Dear Ramanujadasan swamy, namaskaram. Thank you so very much for reminding me to keep up my word. Very kind of you.
Actually, it will take some ‘homework’ on my part to recollect, verify and type the relevant slokas. For now please let me share only one example from 12th chapt.er, please
In the beginning of 12th chapter Arjuna asks:
ஏவம் ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பர்யுபாஸதே
யே சாப்யக்ஷரம் அவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா 12.1
கிருஷ்ண! உம்மை அடைய விரும்புகிறவர்களில், உம்மிடம் பக்தி செய்பவர்கள் மேம்பட்டவர்களா அல்லது (நீர் முதல் ஷட்கத்தில் சொன்ன) புலன்களை விஷயங்களில் செல்லாமல் அடக்கி ஜீவாத்ம சிந்தனம் செய்து, ஆத்ம ஸாக்ஷாத்காரம் பெற்று பிறகு உம்மை அடைபவர்கள் சிறந்தவர்களா? இவ்விரு உபாயங்களில் எது சிறந்தது? என்று அர்ஜினன் வினவினான்.
Perumal replies:
மய்யாவேச்யமநோ யே மாம் நித்ய யுக்தா உபாஸதே
ச்ரத்தயா பரயோபேதா தே மே யுக்ததமா மதா: 12.2
அர்ஜுன! எவர் என்னிடம் அளவில்லா அன்பைச் செய்து தங்கள் மனத்தை என்னிடமே வைத்து, என்னை அடைய வேண்டும் என்று ஊக்கத்துடன் என்னை உபாசிக்கிறார்களோ, அதாவது பக்தி செய்கிறார்களோ, ஆவர்களே சிறந்தவர் என்பது எனது கருத்து என்கிறார் கண்ணன்.
Thank you very much.
adiyen dasan.