உண்மையிலேயே முதலிடம் வேளுக்குடிக்கு என்றால் அடுத்து காப்பி பொடி வரவே வராதே! அவர்கள் எதோ எதுகை மோனைக்காக நம் ஸ்வாமியின் பெயரைச் சொல்லி கொஞ்சம் விளம்பரம் தேடுகிறார்கள்! போனால் போகட்டும்.
இந்த ஒரு காரணத்திற்காக நாம் இவர்களுக்கு தனி அங்கீகாரம் ஏதும் தர வேண்டாம். இதே குழுவினர் வேறு ஒரு மேடையில் வேறு ஒரு ஆசாமியை புகழ்ந்து பேசினர். அந்த ஆசாமி இராமாநுஜ தர்ஷணத்துக்கு புறம்பானவர்! மேலும் இவர்கள் ஒரு நடிகனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவர். ஆனால் அந்த நடிகனோ கடைந்தெடுத்த நாத்திகன்; அபத்தத்தின் அகராதி. (அந்த நடிகன் இந்த பிறவியில் செய்த ஒரு நல்ல விஷயம், ஒரு திரைப்பட காட்சியில் “அடியேன் ராமாநுஜ தாசன்” என்று உரக்க கத்துவான். அக்கூவல் ஒன்று மட்டுமே அந்நபரை ரக்ஷிக்க கூடும்!).
இது போன்றவர் புகழ்ச்சியால் நம் ஸ்வாமியில் புகழ் ஒன்றும் கூடபோவதில்லை. அவர்தம் என்றென்றும் ஓங்கி வளர்ந்து கொண்டே போகும் புகழ்லால் இவர்களும் சற்று லாபம் பெற பார்கின்றனர். போனால் போகட்டும்.