போச்சுடா! விக்ரம் ஸ்வாமி தயிர் கடையர மன நிலையில் இருக்கார்!
(தயிர் கடையும் பொழுது ஒருவர் ஒருபுறம் மத்தை திருப்ப மற்றொருவர் எதிர் திசையில் திருப்புவார்; அவர் எதிர்க்கிறார் என்பதால் அல்ல; அப்படி மாற்றி மாற்றி எதிரும் புதிருமாக திருப்பினால்தான் வெண்ணை நங்கு திரண்டு வரும். அதுபோல் தான் விக்ரம் ஸ்வாமியும் சுவையான விஷயங்களை வெளிகொணர வேண்டுமென்றே தன் நிலையை எதிர் புறம் வைப்பார்!)
பசித்தால் சாப்பிட வேண்டும்; இல்லை என்றால் மனது பசி எண்ணத்திலேயே சிக்கியிருக்கும். அதனால் கண்டிப்பாக நேர ஒழுக்கத்துடன், கால ஒழுக்கத்துடன், கடமை ஒழுக்கத்துடன், இட ஒழுக்கத்துடன், சரியான உணவு வகைகளை உட்கொண்டு, உண்ட மயக்கம் வந்தால் அதையும் முறையே தீர்த்து, எஞ்சிய நேரத்தை பகவானிடம் செலுத்த வேண்டும். இதுவே நம் நிலை; நாம் இதையே முறையாக செய்துவந்தால் போதுமானது. மெல்ல மெல்ல உயர் நிலை பக்தி அடையும் காலத்தில் அப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று பார்த்துக்கொள்ளலாம்.
ஆனால் கூடத்தாழ்வார் போன்றோர் பக்தி மிக மிக உயர்ந்த நிலை. அவர்கள் நிலை செவிக்கும் சிந்தைக்கும் ரங்கனை பற்றி உணவு இல்லை என்ற போது சற்று வயிற்றுக்கும் ஈயப்படும்! அந்த உணவும் ரங்கனின் ப்ரசாதம் என்பதால் முக்கியப்படுகிறது. தன் உடலை பேனுவது தன் கடமை அல்ல; ஆச்சார்யனின் திருமேனி பேனுவதுதான் தன் கடமை என்று முழுதும் உணர்ந்ததால் அவரால் தன் கண்களை கூட துறக்க முடிந்தது.
அவரை போன்றோரர் மன ஓட்டத்தை நம் மன நிலையிலிருந்து காண்பது சரியல்ல; நம் வாழ்வை அவர்தம் செயல்களை அடிகோலாக கொண்டு ஆராய்வதும் நல்லதல்ல.
ஒரு சாதாரண உதாரணம்: பள்ளியிலோ கல்லூரியிலோ நாம் ஒரு கணக்கை எப்படி செய்வது என்று கற்று ஒரு சில முறை பயிற்சி செய்த பின்பே தேர்வில் அதை சரியாக செய்ய முடியும். ஆனால் கணித மேதை ராமாநுஜம் அவர்கள் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத குழப்பமான கணித புதிர்களை மிக சாதாரணமாக செய்திருக்கிறார்!
வெறும் கணக்கே இப்படி என்றால் பக்தி எவ்வளவும் பெரிது!
ஆனால் நாம் பக்தியில் சிங்கமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை; சிங்கத்தின் காலில் ஒட்டியிருக்கும் ஒரு புழுவாக இருந்தால் போதும்! அதனால் நாம் கூரத்தாழ்வான் போன்று இருக்க அவசியம் இல்லை; அவர் காலடியை பற்றியிருப்போர் காலடியை நாம் பற்றியிருந்தால் போதுமானது.
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்.