி
|
5
|
8
|
5
|
1422 மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்* மலர் அடி கண்ட மா மறையாளன்* தோகை மா மயில் அன்னவர் இன்பம்* துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து ** போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே* போதுவாய் என்ற பொன் அருள்* எனக்கும் ஆக வேண்டும் என்று அடி-இணை அடைந்தேன்* -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே-5
|
பெரிய திருமொழி
|
5
|
8
|
6
|
1423 மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை* மதியாத வெம் கூற்றம்- தன்னை அஞ்சி* நின் சரண் என சரண் ஆய்* தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா ** பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம்* எண்ணிய பேர் அருள்* எனக்கும் அன்னது ஆகும் என்று அடி-இணை அடைந்தேன்*- அணி பொழில் திருவரங்கத்து அம்மானே-6
|
பெரிய திருமொழி
|
5
|
8
|
7
|
1424 ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்* உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்* காதல் என் மகன் புகல் இடம் காணேன்* கண்டு நீ தருவாய் எனக்கு என்று ** கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய * குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்*- ஆதலால் வந்து உன் அடி-இணை அடைந்தேன்*- அணி பொழில் திருவரங்கத்து அம்மானே-7
|
பெரிய திருமொழி
|
5
|
8
|
8
|
1425 வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்* எந்தை நின் சரண் என்னுடை மனைவி* காதல் மக்களைப் பயத்தலும் காணாள்* கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப ** ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச் செய்து* உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்* ஆதலால் வந்து உன் அடி-இணை அடைந்தேன்* -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே-8
|
பெரிய திருமொழி
|
5
|
8
|
9
|
1426 துளங்கு நீள் முடி அரசர்-தம் குரிசில்* தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு* உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து* அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப* வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச் செய்த ஆறு* அடியேன் அறிந்து* உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்* -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே-9
|
பெரிய திருமொழி
|
5
|
8
|
10
|
1427 ## மாட மாளிகை சூழ் திருமங்கை -மன்னன்* ஒன்னலர்-தங்களை வெல்லும்* ஆடல்மா வலவன் கலிகன்றி* அணி பொழில் திருவரங்கத்து அம்மானை ** நீடு தொல் புகழ் ஆழி வல்லானை* எந்தையை நெடுமாலை நினைந்த* பாடல் பத்து-இவை பாடுமின் தொண்டீர் பாட* நும்மிடைப் பாவம் நில்லாவே-10
|
பெரிய திருமொழி
|
6
|
6
|
9
|
1506 தார் ஆளன் தண் அரங்க ஆளன்* பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற பேர் ஆளன்* ஆயிரம் பேர் உடைய ஆளன்* பின்னைக்கு மணவாளன்-பெருமை கேட்பீர் ** பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற* படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த* தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே-9
|
பெரிய திருமொழி
|
7
|
3
|
4
|
1571 உரங்களால் இயன்ற மன்னர் மாள * பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று * இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும் எம்பிரானை * வம்பு ஆர் புனல் காவிரி ** அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி * ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று * சரங்கள் ஆண்ட தன் தாமரைக் கண்ணனுக்கு அன்றி * என் மனம் தாழ்ந்து நில்லாதே-4
|
பெரிய திருமொழி
|
8
|
2
|
7
|
1664 தரங்க நீர் பேசினும் * தண் மதி காயினும் * இரங்குமோ? * எத்தனை நாள் இருந்து எள்கினாள் ** துரங்கம் வாய் கீண்டு உகந்தான் * அது தொன்மை * ஊர் அரங்கமே என்பது * இவள்-தனக்கு ஆசையே-7
|
பெரிய திருமொழி
|
9
|
9
|
2
|
1829 புனை வளர் பூம் பொழில் ஆர் * பொன்னி சூழ் அரங்க நகருள் முனைவனை * மூவுலகும் படைத்த * முதல் மூர்த்தி-தன்னை ** சினை வளர் பூம் பொழில் சூழ் * திருமாலிருஞ்சோலை நின்றான் * கனை கழல் காணும்கொலோ-* கயல் கண்ணி எம் காரிகையே?-2
|
பெரிய திருமொழி
|
11
|
3
|
7
|
1978 கண்ணன் மனத்துள்ளே * நிற்கவும் கை வளைகள் * என்னோ கழன்ற? * இவை என்ன மாயங்கள்? ** பெண் ஆனோம் பெண்மையோம் நிற்க * அவன் மேய அண்ணல் மலையும் * அரங்கமும் பாடோமே?
