இப்போது நாம் இந்திரிய தாகக்தை போக்கும் முயற்சியில் ஐந்து வகை போதை தரும் திரவங்களை பருகிவருகிறோம். போதையின் காரணமாக இவை நம் தாகத்தை தனிப்பதாக நினைத்து கொண்டிருக்கிறோம். உண்மையில் இவை நம்மை dehydrate தான் செய்கின்றன; அதையும் உணராமல் இருக்கிறோம்.
ஆனால் கருணை கொண்ட ஆச்சார்ய புருஷர்கள் நம் போதையை தெளிய படுத்தும் முயற்சியில் நமக்கு பாகவத அமுதை ஊற்றி அதன் சுவை அறிய செய்கின்றனர். ஒருமுறையேனும் இந்த அமுதை சுவைத்தால் போதும் மெல்ல மெல்ல இந்த அமுதுக்கு அடிமையாகி அதற்கு தாகம் ஏற்பட்டு, இந்திரிய போதையை விட்டொழிப்போம்.
இந்த அமுது மிகவும் வலிமை வாய்ந்தது. கோடான கோடி ஜன்மங்களாக பழகிய போதையை ஒரே பிறவியில் விட்டொழிக்க வல்லது. அதற்கும் நாம் சரி படவில்லை என்றால், கலியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க இந்த மாறுதல் தன்னாக நடைபெறும்!
விக்ரம் ஸ்வாமி! உமக்கு தாகம் இல்லாமலா மீண்டும் மீண்டும் நம் ஸ்வாமியை சுற்றி சுற்றி வருகிறீர்? நீர் இந்த அமுதின் சுவை கண்டதால்தானே மீண்டும் மீண்டும் சுவைக்க வருகிறீர்?
பழய போதை முழுவதும் தெளியாமல் இருக்கலாம்; அதன் வாசனை தொடர்வது போல் தெரியலாம். ஆனால் இந்த பிறவையிலேயே தாங்கள் முழுவதும் குணமடைவது நிச்சயம்.