ஜயராம் ஸ்வாமி, நமஸ்காரம்.
I would like to reiterate the following: “But even if we seem to be in satvam, we can not knowlingly risk ourself with such contamianted input. பகவத் கீதை 14.10 யில், “ஸத்வ குணம், சில சமயங்களில் ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் தோற்கடித்து மேலோங்குகின்றது. சில சமயங்களில் ரஜோ குணம் ஸத்வ குணத்தையும் தமோ குணத்தையும் தோற்கடிக்கின்றது. மேலும் இதர சமயங்களில் தமோ குணம் ஸத்வ குணத்தையும் ரஜோ குணத்தையும் தோற்கடிக்கின்றது. இவ்வாறு உயர் நிலைக்கான போட்டி எப்போதும் நிலவிகின்றது” என்று சொல்லபட்டுள்ளது. So, we never know when we as hearer will be shifted away from satvam position to rajo-tamo-gunam position. In that case we will be affected immediately! So, it is safer to avoid such cricumstances. “
ஹம்ச பறவை, பால்-நீர் கலவையிலிருந்து பாலை மட்டும் பிரித்து பருகும் தன்மை உடையதாம். அதுபோல, பரமஹம்சர்களும் முக்குண கலவையிலிருந்து சத்வத்தை மட்டும் நுகரும் தன்மையுடையவராம்.
அடியேன் பரமஹம்சன் அல்லன். அதனால் ரஜோ-தமோ குணங்கள் கலந்த விஷயங்களை முடிந்தவரை தவிர்க்க எச்சரிக்கையாக இருக்க பழகிவருகிறேன். நடைமுறை வாழ்க்கையில், எச்சரிக்கையை மீறி சில பல விஷயங்கள் அடியேனை வந்தடைவதுண்டு; ஆச்சார்யன் அநுகிரகத்தால், அவற்றிலிருந்து சத்வ சாரத்தை மட்டும் நுகர பழகி வருகிறேன். அதே சமயம், “நம்மால்தான் சத்வத்தை மட்டும் பிரிக்க முடிகிறதே” என்ற எண்ணத்தில் எச்சரிக்கையை தளர்த்த விரும்பவில்லை. உதாரணாமாக, ஜனரஞ்சக பாடல்களை தேடிப்போய் விரும்பி கேட்பதில்லை. எச்சரிக்கையை தளர்த்திய தருணஙகளில் அடியேன் ரஜோ-தமோ குணங்களுக்கு வெகு சுலபமாக ஆளாவதை பல முறை உணர்ந்திருக்கிறேன்.
By regular spiritual engagements, and regular hearing of upanyaasams, I may be ‘vaccinated’ against the infection of rajo-tamo gunam. But nevertheless, I will continue to lead a cautious life to avoid such infections. Despite my caution if I do get an infection, my immunity by spiritual practices will protect me from the infection of rajo-tamo gunam. But taking strength of my immunity if I callously expose myself to infection sources, it is only a matter of time before I fall victim to the infection of rajo-tamo gunam; or, the infection is already having its effect on me but I am not aware of it.
In the history / scriptures (also in contemporary world), there are so many examples of exalted individuals who suddenly fell victim to the forces of rajo-tamo gunam due the circumstances. That is the nature of this world. I pray I do not want to add myself to the list of such examples.
Moreover, when I am blessed with, gifted with so many pure sources of knowledge, information, music etc, why do I have to go for the contamianted ones? கனி இருப்ப காய் கவர்ந்தற்று!
adiyen dasan.
விக்ரம் ஸ்வாமி, நமஸ்காரம்.
“இசையில் லயிப்பது ரஜோ குணமா? “
ஏவ்வாறு லயிக்கிறோம் என்பதன் அடிப்படையிலேயே நிர்ணயிக்க முடியும்.
சத்வ குணம் – ஞானம் மற்றும் மகிழ்ச்சி ஏற்படுத்துவது
ரஜோ குணம் – வேட்கை மற்றும் இந்திரிய அனுபவங்களை ஏற்படுத்துவது. பற்றை தூண்டும்
தமோ குணம் – அஞானம் மேலோங்கும்; மோகம், வெறுப்பு, வெறித்தனம், அழிவை ஏற்படுத்த கூடிய எண்ணங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும்.
சுத்த சத்வ நிலை கண்ணனில் நினைவில், அவனிடத்தில் கொண்ட பக்தியில், அவன் விறுப்பங்களில், அவனுக்கு ஆற்ற வேண்டிய கைங்கர்யங்களில், அவனது புகழில் மனதை ஈற்கும்.
பெரும்பாலும் நாம் முக்குணங்களின் கலவையைதான் அனுபவிக்கிறோம்; அதில் சற்றே பக்தியும் உள்ளது எண்பதே பெரிய விஷயம்!