|
பெரிய திருமொழி
|
11
|
8
|
8
|
2029 ## அணி ஆர் பொழில் சூழ் * அரங்க நகர் அப்பா!- * துணியேன் இனி * நின் அருள் அல்லது எனக்கு ** மணியே மணி மாணிக்கமே * மதுசூதா!- * பணியாய் எனக்கு உய்யும் வகை-* பரஞ்சோதீ-8
|
திருக்குருந்தாண்டகம்
|
1
|
1
|
7
|
2038 இம்மையை மறுமை-தன்னை *எமக்கு வீடு ஆகி நின்ற * மெய்ம்மையை விரிந்த சோலை * வியன் திரு அரங்கம் மேய ** செம்மையை கருமை-தன்னை *திருமலை ஒருமையானை * தன்மையை நினைவார் என்-தன் *தலைமிசை மன்னுவாரே-7
|
திருக்குருந்தாண்டகம்
|
1
|
1
|
12
|
2043 ஆவியை அரங்க மாலை *அழுக்கு உடம்பு எச்சில் வாயால் * தூய்மை இல் தொண்டனேன் நான் *சொல்லினேன் தொல்லை நாமம் ** பாவியேன் பிழைத்தவாறு என்று *அஞ்சினேற்கு அஞ்சல் என்று * காவிபோல் வண்ணர் வந்து *என் கண்ணுளே தோன்றினாரே-12
|
திருக்குருந்தாண்டகம்
|
1
|
1
|
13
|
2044 இரும்பு அனன்று உண்ட நீரும் *போதரும் கொள்க *என்-தன் அரும் பிணி பாவம் எல்லாம் *அகன்றன என்னை விட்டு ** சுரும்பு அமர் சோலை சூழ்ந்த *அரங்க மா கோயில் கொண்ட * கரும்பினைக் கண்டுகொண்டு *என் கண்-இணை களிக்குமாறே-13
|
திருக்குருந்தாண்டகம்
|
1
|
1
|
19
|
2050 பிண்டி ஆர் மண்டை ஏந்தி *பிறர் மனை திரிதந்து உண்ணும் * முண்டியான் சாபம் தீர்த்த *ஒருவன் ஊர் **உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் *கச்சி பேர் மல்லை என்று மண்டினார் *உய்யல் அல்லால் *மற்றையார்க்கு உய்யல் ஆமே?-19
|
திரு நெடுந்தாண்டகம்
|
1
|
1
|
11
|
2062 பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் * பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்* எள் துணைப் போது என் குடங்கால் இருக்ககில்லாள்* எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் ** மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல்* மட மானை இது செய்தார்-தம்மை* மெய்யே கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்!*- கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே?-11
|
திரு நெடுந்தாண்டகம்
|
1
|
1
|
12
|
2063 நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்* நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்* நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்* வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும் ** அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும் * அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்* என் சிறகின்கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்* இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே-12
|
திரு நெடுந்தாண்டகம்
|
1
|
1
|
14
|
2065 ## முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை* மூவா மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற* அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை* அந்தணர்-தம் சிந்தையானை ** விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில்* வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு* வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று* மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே-14
|
திரு நெடுந்தாண்டகம்
|
1
|
1
|
18
|
2069 கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்* கைத்தலமும் அடி-இணையும் கமல வண்ணம்* பார் வண்ண மட மங்கை பத்தர்* பித்தர் பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன் ** ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்* எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்* நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்* இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே-18
|
திரு நெடுந்தாண்டகம்
|
1
|
1
|
19
|
