Srimath Varavara munaye namaha
Recently one of my relative who is a tenkalai got bharanyasam. After this incident, I have the following doubts. I request bhagavatas in this forum to clear🙏
1) சரணாகதி என்பது ஒரு விஷயத்திற்கு ஒரு முறை தானே செய்ய வேண்டும். ராமாநுஜர் ஏற்கெனவே தன் திருவடி சம்பந்திகளுக்காக சரணாகதி செய்து விட்டார். இப்போது நாம் புதிதாக சரணாகதி செய்தால், நாம் இரண்டு முறை செய்ததாக ஆகி விடாதா ?
2)ராமாநுஜர் நமக்காக சரணாகதி செய்தார். அதை இறைவனும் ஏற்று கொண்டு அனுக்கிரஹித்தார் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். இப்போது நாம் புதிதாக நமக்கென்று பரண்யாஸம் செய்து கொண்டால், ராமாநுஜர் நமக்காக செய்த சரணாகதியில் நமக்கு நம்பிக்கை இல்லாததனால் தான் நாம் செய்கிறோம் என்று ஆகாதா ?
அடியேன் ஏதாவது தவறாக கூறியிருந்தால் கருணையின் வடிவான பாகவதர்கள் அடியேனை மன்னிக்கவும் 🙏
அடியேன் வரவரமுனி ப்ருத்ய தாஸன் 🙏