2070 முற்று ஆரா வன முலையாள் பாவை* மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் அற்றாள்* தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்* அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ! என்னும் ** பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்* பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி* பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்* பொரு அற்றாள் என் மகள்-உம் பொன்னும் அஃதே-19
|
திரு நெடுந்தாண்டகம்
|
1
|
1
|
23
|
2074 உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து* என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே* தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச்* சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன ** கள் ஊரும் பைந் துழாய் மாலையானைக் * கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது* புள் ஊரும் கள்வா! நீ போகேல் என்பன் * என்றாலும் இது நமக்கு ஓர் புலவி-தானே-23
|
திரு நெடுந்தாண்டகம்
|
1
|
1
|
24
|
2075 இரு கையில் சங்கு-இவை நில்லா எல்லே பாவம்!*- இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட* பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் * பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ ** ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி* உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து* என் பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து* புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே-24
|
திரு நெடுந்தாண்டகம்
|
1
|
1
|
25
|
2076 மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும்* கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்* தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே* தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி ** என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்* என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு* பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே* புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே-25
|
முதல் திருவந்தாதி
|
1
|
1
|
6
|
2087 ஒன்றும் மறந்தறியேன்* ஓத நீர் வண்ணனை நான்* இன்று மறப்பனோ ஏழைகாள்? ** அன்று கரு-அரங்கத்துள் கிடந்து* கைதொழுதேன் கண்டேன் * திருவரங்கம் மேயான் திசை -6
|
இரண்டாம் திருவந்தாதி
|
1
|
1
|
28
|
2209 மனத்து உள்ளான் வேங்கடத்தான் * மா கடலான் * மற்றும் நினைப்பு அரிய * நீள் அரங்கத்து உள்ளான் ** எனைப் பலரும் தேவாதி தேவன்* எனப்படுவான்* முன் ஒரு நாள் மா வாய் பிளந்த மகன் -28
|
இரண்டாம் திருவந்தாதி
|
1
|
1
|
46
|
2227 பயின்றது அரங்கம் திருக்கோட்டி * பல் நாள் பயின்றதுவும் * வேங்கடமே பல்நாள் ** – பயின்றது அணி திகழும் சோலை* அணி நீர் மலையே* மணி திகழும் வண் தடக்கை மால் -46
|
இரண்டாம் திருவந்தாதி
|
1
|
1
|
70
|
2251 தமர் உள்ளம் தஞ்சை* தலை அரங்கம் தண்கால்* தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை ** – தமர் உள்ளும் மாமல்லை கோவல் * மதிள் குடந்தை என்பரே* ஏ வல்ல எந்தைக்கு இடம் -70
|
இரண்டாம் திருவந்தாதி
|
1
|
1
|
88
|
2269 திறம்பிற்று இனி அறிந்தேன் * தென் அரங்கத்து எந்தை * திறம்பா வழிச் சென்றார்க்கு அல்லால் ** – திறம்பாச் செடி நரகை நீக்கி * தாம் செல்வதன் முன் * வானோர் கடி நகர வாசல் கதவு -88
|
மூன்றாம் திருவந்தாதி
|
1
|
1
|
62
|
2343 விண்ணகரம் வெஃகா * விரி திரை நீர் வேங்கடம்* மண் நகரம் மா மாட வேளுக்கை ** – மண்ணகத்த தென் குடந்தை * தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி* தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு 62
|
நான்முகன் திருவந்தாதி
|
1
|
1
|
3
|
2384 பாலில் கிடந்ததுவும் * பண்டு அரங்கம் மேயதுவும்* ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார்? ** – ஞாலத்து ஒரு பொருளை * வானவர் தம் மெய்ப் பொருளை* அப்பில் அரு பொருளை யான் அறிந்த ஆறு (3)
|
நான்முகன் திருவந்தாதி
|
1
|
1
|
30
|
2411 அவன் என்னை ஆளி * அரங்கத்து அரங்கில்* அவன் என்னை எய்தாமல் காப்பான் ** – அவன் என்னது உள்ளத்து* நின்றான் இருந்தான் கிடக்குமே* வெள்ளத்து அரவு அணையின்மேல் -30
|
நான்முகன் திருவந்தாதி
|
1
|
1
|
36
|
2417 ## நாகத்து அணைக் குடந்தை* வெஃகா திரு எவ்வுள்* நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் ** – நாகத்து அணைப் பாற்கடல் கிடக்கும் * ஆதி நெடுமால்* அணைப்பார் கருத்தன் ஆவான் (36)
|
நான்முகன் திருவந்தாதி
|
1
|
1
|
60
|
2441 ஆள் பார்த்து உழிதருவாய் * கண்டுகொள் என்றும் * நின் தாள் பார்த்து உழி தருவேன் தன்மையை ** – கேட்பார்க்கு அரும் பொருளாய் * நின்ற அரங்கனே! * – உன்னை விரும்புவதே விள்ளேன் மனம் -60
|
திருவிருத்தம்
|
1
|
1
|
28
|
2505 தண் அம் துழாய்* வளை கொள்வது யாம் இழப்போம்* நடுவே வண்ணம் துழாவி* ஓர் வாடை உலாவும் ** வள் வாய் அலகால் புள் நந்து உழாமே பொரு நீர்த் திருவரங்கா* அருளாய்* எண்ணம் துழாவுமிடத்து* உளவோ பண்டும் இன்னன்னவே?28
|
சிறிய திருமடல்
|
1
|
1
|
34
|
2706 நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் * சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ லூரே * மதிள் கச்சி ஊரகமே பேரகமே * பேரா மருது இறுத்தான் வெள்றையே வெஃகாவே * பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர் * ஆராமம் சூழ்ந்த அரங்கம் * கணமங்கை-34
|
பெரிய திருமடல்
|
1
|
1
|
63
|
2773 மா மலர்மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி * என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை * கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை * மின்னை, இரு சுடரை, வெள்ளறையுள் கல் அறைமேல் பொன்னை * மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை * மன்னும் அரங்கத்து எம் மா மணியை * 63
|
திருவாய் மொழி
|
7
|
2
|
1
|
3464 ## கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்* கண்ண நீர் கைகளால் இறைக்கும்* சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்* தாமரைக் கண் என்றே தளரும் ** எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு? என்னும்* இரு நிலம் கை துழா இருக்கும்* செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் !* இவள் திறத்து என் செய்கின்றாயே? (1)
|
திருவாய் மொழி
|
7
|
2
|
2
|
3465 என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா? என்னும்* கண்ணீர் மல்க இருக்கும்* என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்? என்னும்* வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும் ** முன் செய்த வினையே முகப்படாய் என்னும்* முகில்வண்ணா தகுவதோ? என்னும்* முன் செய்து இவ் உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய்* என்கொலோ முடிகின்றது இவட்கே? (2)
|
திருவாய் மொழி
|
7
|
2
|
3
|
3466 வட்கு இலள் இறையும் மணிவண்ணா என்னும்* வானமே நோக்கும் மையாக்கும்* உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட * ஒருவனே என்னும் உள் உருகும் ** கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய்* காகுத்தா கண்ணனே என்னும்* திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்!* இவள்திறத்து என் செய்திட்டாயே? (3)
|
திருவாய் மொழி
|
7
|
2
|
4
|
3467 இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும்* எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும்* கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்* கடல்வண்ணா கடியைகாண் என்னும் ** வட்ட வாய் நேமி வலங்கையா என்னும்* வந்திடாய் என்று என்றே மயங்கும்* சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய்* இவள்திறத்து என் சிந்தித்தாயே? (4)
|
திருவாய் மொழி
|
7
|
2
|
5
|
3468 சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்* திருவரங்கத்துள்ளாய்! என்னும் வந்திக்கும்* ஆங்கே மழைக்கண் நீர் மல்க* வந்திடாய் என்று என்றே மயங்கும் ** அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே* அலை கடல் கடைந்த ஆர் அமுதே* சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த* தையலை மையல் செய்தானே (5)
|
திருவாய் மொழி
|
7
|
2
|
6
|
3469 மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும்* மா மாயனே என்னும்* செய்ய வாய் மணியே என்னும்* தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும் ** வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும்* விண்ணோர் முதல் என்னும்;* பை கொள் பாம்பு அணையாய் இவள்திறத்து அருளாய்* பாவியேன் செயற்பாலதுவே (6)
|
திருவாய் மொழி
|
7
|
2
|
7
|
3470 பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்* பற்றிலார் பற்ற நின்றானே* கால சக்கரத்தாய் கடல் இடம் கொண்ட * கடல்வண்ணா கண்ணனே என்னும் ** சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும்* என் தீர்த்தனே என்னும்* கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்* என்னுடைக் கோமளக் கொழுந்தே (7)
|
திருவாய் மொழி
|
7
|
2
|
8
|
3471 கொழுந்து வானவர்கட்கு என்னும்* குன்று ஏந்தி கோ நிரை காத்தவன் என்னும்* அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்* அஞ்சன வண்ணனே என்னும் ** எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்* எங்ஙனே நோக்குகேன்? என்னும் * செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்* என் செய்கேன் என் திருமகட்கே? (8)
|
திருவாய் மொழி
|
7
|
2
|
9
|
3472 என் திருமகள் சேர் மார்வனே என்னும் * என்னுடை ஆவியே என்னும் * நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட * நிலமகள் கேள்வனே என்னும் ** அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட * ஆய்மகள் அன்பனே என்னும் * தென் திருவரங்கம் கோயில் கொண்டானே * தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே (9)
|
திருவாய் மொழி
|
7
|
2
|
10
|
3473 முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும்* மூவுலகு ஆளியே என்னும்* கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும்* நான்முகக் கடவுளே என்னும் ** வடிவு உடை வானோர் தலைவனே என்னும்* வண் திருவரங்கனே என்னும் * அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள்* முகில்வண்ணன் அடியே (10)
|
திருவாய் மொழி
|
7
|
2
|
11
|
3474 ## முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்* மொய் புனல் பொருநல்* துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன்* வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் ** முகில்வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை* ஆயிரத்து இப் பத்தும் வல்லார்* முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே (11)
|
இராமாநுச நூற்றந்தாதி
|
1
|
1
|
2
|
3894 ## கள் ஆர் பொழில் தென் அரங்கன்* கமலப் பதங்கள் நெஞ்சில் கொள்ளா* மனிசரை நீங்கி ** குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் இராமாநுசன்* மிக்க சீலம் அல்லால் உள்ளாது என் நெஞ்சு* ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே (2)
|
இராமாநுச நூற்றந்தாதி
|
1
|
1
|
16
|
3908 தாழ்வு ஒன்று இல்லா மறை தாழ்ந்து* தலம் முழுதும் கலியே ஆள்கின்ற நாள் வந்து* அளித்தவன் காண்மின் ** அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்* வாழ்கின்ற வள்ளல்* இராமாநுசன் என்னும் மா முனியே (16)
|
இராமாநுச நூற்றந்தாதி
|
1
|
1
|
35
|
3927 நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே* சில மானிடத்தைப் புயலே எனக் கவி போற்றி செய்யேன் ** பொன் அரங்கம் என்னில் மயலே பெருகும் இராமாநுசன்* மன்னு மா மலர்த்தாள் அயரேன்* அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே? (35)
|
இராமாநுச நூற்றந்தாதி
|
1
|
1
|
42
|
3934 ஆயிழையார் கொங்கை தங்கும்* அக் காதல் அளற்று அழுந்தி மாயும் என் ஆவியை* வந்து எடுத்தான் இன்று ** மா மலராள் நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன்* அரங்கன் என்னும் தூயவன்* தீது இல் இராமாநுசன் தொல் அருள் சுரந்தே (42)
|
இராமாநுச நூற்றந்தாதி
|
1
|
1
|
47
|
3939 இறைஞ்சப் படும் பரன் ஈசன் அரங்கன் என்று* இவ் உலகத்து அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் **என் அருவினையின் திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தையுள்ளே நிறைந்து ஒப்பு அற இருந்தான்* எனக்கு ஆரும் நிகர் இல்லையே (47)
|
இராமாநுச நூற்றந்தாதி
|
1
|
1
|
49
|
3941 ஆனது செம்மை அறநெறி* பொய்ம்மை அறு சமயம் போனது பொன்றி* இறந்தது வெம் கலி ** பூங் கமலத் தேன் நதி பாய் வயல் தென் அரங்கன் கழல் சென்னி வைத்துத்* தான் அதில் மன்னும்* இராமாநுசன் இத் தலத்து உதித்தே (49)
|
இராமாநுச நூற்றந்தாதி
|
1
|
1
|
55
|
3947 கண்டவர் சிந்தை கவரும்* கடி பொழில் தென் அரங்கன்* தொண்டர் குலாவும் இராமாநுசனை ** தொகை இறந்த பண் தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்* கொண்டலை மேவித்தொழும்* குடி ஆம் எங்கள் கோக்குடியே (55)
|
இராமாநுச நூற்றந்தாதி
|
1
|
1
|
57
|
3949 மற்று ஒரு பேறு மதியாது* அரங்கன் மலர் அடிக்கு ஆள் உற்றவரே* தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமனை ** நல் தவர் போற்றும் இராமாநுசனை* இந் நானிலத்தே பெற்றனன்* பெற்றபின் மற்று அறியேன் ஒரு பேதைமையே (57)
|
இராமாநுச நூற்றந்தாதி
|
1
|
1
|
69
|
3961 சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து* முன் நாள் அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு ** அவை என் தனக்கு அன்று அருளால் தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன்* தான் அது தந்து எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே (69)
|
இராமாநுச நூற்றந்தாதி
|
1
|
1
|
75
|
3967 செய்த்தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும்* திரு அரங்கர் கைத்தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி ** நம் கண்முகப்பே மொய்த்து அலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும்* நின் புகழே மொய்த்து அலைக்கும் வந்து* இராமாநுச என்னை முற்றும் நின்றே (75)
|
இராமாநுச நூற்றந்தாதி
|
1
|
1
|
81
|
3973 சோர்வு இன்றி உன் தன் துணை அடிக்கீழ்த்* தொண்டுபட்டவர்பால் சார்வு இன்றி நின்ற எனக்கு ** அரங்கன் செய்ய தாள் இணைகள் பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச* இனி உன் சீர் ஒன்றிய கருணைக்கு* இல்லை மாறு தெரிவுறிலே (81)
|
இராமாநுச நூற்றந்தாதி
|
1
|
1
|
91
|
3983 மருள் சுரந்து ஆகமவாதியர் கூறும்* அவப் பொருள் ஆம் இருள் சுரந்து எய்த்த* உலகு இருள் நீங்கத் ** தன் ஈண்டிய சீர் அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன்* அரங்கன் என்னும் பொருள் சுரந்தான்* எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே (91)
|
இராமாநுச நூற்றந்தாதி
|
1
|
1
|
108
|
4000 ## அம் கயல் பாய் வயல் தென் அரங்கன்* அணி ஆகம் மன்னும் பங்கய மா மலர்ப்* பாவையைப் போற்றுதும் ** பத்தி எல்லாம் * பொங்கிய கீர்த்தி* இராமாநுசன் அடிப் பூ மன்னவே (108)
|